* மாவீரன் அசோக சக்கரவர்த்தி காலத்தில் 'பிராமி' எனும் எழுத்து முறை பயன்படுத்தப்பட்டது.
* தற்போதுள்ள காலன்டர் அமைப்பை உருவாக்கியது போப் – பதிமூன்றாம் போப் – கிரிகோரி. ஆண்டு 1818.
* ஆதாம் – ஏவாள் பூமிக்கு அனுப்பப்பட்டவர் எனப்படுவர். இவர்களுக்கு முதலில் பூமியில் பிறந்தது குழந்தைகள். அவர்கள் கெயின், ஏபெல், சேத் என்பார்கள்.
* நாணயங்களில் உருவம் பொறிக்கும் முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தது கிரீஸ். செய்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.
* 1917 – அக்டோபர் புரட்சியின் போது ரஷ்யாவில் உயிர் இழந்தவர்கள் முன்று கோடிப் பேர்கள்.
* சிந்து சமவெளியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பொருள்களில் மாவிலைத் தோரணமும், மாம்பழமும் செதுக்கப்பட்டிருந்தன.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இந்தப்பழம் இந்தியாவிலிருந்து கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றது. உலகம் முழுவதிலும் 41 வகையான மாம்பழ இனங்கள் உண்டு.
* இந்திய அறுவை சிகிச்சையின் தந்தை எனப் போற்றப்படுபவர் சுஷ்ருதர். 2600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்த மருத்துவ மேதை இவர். கண் அறுவைச் சிகிச்சை, ஏன் மூளை அறுவை சிகிச்சைக்கூட அன்று அவர் செய்தார்.
* இரண்டாவது உலகப்போரில் 61 நாடுகள் பங்கு கொண்டன.
* தற்போது நடைமுறையில் இருக்கும் காலண்டர் முறையை அறிமுகம் செய்தது ரோமானிய ஜூலியஸ் சீசர். ஜனவரி 1 ஆண்டின் துவக்கம் என அறிமுகம் செய்ததும் இவரே. இதை ‘ஜூலியஸ் காலன்டர்’ என்று கூறுவதுண்டு. கி.மு. 46 ல் ஒரு ஆண்டு 365 நாட்கள் என்று நிர்ணயித்ததும் சீசரே. இதுவே ஜுலியஸ் ஆண்டு எனப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு 366 என நாள் நிர்ணயம் செய்ததும் சீசர்தான்.
* பசுமைப்புரட்சி முதன்முதலில் மெக்சிகோ நாட்டில் துவங்கியது.
* ஈபில் டவரைக் கட்டியவர் அலெக்சாண்டர் ஈபில்.
* புதுதில்லியில் உச்சநீதிமன்றக் கட்டடம் 1764-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
* இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 1984 , ஏப்ரல் 14-ஆம் நாள் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார்.
* இந்தியாவில் 1905-ஆம் ஆண்டு ரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது.
* சித்தன்னவாசல் ஓவியங்களை வரைய வைத்த மன்னன் குலோத்துங்க சோழன்.
* முதன்முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்திய மன்னன் திப்பு சுல்தான்.
* உலகை முதன்முதலில் வலம் வந்த ஸ்பெயின் நாட்டுக் கப்பலின் பெயர் ‘விக்டோரியா’.
* புனித வெள்ளி அன்று கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்.
* இந்திய தேசியக் கொடியை 1906-ஆம் ஆண்டு வடிவமைத்தவர் ‘சுரேந்திரநாத் பானர்ஜி’.
* சிந்து பள்ளத்தாக்கில் புதையுண்ட பழமையான இரு நகரங்கள் மொகஞ்சதாரோ, ஹரப்பா.
* மகாவீரர், புத்தர் ஆகிய இருவருமே சத்திரிய வம்சத்தினர்.
* திகம்பர், ஸ்வேதாம்பரர் ஆகியவர்கள் ஜைன மதத்தின் இரு பிரிவினர் ஆகும்.
* பௌத்த மதத்தின் இரு பிரிவுகள் மகாயானம், ஹீனயானம்.
* ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7-ஆம் நாள் கொடி நாள் என கொண்டாடப்படுகிறது.
* 1917 – ல் நடந்த ரஷ்யப் புரட்சியே அக்டோபர் புரட்சி எனப்படுகிறது. இது அக்டோபர் மாதத்தில் நடந்ததால் இப்பெயர் பெற்றது. ஜார் மன்னர்களின் கொடுமையை எதிர்த்து லெனின் தலைமையில் மக்கள் செய்த புரட்சியே இது.
* அரசன் – மக்கள் – அரசியல் – அரசாட்சி என்பது பற்றி வடமொழியில் பழங்காலத்தில் எழுதப்பட்ட சிறப்பான நூல் அர்த்தசாஸ்திரம். இதனை எழுதியவர் சாணக்கியர். இவரது வேறு பெயர் கௌடியல்யர்.
