* அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட இனத்தில் படித்து, வெளிநாடு சென்று கல்வி கற்று உயர்ந்தவர்.
சட்ட நிபுணர். இந்தியாவின் சட்ட அமைச்சர். கடைசி காலத்தில் தீண்டாமை ஒழியாத மன வருத்தத்தில் புத்த மதத்தில் சேர்ந்தவர்.
* சுமார் 500 கதாபாத்திரங்கள் கொண்ட 'போரும் அமைதியும்' என்ற புத்தகத்தை எழுதியவர் லியோ டால்ஸ்டாய்.
* நெப்போலியன் ஒரு நாளைக்கு சில மணி நேரங்களே தூங்குவார். அதுவும் குதிரையில் பயணம் செய்கிற சமயத்தில். மீதி நேரத்தில் உழைப்பு – உழைப்புதான்.
* தனது 32 வது வயதில் – தாய்நாடு திரும்பும்போது பாபிலோனில் விஷ ஜுரம், சாகும் தருவாய். சவப்பெட்டி தயார் ஆகிறது. அலெக்ஸாண்டர் சவப்பெட்டி செய்பவரை அழைத்து தலைப்பகுதியில் இருபுறம் இரண்டு துவாரம் இடுமாறு கூறினார். ஏன் எனக்கேட்க, என் உடலை உள்ளே வைத்து இரு துவாரம் வழியே என் கை தெரிய என் உடலை எடுத்துச் செல்லுங்கள் என்கிறார். அதுவும் ஏன் எனப் புரியாது குழம்ப.....”உலகையே ஜெயிக்க ஆசைப்பட்ட அலெக்ஸாண்டர் போகும்போது வெறும் கையோடுதான் போகிறான்” என்பதை உலகம் அறியட்டும் என்றாராம்.
* 1948 – ஜனவரி – 30. கோட்சே.... மகாத்மா காந்தியை சுட்டபோது.... காந்திஜி ஐயோ.... அம்மா.... என்று வழியில் புலம்பவில்லை. ‘ராம் – ராம்’ என்று சொல்லி அமைதியாக உயிர்விட்டார்.
* காந்திஜிக்கு பல இடத்தில் சிலை இருப்பது பெருமையல்ல. தென்னாப்பிரிக்காவில் புகைவண்டி நிலையத்தில் – ஒரு வெள்ளையர் கறுப்பர் என்பதற்காக காந்தியை வண்டியில் இருந்து தள்ளிய இடத்தில் காந்திஜிக்கு சிலை இருப்பது தனிப்பெருமை.
* கோட்-ஷூட்-தொப்பி என ஆடம்பரமாக வாழாத காந்தி – அரை வேஷ்டி உடுத்தியது – தமிழ்நாட்டில் மதுரை வந்தபோது – ஏழை மக்களை பார்த்த மனமாற்றத்தால்தான்.
* நெப்போலியன் செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைக்கப்பட்டான். தன்னந்தனி ஆளாய் நீந்தியே தப்பி பிரான்ஸ் வந்தார். சுற்றிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் சூழ்ந்தனர். எல்லோரின் கையிலும் ஆயுதம். ஆனால் நெப்போலியன் இடுப்பில் ஒரே ஒரு உடைவாள். பலவீரர்களில் யாருக்கும் நெப்போலியனை அருகில் போய்ப் பிடிக்க தைரியம் இல்லை. உடைவாளை தூக்கி எரிந்து நெப்போலியனே சரண் அடைந்தார்.
* கீட்ஸ் அமெரிக்காவில் வாழ்ந்த ஆங்கிலக்கவி. சோகம் பாடிய இவர் வாழ்விலும் சோகமே. காதல் தோல்வி. பிரியமுள்ள சகோதிரி மரணம், நோய், 26 வயதில் மரணம்.
* இந்திய தேசிய கீதமான ‘ஜனகணமண’ பாடலை எழுதிய தாகூர்தான் பாகிஸ்தான் நாட்டு தேசிய கீதத்தையும் எழுதியவர்.
* பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசை கலைஞர் மற்றும் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
* ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாளை ஆசிரியர் தினம் எனக் கொண்டாடுகிறோம். இது – முன்னால் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவ ஞானியுமான டாக்டர் ராதாக்ருஷ்ணனின் பிறந்த நாள். அவர் ஓர் ஆசிரியராகவும் இருந்தவர். அதனால் இத்தினம் ஆசிரியர் தினம் எனக் கொண்டாடப்படுகிறது.
* ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஐ நாம் குழந்தைகள் தினம் எனக் கொண்டாடுகிறோம். இது ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள். குழந்தைகள்பால் மிகமிக அன்பு கொண்டவர் நேருஜி. அதனால் இத்தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
* பெரிய அறிவியல் அறிஞர் முன்னால் ஜனாதிபதி அப்துல்காலம். தமிழ் நாட்டவர். திருமணமே செய்து கொள்ளாதவர். இவர் ஒரு கவிஞர். இவர் எழுதிய நூல் அக்னி சிறகுகள்.
* 'இத்தாலி நாட்டின் தந்தை' எனப் போற்றப்படுபவர் 'கரிபால்டி' ஆவார்.
* ‘விதியின் மனிதன்’ என மாவீரன் நெப்போலியன் அழைக்கப்படுகிறார்.
நன்றி .தொடரும்....
No comments:
Post a Comment