கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, October 31, 2016

கோபமும் தக்காளியும்- கதை

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.

எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர்.

அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.

ஒருவன் 'பத்து' என்றான்; அடுத்தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.

இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார்.

மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர். அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர்.

ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர். மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்,தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!

மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது. அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.

காஷ்மோரா - விமர்சனம்

திரை விமர்சனம்: காஷ்மோரா 

பேய், பில்லிசூனியம் போன்றவற்றை நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி).

அவரது ஏமாற்று வேலைகளுக்குக் குடும்பமும் கைகொடுக்கிறது. காவல்துறை ஆணையர் முதல், அரசியல் பெரும்புள்ளி வரை காஷ்மோராவை நம்பும் நேரத்தில், அவரும் அவரது குடும்பமும் ஏழு நூற்றாண்டுகள் பழமையான ஒரு பேயிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.

அந்தப் பேய் யார்? அதன் நோக்கம் என்ன? அதனிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் காஷ்மோரா.

நிகழ்காலம், கடந்த காலம் இரண்டையும் இணைத்துக் குழப்பம் இல்லாத திரைக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

முதல் பாதித் திரைக்கதையில் கூறியது கூறல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. கார்த்தி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது இரண்டாவது காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது.

அதன் பிறகும் கார்த்தி யின் மோசடி ஜாலங்களை விரிவுபடுத்திக் கொண்டே போவது தேவையற்றது. இருப்பினும் அரசியல்வாதி தனக் கோடி (சரத் லோகிதாஸ்வா), அவர் கண்மூடித் தனமாக நம்பும் சீனியர் போலிச் சாமியார் திருக்கோடி (மதுசூதனன்), அவரது கைத்தடிகள் ஆகியோர் காஷ்மோரா ஆடும் ஆட்டத்தில் கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித் ததுபோல் அல்லாடும் காட்சிகள் சிரிப் புக்கு உத்தரவாதம்.

நகைச்சுவையைக் கதையோட்டத்தில் இயல்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்கு நர். காட்சிகள், கதாபாத்திரங்களை வடி வமைத்த விதமும் பாராட்டத்தக்கவை.

நயன்தாராவின் பாத்திரமும் 700 ஆண்டு களுக்கு முந்தைய காட்சிகளும் பேய் வீட் டில் மாட்டிக்கொண்டு கார்த்தி குடும்பம் படும் அவஸ்தையும் நன்றாக உள்ளன.

பேய் வீட்டுக்குள் கார்த்தி மாட்டிக்கொள் ளும் காட்சியில் காட்சியமைப்பும் கார்த்தி யின் நடிப்பும் அருமை. அதே வீட்டில் ஏற்கனெவே மாட்டிக்கொண்டிருந்த முரு கானந்தமும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

ஆவி, பேய் ஓட்டுவதாகச் சொல்லும் ஆசாமிகள் அதை எப்படி வணிகமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை முதல் பாதியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்கப் பேய்களின் ஆதிக்கமாக இருக்கிறது. பேய்கள் இருப்பது நிஜம் என்று (மூட நம்பிக்கையை) வலியுறுத்தி னால், பேய் ஓட்டும் (மோசடி) ஆசாமி களும் இருக்கத்தானே செய்வார்கள்?

போர்க்களக் காட்சிகளில் காட்சி யமைப்பு கவரும் அளவுக்குச் சண்டை அமைக்கப்பட்ட விதம் கவரவில்லை. தளபதி கார்த்தி போடும் சண்டைகள் மாயா ஜாலம்போல உள்ளன. நயன்தாராவின் நடனக் காட்சி சிறப்பாக உள்ளது.

கார்த்திக்கு இரண்டு வேடங்கள். மூன்று பரிமாணங்கள். கிரந்த தேசத்தின் தளபதி ராஜ்நாயக், அவனது ஆவி, பேயோட்டி காஷ்மோரா ஆகிய மூன்று தோற்றங்களும் நன்றாகவே பொருந்தி யிருக்கின்றன.

மொட்டைத் தலையில் வல்லூறு உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டு வரும் தோற்றத்திலேயே அசத்து கிறார். கருந்தாடியை கர்வமாகத் தடவிக் கொண்டு, வீரத்தையும் பெண்ணாசையை யும் வெளிப்படுத்தும் நடிப்பில் ஈர்க்கிறார். காஷ்மோரா பாத்திரத்தில் வழக்கமான ‘கலகல’ கார்த்தியாகக் கவர்கிறார்.

