கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, March 29, 2016

பள்ளிகளில் பராமரிக்கபடும் பதிவேடுகள்

1.சேர்க்கை -நீக்கல் பதிவேடு

2.மாணவர் வருகை பதிவேடு

3.ஆசிரியர் ஊதிய பதிவேடு

4.விடுப்பு பதிவேடு

5. ஆசிரியர் வருகை பதிவேடு

6. மாணவர் உதவித்தொகை பதிவேடு

7.நன்கொடை பொருள் பதிவேடு

8.ஆய்வுப் பதிவேடு

9.பார்வையாளர் பதிவேடு

10. நூலகப் பதிவடு

11.அறிவியல் உபகரண பதிவேடு 

12. விளையாட்டுப் பொருள் பதிவேடு

13.கணக்கு புத்தகம் ( cash book )

14.Record sheet பதிவேடு

15. Scale பதிவேடு

Monday, March 28, 2016

விளக்கம்

1.I.O.E               :Life Orineted education

2.S.C.E.R.T       :State Council of Educational Research and Training

3.M.L.L              : Minimum Level of Learning

4.D.E.E               : Directorate of Elementary Education

5. D.C.R.C          :Death-cum- Retirement - Gratuity

6.D.T.E              :Director of Technical Education

7.N.C.E.R.T       :National Council for Education Research and Traning

8.N.S.S              :National Service Scheme

9.D.G.E             : Directorate of Government Examinations

10.W.H.O           :World Health Organisation

Sunday, March 27, 2016

ஓய்வூதிய கருத்துடன் அனுப்பும் ஆவணம்

1. ஓய்வூதியம் கோரும் ஆசிரியர் கடிதம்

2. பூர்த்தி செய்த ஓய்வூதிய படிவம்

3. ஆசிரியரின் கல்விச் சான்று

4.விடுப்பு விவரப் பட்டியல்

5. பணிப் பதிவேடு

6. பணிக்கால இடைமுறிவு அல்லது குறைவு இருப்பின் அதை condone செய்து அதற்கான ஆணை

7. விண்ணப்பதாரர் கையொப்பம் 

8.மனைவியுடன் போட்டோ கையெழுத்துடன்

9.அங்க அடையளம் கையெழுத்துடன்

10. ஓய்வூதியம் கணக்கிடும் பட்டியல்

11. பூர்த்தி செய்யப்பட்ட ஓய்வூதிய படிவ எண் 7

12. குடும்ப உறுப்பினர்கள் பட்டியல்

Saturday, March 26, 2016

ஆசிரியருக்கான தகுதியான விடுப்புகள்

தகுதிகான் பருவம் முடித்த ஆசிரியர் இந்த விடுப்பை அனுபவிக்கலாம்

1. ஈட்டிய விடுப்பு

2. மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு

3.சொந்தக் காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு

4.தற்செயல் விடுப்பு

5. சிறப்பு தற்செயல் விடுப்பு

6.பண்டிகை விடுப்பு

7. ஈடு செய் விடுப்பு

குறிப்பு:
               தகுதிகாண் முடிக்காத ஆசிரியர் மருத்துவ சான்று பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் சொந்த காரண ஈட்டா விடுப்பு ஆகியன அனுபவிக்க தகுதி இல்லை

Thursday, March 24, 2016

ஆசிரியர்களு்கான துறைத்தேர்வுகள்

இடைநிலைஆசிரியர்களுக்கு  

1. 004 - Deputy Inspectors Test-First Paper (Relating to Secondary and Special Schools) (without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper (Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s Test Educational Statistics (With Books). 4 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test for Executive Officers (With Books). 5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books).
பட்டதாரி ஆசிரியர்களுக்கு    

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test for Executive Officers (With Books). 
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books).

முதுகலை ஆசிரியர்களுக்கு

1 . 176 - Account Test for Subordinate Officers - Part I . (or) 114 The Account Test for Executive Officers (With Books). 
2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test (Previously the District Office Manual--Two Parts) (With Books).

