கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, May 1, 2016

இன்று ஓர் தகவல் 1

* தேசிய சாரன், சாரணியர் அமைப்பின் நோக்கம் 'ஆயத்தமாக இரு' என்பதாகும்.

* ஆங்கிலத்தில் 1 முதல் 999 எண்கள் வரை எழுதும்போது A என்ற எழுத்தே வராது.

* பின்கோடு 1972 – ல் அறிமுகம். அஞ்சல் குறியீட்டில் 6 எண்கள் உண்டு. முதல் எண் மாநிலத்தைக் குறிக்கும். இரண்டாவது துணை வட்டம், முன்றாவது எண் பட்டுவாடா மாவட்டத்தையும், இறுதி மூன்று எண்கள் அஞ்சல் நிலைய எண் ஆகும்.

* ‘சனி நீராடு’ என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. ‘சனி’ என்றால் ‘குளிர்ச்சி’ என்று பொருள்.சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.

* ஒரு முகூர்த்தம் என்ற அளவு ஒன்றரை மணி நேரத்தை குறிக்கிறது.

* ஒரு கடிகாரத்திலுள்ள இரு முட்களும் 24 மணி நேரத்தில் 22 முறை சந்திக்கின்றன.

* ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நீண்டநேரம் தொடர்ந்து தண்ணீர் குடிக்காமலிருந்தால் ரசாயனப் பொருட்கள் தேங்கி சிறுநீரகத்திற்கு பாதிப்பைத் தரும்.

* செல்போனில் பயன்படுத்தப்படும் 'சிம்' கார்டு என்பதன் விரிவாக்கம் 'சப்ஸ்க்ரைபர்ஸ் ஐடென்டிடி மாட்யூல்' என்பதாகும்.

* ஒரு குயர் என்பது 24 தாள்கள்.

* ஒரு ரீம் என்பது 20 குயர்கள்.

* ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? நீண்ட காலம் அல்ல. 33 ஆண்டுகள்.

* பணம் தராமல் ஒரு பொருளை வாங்குவதருக்கு ஓசி என்கிறோம். இது எப்படி அறிமுகம் ஆனது தெரியுமா? இது OC என்ற இரு ஆங்கில எழுத்துதான். இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, தங்களது கம்பெனித் தபால்களை ON COMPANY SERVICE என்ற குறித்து – கட்டணம் செலுத்த மாட்டார்கள். இந்த OCS என்பதே OC என ஆகி, ஓசி ஆகிவிட்டது.

* ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது.

* 'அக்மார்க்' என்பதற்கு அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங் என்று பொருள்.

* ஒருவாரின் தினசரி உணவில் உப்பின் பங்கு ஏழு கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும். 
      
     நன்றி. தொடரும்

No comments:

Post a Comment