நயன்தாராவுக்குத் தரப்பட்டிருக்கும் இடம் குறைவு. ஆனால் அவர் வரும் எல்லாக் காட்சிகளும் கம்பீரம் கலந்த வசீகரம். குட்டியூண்டு பாத்திரத்தில் வரும் திவ்யா தன் கடமையைச் செவ்வனே ஆற்றுகிறார்.

நெடுநாட்களுக்குப் பிறகு விவேக் காமெடியில் முத்திரை பதிக்கிறார். ஆங்கோர்வாட் கோவிலும், கிரந்த தேச அரண்மனை செட்டும், ரத்னமாலாவின் அந்தப்புர அரண்மனை செட்டும், கிராஃபிக் ஸில் உருவாக்கப்பட்டுள்ள செட்களும் காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு உதவி யிருக்கின்றன.

பல காட்சிகளில் சிறப்பாக இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், பேய் மரம் நடந்துவருவது போன்ற சில இடங்களில் பலவீனமாக இருக்கிறது. கடந்த காலக் கதாபாத்திரங்கள் மீது நம்பகத் தன்மையை உருவாக்குவதில் கலை இயக்கம் (ராஜீவன்), ஆடைகள் வடிவமைப்பு (நிஹார் தவான், அனுவர்த் தன், பெருமாள் செல்வம்) ஆகியவற்றுக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு வசனங்களுக்கும் (கோகுல், ஜான் மகேந்திரன், ஆர்.முருகேசன்) பங்கிருக்கிறது.

“ராஜ் நாயக் இருக்கும் இடத்தில் வாளையும் வார்த்தைகளையும் பார்த்து வீச வேண்டும்”, ‘பிணமேடையின் மீது மணமேடை அமைத்த மயக்கத்தில் இருந்தவனே..’ போன்ற வசனங்கள் காட்சிக்கு வலிமை சேர்த்து மனதில் தங்கிவிடுகின்றன.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்ளரங் கக் காட்சிகளை எடுத்துக்காட்டிய விதத்தில், ஒளியமைப்பு, கேமரா நகர்வுகள் ஆகியவற்றில் பிரம்மாண்டத்தை நிலைநிறுத்தியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைக்கிறது. கல்பனா ரவீந்தரின் குரலில் ஒலிக்கும் ‘ஓயா ஓயா’ பாடல் ரத்னமாலா கதாபாத்திரத்தின் வலியையும் சதியையும் நமக்குக் கடத்திவிடுகிறது. போர்க்களப் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது. முன்பாதியின் வேகத்துக்கு முழுசாக ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும்... நகைச்சுவை, பிரம்மாண்டம், முன்னணி நட்சத்திரங்கள் ஆகிய அம்சங்களோடு, கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்து தருவதில் சொல்லத்தக்க அளவு வெற்றி பெற்றிருக்கிறது காஷ்மோரா படக் குழு.

கொடி - விமர்சனம்

திரைவிமர்சனம்: கொடி

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்தனர்.

தனுஷ் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும், ‘ப்ரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அறிமுகமாகும் படம் என்பதும் கூடுதல் ஆவலை உருவாக்கியிருந்தன.

கொடி (தனுஷ்) பிறக்கும்போதே அரசியல் அவனுடைய வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது. அவனுடைய அப்பா (கருணாஸ்) தான் வாய் பேச முடியாததால் அரசியலில் சாதிக்க முடியாததை தன் மகன் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஊரில் மெர்குரி கழிவுகளைக் கொட்டி வைத்திருக்கும் ஒரு தொழிற்சாலையை அகற்றக் கோரி கட்சி நடத்தும் போராட்டத்தில் தீக்குளித்து இறந்து விடுகிறார்.

அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்றபடி, கொடி தீவிர அரசியல் வாதியாகிறான். இரட்டைச் சகோதரர்களில் இன்னொருவனான அன்பு (தனுஷ்) கல்லூரிப் பேராசிரியர். இவன் பயந்த சுபாவம் உடையவன்.

