* பெண் சிங்கம் ஜான்சி ராணி இலக்குமிபாயின் கல்லறை குவாலியரில் உள்ளது.
* தாஜ்மகால் உலக அதிசயத்தில் ஒன்று இந்தியாவில் ஆக்ராவில், யமுனை நதிக்கரையில் கட்டப்பட்ட சலவைக்கல் கட்டிடம்.
மொகலாய மன்னர் ஷாஜகான் கட்டியது. அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டப்பட்ட கல்லறையே அது.
இதனை வடிவமைத்தவர் ‘உஸ்தாத் இஷா’ மொத்தம் பணி செய்தவர்கள் 22 ஆயிரம் பேர். கட்டி முடிக்கவும் 22 ஆண்டுகள் ஆயின.
* ஐஃபில் கோபுரம் பாரிஸ் நகரில் உள்ளது. 1500 இரும்புத்துண்டுகளால் கட்டப்பட்டது. உயரம் 984 அடி. 1889 மே 15-ல் திறக்கப்பட்டது. இது பிரெஞ்சுப் புரட்சி நினைவாக கட்டப்பட்டது.
* பைசா நகர சாய்வு கோபுரம் கட்டி முடிக்க 174 ஆண்டுகள் ஆயின.
* மேட்டூர் அணை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆயின.
* புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்க 13 ஆண்டுகள் ஆயின.
* திருமலை நாயக்கர் மகால் கட்டி முடிக்க 23 ஆண்டுகள் ஆயின.
* உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் 'குயின் விக்டோரியா' ஆகும்.
* பைசா நகர சாய்வு கோபுரம் உலக அதிசியங்களில் – ஒன்று. இத்தாலி நாட்டின் பைசா நகரில் உள்ளது. இதனை கட்ட 175 ஆண்டுகள் ( கி,பி. 1174 – 1650 ) ஆயின.
இது எட்டு அடுக்கு கொண்ட, சற்று சாய்வான கோபுரம். இதன் உயரம் 179 அடி. சற்று பழுது பட்டாலும், இது சரி செய்யப்பட்டு பலரையும் கவர்ந்திழுக்கிறது.
* உலகின் மிகப்பெரிய அருங்காட்சியம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் ஆகும்.
* ஐ .நா சபையின் சின்னம் ‘ஆலிவ் கிளை’.
* டாக்டர் ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா ஆகிய இருவருக்கும் அவர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே அவர்கள் பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டன.
* இந்தியாவில் உள்ள மசூதியில் மிகப்பெரியது ஜும்மா மசூதி. இது பழைய டெல்லியில் உள்ளது. மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது.
* இந்தியா கேட் ஒரு வரலாற்று சின்னம். டெல்லியில் உள்ளது. முதல் உலகப் போரில் இங்கிலாந்து நாட்டிற்காக, இந்தியாவில் இருந்து சென்று போரிட்டு மாய்ந்த 90000 இந்திய வீரர்கள் நினைவாகக் கட்டப்பட்டது. இது 42 மீட்டர் உயரம் உள்ளது. 90000 வீரர்களின் பெயரும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அணையா விளக்கு, கலர் விளக்குகள், நீருற்றுகள் என அழகு படுத்தப்பட்டுள்ளது.
* குதுப்மினார் ஒரு வரலாற்று நினைவுச் சின்னம். இது டெல்லியில் உள்ளது. டெல்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் இது உருவாக்கப்பட்டது. காலம் 13 ஆம் நூற்றாண்டு. கீழே அகலமாகவும், மேலே செல்லச் செல்ல குறுகலாகவும் அமைக்கப்பட்டது. 73 மீட்டர் உயரம் உள்ளது. கீழ்ப்பகுதி விட்டம் 14.5 மீட்டர். மேலே விட்டம் 2.5 மீட்டர். இது 5 அடுக்குகள் கொண்டது. முதல் மூன்று அடுக்கு சிவப்புக்கல், மற்ற இரண்டும் சலவைக்கல் – கொண்டு கட்டப்பட்டது. இதனை ஆரம்பித்தவர் குத்புதீன் ஜபக். கட்டி முடித்தவர் அவரது மருமகன் இல்ட்டுமிஷ்.
* புவி ஈர்ப்பு விசையை மீறும் சாய்ந்த கோபுரம் பைசா நகரில் உள்ளது. இது உலக அதிசயத்தில் ஒன்று. இதன் உயரம் 58.36 மீட்டர்.
* லண்டனில் உள்ள தேவாலயம் ஒரு வித்தியாசமான சிறப்பு கொண்டது. இதன் அடியில் நின்று மெகா மெல்லிய குரலில் ரகசியம் போல பேசினாலும், மேலே காலரியில் உள்ளவர்களுக்கு அது துல்லியமாகக் கேட்கும். இது அறிவியல் - கணித இலக்கணப்படி அமைக்கப்பட்டுள்ளது. கூரை ஒலியைப் பிரதிபலித்து மேலே கொண்டு செல்லும்.
* சீனப் பெருஞ்சுவர் என்பது மிக நீளமான மதில்சுவர். சீனாவில் மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்டது. வானவெளியில் இருந்து பூமியில் தெரிவது இது. இதனைக் கட்ட 3 லட்சம் பேர் உழைத்தனர். கட்டி முடிக்க 10 ஆண்டுகள். இது உலக அதிசயத்தில் ஒன்று.
* நோபல் பரிசுக்கு மாற்றாகக் கூறப்படும் வேறு பரிசு 'ரைட் லைவ்லிஹூட்' விருதாகும்.
* சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயங்களுள் ஒன்று. இதன் நீளம் 6,000 கிலோ மீட்டருக்கும் அதிகம் என மதிப்பிடப் பட்டுள்ளது. பெருஞ்சுவரின் நீளம், வயது குறித்த அளவிடும் பணிகள் அவ்வப்போது மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன.
இப்போதும் சீனாவில் இப்பெருஞ்சுவரைத் துல்லியமாக அளவிடும் பணி தொடங்கியுள்ளது. சீனாவின் வடக்கு மாநிலத்தில் இருந்து தொடங்கியுள்ள இப்பணி நிறைவுற்றால் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், அது எவ்விதத்தில் கட்டப்பட்டுள்ளது, அதைப் பாதுகாக்கும் வழிகள் பற்றி அறியலாம்.
நன்றி . தொடரும்
No comments:
Post a Comment