Wednesday, March 23, 2016

அகம் மகிழ அகவிலை ! மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்

மத்திய அரசு உழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6-வது ஊதியக் குழு பரிந் துரையில், அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக் கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. கடந்த 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண் 6.73 சதவீதமாக உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் இணைந்த அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படக்கூடும்.இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங் கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். நன்றி

Sunday, March 20, 2016

எட்டில் ஓர் வாழ்க்கை

ஓரெட்டில் ஓடியாடி விளையாடு

ஈரெட்டில் ஈடில்லா கல்வி பெறு

மூவெட்டில் மூன்று முடிச்சை போடு

நாலெட்டில் நன்மக்களை பெறு

ஐயெட்டில் அயராது உழை

ஆறெட்டில் அனைத்து செல்வமும் பெறு

ஏழெட்டில் எட்டு திசையும் சுற்று

எட்டெட்டில் எப்போதும் ஓய்வெடு...

வண்டி ஓட்டவும் எட்டு தேவை
வாழ்க்கையை ஓட்டவும் எட்டு தேவை !!!!
நன்றி

Wednesday, March 16, 2016

கற்றலில் சிறக்க

புத்தகத்தில் உள்ளதை புத்தியில் ஏற்றாதே
புதுமையை நாளும்  உனக்குள் ஏற்று

கற்றலை திணிப்பதாக நினைத்தால் திணறும்
கற்றலை வற்புறுத்துவதாக நினைத்தால் வழி மாறும்
கற்றலை இனிமையாக நினைத்தால் இன்பமாக மாறும்

விருப்பத்தோடு எதையும் படி
விண்ணைத் தொடுவாய்
விளங்காமல் படித்தாய் என்றால் வீணாக போவாய்

முயற்சியும் பயிற்சியும் உனக்குள் இருந்தால்
முன்னேற்ற பாதையில் நீயும் இருப்பாய்
முடியாது என்று முடங்கி கிடந்தால் முட்டாள்கள்  வரிசையில் தான் நிற்பாய்

தானே சிந்திக்கும் மாணவனே
தலை சிறந்த மாணவன் என்பது முன்னோர் வாக்கு

அலசி படித்தால் அறிவில் நிற்கும் ஆராய்ந்து படித்தால் அறிவை மேலும் வளர்க்கும்.

நாளும் படி !
நன்றாக படி !
விரைவில் வெற்றி உன் மடி !!!!

நன்றி

Thursday, March 10, 2016

உழைப்பே உயர்வு

* செய்யும் தொழிலே தெய்வம் என்பது முன்னோர் வாக்கு.

* முகமலர்ச்சியுடன் செய்கிற தொழிலே நம்மை முடங்காமல் வைத்திருக்கும்

*சுமை தூக்குவதை கூட சுகமாக தூக்கிப் பார் நீயும் மற்றவருக்கு ஏணியாக இருப்பாய்.

* நாம் செய்யும் தொழிலில் ஆயிரம் தடைக் கற்கள் வந்து விழும் நம்மை சாதிக்க விடாமலிருக்க ! 

தடைக்கற்களை வாழ்க்கையின் படிக்கற்களாக மாற்ற நம்மால் தான் முடியும்.

*வீரியத்தோடு செய்யும் தொழில் வினையோடு தான் முடியும்
காரியத்தோடு செய்து பார்
காலமும் கை கூடிவரும்.

நன்றி

Wednesday, March 9, 2016

இறையன்பும் சிந்தனை வளமும்

இறையன்பு I.A.S அவர்கள் பல்வேறு சிந்தனைகளை நாம் வாழ்வில் முன்னேற வழங்கியுள்ளர்.
அவற்றில் சில :
* நாம் எதைக்கண்டு பயந்து ஓடுகிறோமோ அது நன்மை பயமுறுத்துகிறது.
* பயம் நம்முடைய சிந்தனையை மழுங்கடிக்கிறது.நம்முடைய ஆற்றலை குறைத்து விடுகிறது.
* தன்னை யார் புத்திசாலி இல்லை என நினைக்கிறனோ அவனே புத்திசாலியாக முடியும்
* வாழ்க்கை என்பது அடுத்தவரிடம் கற்றுக் கொள்வது.அவர்கள் அனுபவங்களிலிருந்து நம்மை உருவாக்கிக் கொள்வது.
*தொடர்ந்து மாணவனாக இருக்கச் சம்மதிப்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாகத் திகழ முடியும்
* உணராத ஆற்றலும் ஊறாத நீரும் தாகத்தைத் தணிக்க முடியாது.
* பலர் குறிக்கோளை வரையறுக்கிறார்கள்.ஆனால் சிலர் மட்டுமே அதில் உறுதியாக இருக்கிறார்கள்
* வலியைப் பொறுத்துக் கொள்ளாத மூங்கில் எப்படி  புல்லாங்குழல் ஆக முடியும்.
*சுகவாசிகள் இருக்கும் நாட்டில் விலைவாசியும் அதிகமாகத்தான் இருக்கும். 
தொகுப்பு :  டாக்டர். சுந்தர ஆவுடையப்பன் எழுதிய இறையன்புவின் சிந்தனை வானம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி. வாழ்க வளமுடன்