கொடியைப் போலவே சிறு வயதிலிருந்தே அரசியலில் இருக்கிறார் ருத்ரா (த்ரிஷா). இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருந்தாலும் காதலிக்கிறார் கள். தம்பி அன்பு, முட்டை வியாபாரம் செய்யும் மாலதியைக் (அனுபமா) காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில், சட்ட மன்ற இடைத்தேர்தலில் கொடியும், ருத்ராவும் எதிரெதிர் அணிகளில் நிற்கவேண்டிய சூழல் உருவாகிறது. இதற்கிடையில் ஊரில் மூடப்பட்ட தொழிற்சாலை குறித்த சர்ச்சையும் பெரிதாகிறது.

அரசியல் வெற்றியா, காதலா என்று வரும்போது யார் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? இந்த அரசியல் விளையாட்டில் எதிர்பாராமல் நுழையும் அன்பு என்னவாகிறான் என்பதுதான் ‘கொடி’.

இயக்குநர், கொடி கதாபாத்திரத் துக்குக் கொடுத்திருக்கும் தெளிவான பின்னணியை மற்ற கதாபாத்திரங் களுக்குக் கொடுக்கத் தவறியிருக்கிறார். குறிப்பாக, கொடி கதாபாத்திரத் துக்கு இணையான வலிமையுடைய ருத்ராவின் கதாபாத்திரம் அந்த அள வுக்குத் தெளிவாக எழுதப்படவில்லை.

ருத்ராவுக்கு அரசியல் ஆர்வம் வருவதற்கான பின்னணி சரியாக நிறுவப் படவில்லை. ருத்ராவின் போக்கில் ஏற்படும் அதிர்ச்சிகரமான மாற்றமும் நம்பும் விதத்தில் காட்டப்படவில்லை.

இரட்டை வேடத்துக்கு தனுஷ் தன் நடிப்பால் முழு நியாயம் செய்திருக் கிறார். கொடி கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு செறிவாக உள்ளது. கனமான பாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷா சில இடங்களில் சமாளிக்கிறார். சில இடங்களில் தடுமாறுகிறார்.

அவர் அரசியல் மேடைகளில் பேசும் காட்சிகள் மேலோட்டமாகக் கடந்து சென்றுவிடுகின்றன. மாலதியாக அனுபமா கொஞ்சம் நேரம் வந்தா லும் துறுதுறு நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா, காளி வெங்கட் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயண் இசையில் ‘ஏ சுழலி’, ‘சிறுக்கி வாசம்’ பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. வெங்க டேஷின் கேமராவும், பிரகாஷின் படத் தொகுப்பும் படத்தில் அந்த அளவுக்கு எடுபடவில்லை. திரைக்கதை வழக்கமான பாணி யிலேயே நகர்கிறது.

பலசாலி அண்ணன், பயந்தாங்கொள்ளி தம்பி, பழிவாங்கும் படலம் என எல்லாமே எதிர்பார்க்கும்படியே நகர்கின்றன. அரசியலில் வளர்வது, எம்.எல்.ஏ., எம்.பி. ஆவதெல்லாம் விளையாட்டு சமாச்சாரம்போலக் காட்டப்படுகின் றன.

காமெடி இல்லாத குறைக்கு இப்படியா?! த்ரிஷா, தனுஷ் இடையே அரசியல் களத்தில் போட்டியும் தனிப் பட்ட முறையில் காதலும் இருப்பது ரசிக்கும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கட்சிக்குள் த்ரிஷா மேற் கொள்ளும் காய் நகர்த்தல்கள் பரவாயில்லை. இடையில் வரும் ‘திடுக்கிட’ வைக்கும் திருப்பம் செயற்கையாக உள்ளது.

அரசியலில் ஓர் ஆண் நினைத்தால் நேர்மையாக, நல்லவனாக இருக்க முடியும். ஆனால், ஒரு பெண் அரசியல்வாதி என்றால் அவள் வில்லியாகத்தான் இருக்க வேண்டுமா? இதுபோன்ற சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால் ‘கொடி’ இன்னும் நன்றாகப் பறந்திருக்கும்.

  VISIT to
http://www.alaikal.com

குசும்பான சிரிப்புகள்

மீதி பணம்

நீதிபதி- அந்த ATM -ல கொள்ளயடிச்ச பணத்த என்ன பண்ணுண...?

திருடன்-பையனா LKG ல சேர்த்துட்டேன் அய்யா.

நீதிபதி- அப்படினா மீதி பணத்துக்கு எங்க போய் கொள்ளை அடிச்ச? ...................