சந்திரகுப்த மௌரியர் ஆட்சி அமைக்க துணை செய்தவர். அவரிடம் அமைச் சராகவும் இருந்தவர். 180 தலைப்புகளில் அரசியல் கூறும் அற்புத நூல் இது.
* இயேசு கிறிஸ்து பிறப்பை மையமாக்கி ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. கிறிஸ்துவுக்கு முன்பான காலம் கி.மு., பிறகான காலம் கி.பி. என்பது அறிவோம். கி.பி.யை ஆங்கிலத்தில் A.D. என்கிறோம்.
இது ஏன் தெரியுமா? A.D. என்றால் இலத்தீன் மொழியில் ‘நமது தலைவனின் ஆண்டு’ Anna Domini என்று பொருள். இதுவே A.D.
* ரூபாய் நாணயங்களை தோள்களில் அச்சடித்த மன்னர் முகமது-பின்-துக்ளக்.
* ஜனவரி 31, பிப்ரவரி 28 (29), மார்ச் 31, ஏப்ரல் 30, மே 31, மறு மாதம் 30 என ஆண்டின் 365 நாட்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஜூலை – ஆகஸ்ட் இந்த இரண்டு மாதமும் தொடர்ந்து 31 நாட்கள் வருவது ஏன் தெரியுமா? ஜூலை என்பது ஜூலையில் சீசர் நினைவாக வைக்கப்பட்ட பெயர். அப்போது ஜூலைக்கு 31 நாட்கள். அடுத்த மாதம் 30 நாட்கள் என்றே இருந்தன. ஜூலையில் சீஸ்ருக்குப் பின் வந்த அகஸ்டஸ் சீசர் தன பெயரை அடுத்த மாதத்திற்கு சூட்டி, ஆகஸ்ட் வந்தது. அதில் சீசருக்கு (ஜூலை) இணையாக தன்பெயர் கொண்ட ஆகஸ்ட் மாதத்திற்கும் 31 நாட்கள் ஆக்கினார். அதாவது பிப்ரவரியில் இருந்து 1 நாளை எடுத்து இம்மாதத்தில் சேர்த்தார்.
* தேசப்பட புத்தகத்திற்கு அட்லஸ் என்ற பெயர் எப்படி வந்தது? அட்லஸ் ஒரு கிரேக்க நாட்டு தெய்வம். அதன் தோளில் உலகம் இருப்பதாக கிரேக்க புராண நம்பிக்கை. 1634 – ல் முதன்முதலாக தேசப்படம் வரையப்பட்டது. வரைந்தவர் மெர் கேடர் என்ற ஐரோப்பியர். அவர் வெளியிட்ட புத்தகத்தின் மேல் அட்டையில் ‘அட்லஸ் உலகைத் தாங்கிக் கொண்டிருக்கும்’ ஓவியம் இடம் பெற்றது. இன்றும் தேசப்பட புத்தகத்திற்குக் அட்லஸ் என்று பெயர்.
* எவரெஸ்ட் சிகரத்திற்கு அப்பெயர் 'ஜார்ஜ் எவரெஸ்ட்' என்பவரால் 1865-ஆம் ஆண்டு சூட்டப்பட்டது.
* வரலாற்றில் 'கலிங்கம்' என்று அழைக்கப்பட்ட நாடுதான் இன்று ஒரிசா மாநிலமாக உள்ளது.
* இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15. இதே ஆகஸ்ட் 15 – சுதந்திரம் பெற்ற வேறு ஒரு நாடு தென்கொரியா.
* உலகம் முழுவதும் கொண்டாடும் முதல் நாள் ஜனவரி 1 – புத்தாண்டு தினம். அடுத்து மே 1. இது தொழிலாளர் தினம்.
* பின்கோட் எனப்படும் அஞ்சல் குறியீட்டு எண் இந்தியாவில் 15-8-1972 ல் அறிமுகம் செய்யப்பட்டது.
* மொகலாயப் பேரரசு, 1526 முதல் பானிபட் போரில் வென்று பாபரால் தோற்றுவிக்கப்பட்டது. இது 1707ல் அவுரங்கசீப்புடன் அழிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இது தவறு. அவுரங்கசீப் கடைசி பேரரசர். அவருக்குப்பின்பும் மொகலாயப் பேரரசு பெயரளவில் 1857 வரை நீடித்தது. சிப்பாய் கலகத்துடன் அதன் கடைசி அரசர் ஷா – ஆலம் என்பவரோடு இது முடிவுக்கு வந்தது. உண்மையில் மொகலாயர் ஆட்சி 1526 – 1857 வரை இருந்தது.
* எழுதவும், படிக்கவும் தெரியாத மன்னர் அக்பர்.
* ஒரு மணிக்கு 6௦ நிமிடங்கள் என முதன்முதலில் வகுத்தவர் பாபிலோனியர்கள்.
நன்றி . தொடரும்
No comments:
Post a Comment