Monday, March 7, 2016

அபிஷேகமும் பலன்களும்

மாம்பழம்       - வெற்றி தரும்

இளநீர்          - நல்ல பதவி தரும்

 விபூதி          - நன்மை தரும்

 பன்னீர்      - சந்தோஷம் தரும்

 சந்தனம்     - மேலான பதவி தரும்

 பால்         - நீண்ட ஆயுளை தரும்

 நீர்         -மன அமைதியை தரும்

 தேன்     -நல்ல காரியத்தை தரும்

 வெல்லம் - குறைந்த துக்கத்தை    தரும்

வாழைப்பழம் - பயிர் விருத்தி தரும்


நன்றி

Saturday, March 5, 2016

பெண்களின் நன்மைக்கு

* பெண்கள் நெற்றியில் திலகம்               இல்லாமல் இருக்கக் கூடாது

*தலையை இரண்டு கைகளாலும்      சொறியக் கூடாது

*இரவில் வீட்டைப் பெருக்கக் கூடாது

* அன்னத்தையோ, உப்பையோ      கையால் பரிமாறக் கூடாது

*பூசணியை பெண்கள் திருஷ்டி    சுற்றி உடைக்கக் கூடாது

*கர்ப்பிணிகள் சிதறு தேங்காய்  உடைக்கக் கூடாது

*கர்ப்பிணிகள் கிரகண காலத்தில்        வீட்டை விட்டு வெளியே வருதல்            கூடாது

* சூரியன் உதிப்பதற்கு முன்பே வாசலை பெருக்கி கோலமிட வேண்டும்

நன்றி

Thursday, March 3, 2016

வெற்றியின் ரகசியம்

குறிக்கோள் ஒன்றை வகுத்து விடு
குறிக்கோளை நோக்கி உழைத்து விடு    
முடியாது, தெரியாது, நடக்காது எனும் வார்த்தையை விட்டு விடு
எதையும் துணிந்து முடிவு எடு
வெற்றி  எனும் ஏணியில் ஏறி விடு
கடவுளை தினமும் தொழுது விடு
செய்யும் கடமையை தினமும் செய்து விடு
கவலையை நீயும் விட்டு விடு

Tuesday, March 1, 2016

செய்ய கூடாதவை

செய்ய கூடாதவை.

இரவில் மரத்தின் அடியில் தூங்க கூடாது
இரவில் குப்பைகளை கொட்டக் கூடாது 
இரவில் துணி துவைக்க கூடாது 
பயண நேரத்தில் அதிகமாக படிக்க கூடாது 
பிறரின் செருப்பு ஆடைகளை அணியக் கூடாது 
மலம், சிறுநீர் ஆகியவற்றை 
அடக்க கூடாது
உணவு உண்ட பின் குளிக்க கூடாது காலையில் அதிகமாக தூங்க கூடாது 
இரவில் வெகுநேரம் கண் விழிக்க கூடாது

வாழ்க்கை படிக்கட்டு

வாழ்க்கை    ஒரு   சவால்                வருந்தாமல் சமாளி,   
                     
 வாழ்க்கை   ஒரு   பரிசு                   அதை பெற்றுக்கொள்,   
          
வாழ்க்கை ஒரு  சாகசம்             துணிந்து விளையாடு  

                
வாழ்க்கை ஒரு கடமை                      வாழ்ந்து முடி,   
                                     
வாழ்க்கை ஒரு புதிர்                           நாளும் அதை  படி,    
                   
வாழ்க்கை ஒரு போராட்டம்               தினமும் போராடு,        
 நன்றி