கல்விச் சுற்றுலா

"ஏண்டா, கல்விச்சுற்றுலா வர மாட்டேங்கிற?"

" ஆமாம் சார், போயிட்டு வந்து, "நான் சென்ற இன்பச் சுற்றுலா" கட்டுரை எழுதச் சொல்லுவீங்க?" (இன்பமோ, துன்பமோ நாங்களே பாத்துக்குறோம் சார்..!)

குடி

குடித்துவிட்டு வந்தால் கத்தும் கருவி! - ஜப்பான் கண்டுபிடிப்பு!

ஹே...... இப்பதானா...... போங்கயா....... நாங்கலாம் பல வருசமா அதுகூட குடும்பமே நடத்துறோம்...!!! ..

புத்தகம்

இந்த புக் என்ன விலைங்க?

40 ரூபாய்ங்க,

கொஞ்சம் சொல்லிக் குடுங்க,

அய்யோ, நான் விற்கறதோட சரி! சொல்லியெல்லாம் தரமாட்டேன்.

Sunday, October 30, 2016

ஒவ்வொரு நொடியும் ...

படித்ததில் பிடித்தது....

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"

இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது.....

என்னுடைய நினைவுகளா?......ல்

அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...

.அவை காலத்தின் கோலம்....

என்னுடைய திறமைகளா?......

அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது..

அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?

மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி..

அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?

உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது.....
அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...

என் உடல்?......

அதுவும் உன்னுடையது கிடையாது.உடலும் குப்பையும் ஒன்று...

என் ஆன்மா?

இல்லை.அது என்னுடையது.

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். காலி பெட்டியைக் கண்டு....

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் என்னுடையது என்று எதுவும் இல்லையா? எனக் கேட்க, கடவுள் சொல்கிறார்,

அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே....

ஒவ்வொரு நொடியும் வாழ் -- உன்னுடைய வாழ்க்கையை வாழ் -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே...... .அது மட்டுமே நிரந்தரம்....... -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது.

Saturday, October 29, 2016

சிந்திக்க வைத்த கவிதை

பற்ற வைத்தால் வெடித்துக் கரியாகும்,

பட்டாசுக்கு செலவிடும் பணத்தை,

பசியுற்ற மக்களுக்கு பிரித்தளித்து ஏழையின் சிரிப்பில் காண்பதே ஏற்றமிகு தீபாவளி !

பலவித பலகாரங்கள் பக்குவமாய் செய்து,

சுற்றம்நட்புடன் பகிர்வதற்கு பதிலாக..

சிலவறியோர் குடிசை கதவுதட்டி,

இன்முகத்துடன் தருவதே தித்திக்கும் தீபாவளி !

சொந்தம் ஒதுக்க,

அனாதைஇல்லம் அரவணைக்க,

அன்பிற்கேங்கும் ஆதரவற்ற முதியோரின்..

நொந்த உள்ளம் ஆறுதலுற பேசி..

பொழுதுபோக்கும் காலமே பொன்னான தீபாவளி !

வாழ்த்துக்களை வார்த்தைகளால் பரிமாறி வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர வருகின்ற தீபஒளி திருநாளில் தீயன கழித்து நல்லன கூட்டுவதே உண்மையில் தீபாவளி .....!!!

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி...

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபங்கள் ஜொலிக்க,

பட்டாசு வெடிக்க,

புது துணி உடுத்தி,

மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட,

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

“நல்ல எண்ணங்கள்” என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து ,

“இருள்” என்ற தீமையை அழிப்பதே தீபாவளி!

என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Thursday, October 27, 2016

மனைவியின் தந்திரங்களை அறிவோம்

மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு இருக்கும்?''

கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''

மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''

கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற?

மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்'னீங் களே..!

ஆனா, இந்த மாதிரி யாராவது போகும்போது பேந்தப் பேந்த முழிச்சு பாக்குறீங்களே... இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.

கூண்டுக்குள் எலி

சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார்.

எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார்.

பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார்.

‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை.

இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார்.

2 எலிகளும் பேசிக்கொண்டன.

புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’

அதற்கு பழைய எலி சொன்னது,

‘‘இவனா? ரொம்ப தத்தி. மணி அடிச்சதும் சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே...

அப்பப்பா! பய இப்பத்தான் ஒருவழியா தேறிட்டு வர்றான்...’’

*நீதி: நாமொன்று நினைக்க கடவுள் ஒன்று நினைப்பார்

Wednesday, October 26, 2016

நம்ம ஜனங்க என்றுமே இப்படித்தான்

சமூக ஆர்வலர் :

ஒரு டம்ளரில் தண்ணீரும் இன்னொரு டம்ளரில் சாராயமும் ஊற்றி, தண்ணீர் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் சாராயம் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் போட்டார்.

தண்ணீரில் போட்ட பூச்சி உயிரோடிருந்தது. சாராயத்தில் போட்ட பூச்சி இறந்துவிட்டது.

சமூக ஆர்வலர் பொதுமக்ககளை பார்த்து கேட்டார் :

இதிலிருந்து என்ன தெரிகிறது?

பொதுமக்கள் :

சாராயம் குடிச்சா வயித்துல இருக்கற பூச்சியெல்லாம் செத்துப் போயிருமுங்க!!!

இப்போ புரியுதா நம்ம ஜனங்க எல்லாம் ஏன் நல்ல 'குடி'மகன்களா இருக்காங்கன்னு?

வீட்டில் எதிர்கட்சி

திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்:

"இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி.

இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார்.

"இங்க நான்தான் துணை முதல்வர்.
உள்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

"என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான்.

"என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறையையும், விளையாட்டுத் துறையையும் பாத்துக்குவா.

"நீ எதைப் பாத்துக்கறே சொல்லு? உனக்கு உணவுத்துறை, சுகாதாரத்துறை, குடும்ப நலத்துறை எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்; சரிதானா?"

சிரித்துக்கொண்டே மருமகள் சொன்னாள்:

"ஐயோ அத்தை; பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு? நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க. நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்.

பெண்கள் என்றுமே உஷார்தான்

Monday, October 24, 2016

காதலிக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்

சிரிச்சிடுங்க...

கண்டக்டர்:

"விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கே?''

டிரைவர்:

"இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்குதே!''

அருவி குருவி

"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."

"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?" "அது.... குருவி!"

செவிடு

பிச்சைக்காரர்:

"அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா:

பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...எனக்கு காது கேட்காது."

பெரியது

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?

ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.

வேற எதாவது பெரிசா சொல்லு.

ஒரு MRF டயர் வாங்கிக்கொடு

வாயை மூடி சிரிக்கவும்

பெண் அலைபேசியில்

ஆம்புலன்ஸ் சர்வீசா? அவசரம்..

மறுமுனை:

ஆமாங்க, சொல்லுங்க.

பெண்:

காப்பி குடிச்சிட்டு இருக்கும் போது டக்குன்னு தெரியாம காப்பி என் சேலையில் கொட்டிடுச்சு.

மறுமுனை:

இதுக்கு கண்டிப்பா ஆம்புலன்ஸ் வேணுமா மேடம்?

பெண்:

இல்ல, அத பார்த்துட்டு இருந்த என் வீட்டுகாரர் சத்தமா சிரிச்சாரு.

மறுமுனை: புரியுதுங்க. ரெண்டே நிமிஷத்தில் வர்றோம்.அட்ரஸ் சொல்லுங்க..

குடிகார நண்பர்களின் கூத்து

மூனு பேரு மூக்குமுட்ட குடிச்சிட்டு டேக்ஸி'ல ஏறுனானுங்க!

குடிச்சிட்டு வரானுங்கனு தெரிஞ்ச டேக்ஸி ட்ரைவர் அவனுங்கள வெச்சி ஓட்டிட்டு போக விருப்பமில்லாம ஸ்டார்ட் ஆகலன்னு சொல்லிடலாம் அப்டினு கார ஸ்டார்ட் பண்ணி ஆப் பண்ணினானாம்!

உடனே ஒருத்தன் இடம் வந்துருச்சி அப்டின்னு காசு குடுத்தான்.

இன்னொருத்தன் தேங்க்ஸ் சொல்லிட்டு எறங்குனான்.

மூனாவது ஆள் ட்ரைவர ஒங்கி ஒரு அறை விட்டு சொன்னானாம்..

இவ்ளோ வேகமா கார ஒட்டி எங்கள கொல்லப் பாத்தியேடா சண்டாளா..

நீதி

எப்படியும் தப்பிக்க முடியாது .
நடப்பது நடக்கும்