கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, August 31, 2016

பிணத்தால் பிரிந்த ராமனும் சோமனும்

ராமன் சோமன் ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்....

ஒரு நாள் ராமன் ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.... திடீர்ன்னு நல்ல மழை, வண்டி வேற ஆப் ஆயிடிச்சி, சைடு ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க அங்க ஒரு பெரிய சகதி நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு.

போன வாரம் வாங்கின புது செருப்பு அதுல மாட்டிக்கிச்சி. முன்னூறு ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான், ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத இப்டியே கொண்டுபோக சங்கடப்பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் சோமன் வீட்ல வச்சிட்டு, நாளைக்கு வரும்போது எடுத்துட்டு போகலம்னு முடிவு செஞ்சான்.

தன் நண்பனிடம் கேட்க அவனும் "அதனால என்னடா... வச்சிட்டு போ..."ன்னான். மறுநாள் எடுத்துட்டு போய் அத சரி செஞ்சி போட்டுகிட்டான் ராமன்.

ஒரு மாசம் கழிச்சி ராமனின் மாமா இறந்துவிட்டார். இறுதி ஊர்வலம் போயிட்டு இருந்தபோது மறுபடியும் திடீர்ன்னு மழை, சரி போற வழியில தானே நம்ம நண்பன் சோமன் வீடு அங்க ஒரு அரை மணி நேரம் மாமாவ எறக்கி வச்சிட்டு போவோம்னு நெனைச்சி நண்பன் கிட்ட கேட்டான்....

சோமனுக்கு கோபம், ஆத்திரம் "ஒழுங்கா ஓடிடு, இல்ல கொண்ணு புடுவேன்"னு சொல்லி தொரத்திட்டான்.

நீதி :

பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம் மனுஷனுக்கு கெடையாது,

அதுனால சும்மா நீ பெரியவனா, நான் பெரியவனான்னு மனதில் காழ்ப்புணரவை வளர்க்காமல். பொறாமை இல்லாமல். மற்றவரை சபிக்காமல். பிறரை குறை கூறாமல். வாழப்பழகுவோம். மனிதம் காப்போம். உயிர்தனை நேசிப்போம்.

படித்ததில் பிடித்தது

சமூக மறுமலர்ச்சி காண வந்த ஜோக்கர்

தமிழில் வெளிவந்த படங்களிலே தற்போது வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.
சாட்டை, விசாரணை படங்களை போல ஜோக்கரும் தமிழின் சிறந்த படமாகும்.
இயக்குநர் ராஜீமுருகன்  மக்களை விழிக்க வைக்க செய்த சிறப்பான முயற்சி.
சமூதாயத்தை சீரழிக்கும் படங்களிலே சிந்திக்க வைத்த திரைப்படம்.
பலகோடி வாங்கும் நடிகர்கள் நடித்திருந்தால் கூட படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது ஐயமே.
புதுமுக நடிகர்களின் நடிப்புக்கு பாராட்ட வார்த்தை இல்லை.
வசனங்களே படத்தின் தனிச்சிறப்பு.
சமூகத்திற்காக பாடுபடும் போராளிகளை நாம் ஜோக்கர்களாகவே எண்ணுவதை படம் பார்க்கும் போது நம்மை தலைகுனிய வைக்கிறது.
சிந்திக்க வைத்த ஜோக்கருக்கு ஓர் சல்யூட்.
முதலில் நம்மை மாற்றுவோம்.பின் சமூகத்தை மாற்றுவோம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம்

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும் வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 1) முதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, முகவரி மாறி இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ள வசதியாக இப்போது புழக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வரும் வியாழக்கிழமை (செப்.1) முதல் வைக்கப்படுகிறது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்கலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டும் தேர்தலில் வாக்களிக்க இயலாது.

வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருப்பது அவசியம். எனவே, பட்டியலில் பெயர் சேர்க்கவும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்கென இப்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியல் வரைவு வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.

அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சிறப்பு முகாம்கள்:

வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elections.tn.gov.in) காணலாம். மேலும், செப்டம்பர் 10, 24 ஆகிய தேதிகளில் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டங்களிலும், பிரிவு வாரியாக படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

இந்த வாக்காளர் பட்டியல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகங்கள், வருவாய்க் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோரின் அலுவலகங்களிலும், வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் வைக்கப்படும்.

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். electoralservicesearch.azurewebsites.net என்ற இணையதள முகவரியிலும் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்ள உரிய மனுக்களை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அளிக்கலாம். மேலும் மனுக்களைப் பெற சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் செப்டம்பர் 11, 25 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

என்ன படிவம்... எந்த ஆவணம்

முதல் முறையாகப் பெயர் சேர்க்கவும், ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 6.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட விரும்பினால் படிவம் 6ஏ.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் படிவம் 8ஏ.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க படிவம் 7.

பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய விரும்பினால் படிவம் 8-ஐ பயன்படுத்த வேண்டும்.

இருப்பிடச் சான்றாக ஆறு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்.

வங்கி-கிசான்-அஞ்சல் அலுவலக நடப்புக் கணக்குக் கையேடு. விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை-கடவுச் சீட்டு-ஓட்டுநர் உரிமம்-வருமான வரி விதிப்பு ஆணை. விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள குடிநீர், தொலைபேசி, மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அண்மைக்கால ரசீது.

விண்ணப்பப் படிவத்தில் கொடுத்துள்ள முகவரியில் விண்ணப்பதாரரின் பெயருக்கு வந்து சேர்ந்த தபால் துறையின் தபால்கள்.வாடகை ஒப்பந்தம்.ஆதார் கடிதம். இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடம் (வாக்குச் சாவடி அமைந்துள்ள பகுதி), வாக்குச் சாவடி நிலை அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடம் அளிக்கலாம். www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது

நன்றி. தினமணி.

இரத்த அழுத்தம் குறைய எளிய டிப்ஸ்

இரத்த அழுத்தம் குறைய எளிய மருத்துவக் குறிப்புகள்

*தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 வெள்ளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

*முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

* இரத்த அழுத்தம் குறைய தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது.

* அதுபோல், தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

* உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. எந்த உணவானாலும், குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

* உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

*எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

*அதிகம் சத்தம் போட்டுப் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.

* தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

* தினமும் யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் இரத்த அழுத்தம் பெருமளவு குறையும்.

* அளவுக்கதிகமாக உள்ள உடற்பருமனைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

* புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை நிறுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும்.

சைக்கிள் ஓட்டுவதில் உள்ள நன்மைகள்

சைக்கிள் ஓட்டுறது இவ்வளவு நன்மைகளை  நாம் பெறலாம்.

* சைக்கிள் ஓட்டுவதால் இதயநோய் ஆபத்து குறைகிறது.

* உறுதியான தசைகளை பெறுகிறோம்.

* இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.

* இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

* நம் உடலின் வெப்பத்தையும், கழிவுகளைவும் எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

* உடல் பருமன் உடையோர் சைக்கிள் ஓட்டுவதால் உறுதியான மற்றும் பருமன் இல்லா உடலை பெறலாம்.

* கோபம்,மன அழுத்தம், போன்றவற்றை நீக்கி மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

* மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கிறது.

* சைக்கிள் ஓட்டுதல் மூலம் நீரழிவு நோயின் தாக்கம் கூட குறையும்.

தினமும் சைக்கிள் ஓட்டுவோம், உடல் நலத்தை பேணுவோம்

Tuesday, August 30, 2016

தமிழ்மணம் வளைதளத்திற்கு மிக்க நன்றி

தமிழ் மணம் நிர்வாகி ஆசிரியர்க்கும், கல்வி ஆசான் வலைதளத்தை பார்வையிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
சென்ற வாரம் முதல் இருபது இடங்களை பிடித்த பட்டியலில் எமது வலைதளம் 20வது இடத்தில் உள்ளது.
உங்களின் ஆதரவோடு மேலும் முன்னேற வாழ்த்துங்கள்.
வருகை தாரீர்.
நன்றி.

சிரிச்சுட்டு திட்ட வேணாம்

ஒரு நாள் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார். "ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' "

"தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்'' "

"பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.

பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள். இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான் மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்.

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனை பாராட்டினார்.

அவ்வாறு பாராட்டுப் பெற்ற மாணவன் வேறு யாருமில்லை. நான் தான்.

வணக்கம்... நமக்கு இந்த வெளம்பரமே புடிக்காது...சிரிச்சிவிட்டு திட்டாதிங்க.
படித்ததில் பிடித்தது

Monday, August 29, 2016

கடவுள் குதிரை

ஒருத்தர் குதிரை வாங்க போனாராம்.

அங்க ஒருத்தன் “கடவுளின் குதிரை”ன்னு ஒரு குதிரையை வித்துக்கிட்டிருந்தான்.

இவரு விவரம் கேட்க வியாபாரி சொன்னான்.

இது கெளம்பணும்னா "கடவுளே நன்றி"ன்னு சொல்லணும், நிறுத்தணும்னா “கடவுளே காப்பாத்துன்னு சொல்லணும்”.

அந்த குதிரை பார்க்கவும் நல்லா இருந்ததால, கடவுளோட குதிரையாச்சேன்னு அவரும் அதை வாங்கினாரு.

ஊருக்கு வந்து குதிரை மேல ஏறி உட்கார்ந்து "கடவுளே நன்றி" ன்னாரு. குதிரை புயல் மாதிரி பறக்க ஆரம்பிச்சிருச்சி.

கடவுளே காப்பாத்துன்னாரு, குதிரையும் நின்னுடுச்சு. இவருக்கு ரொம்ப குஷி ஆகிடுச்சு.

ஒரு நாள் ஒரு மலைக்கு அந்த குதிரையில் பிரயாணம் போய்ட்டு இருந்தார். குதிரை வேகமா போக அவருக்கு பயம் வந்ததிடுச்சு, குதிரைய எப்படி நிறுத்தறதுன்னு மறந்துட்டாரு. இன்னும் ரெண்டு அடி போனா பாதாளத்தில விழுந்துடுவோம்கிற நிலைமையில அவரையும் அறியாம ‘கடவுளே காப்பாத்து’ன்னாரு.

பட்டுன்னு குதிரை நின்னுடிச்சி. போன மூச்சு அவருக்கு திரும்பி வந்துச்சு. அப்பாடான்னு ஆசுவாசப்படுத்திட்டு சொன்னார்: "கடவுளே நன்றி" அவ்ளோதான்...

செல்போனும் மனைவியும்

கணவனும்  மனைவியும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

சரியாக ராத்திரி ஒரு மணிக்கு மனைவி செல்போனுக்கு மெஸேஜ் வருகிறது.மெஸேஜை படித்ததும் கணவனுக்கு பயங்கர கோவம் வந்து மனைவியை எழுப்பி கன்னத்தில் பளார் என்று அறைகிறான்.

‪மனைவி‬ : ஏங்க, எதுக்கு நடு ராத்திரியில எழுப்பி என் கன்னத்தில் அடிச்சீங்க?

‪கணவன்‬ : எவனோ ஒருத்தன் ராத்திரி ஒரு மணிக்கு "BEAUTIFUL"னு உனக்கு மெசேஜ் அனுப்பிருக்கான்.யார் அவன்? உண்மைய சொல்லுடி.!

மெசேஜ்ஜை படித்த அவனின் மனைவி அவன் கன்னத்தில் பளார் என்று அறைகிறாள்...

அறைந்து விட்டு "BATTERY FULL" அ BEAUTIFULன்னு படிச்சுட்டு அடிக்க வேற செய்யுற? குருட்டு ஜென்மமே..

சந்தேகம் வேண்டாம்.

ஒரு பைசா வாங்காதவன் இறைவன்

80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது. நல்லபடியாக நடந்து முடிந்த பின்.

அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்...

அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை..

அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த..... மருத்துவர் கூறுகிறார்.... அழாதீர்கள் தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்..

அதற்க்கு பெரியவர்,
எனக்கு அது பிரச்சினையில்லை, பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர தயாராக உள்ளேன் ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என் இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்க்கவில்லையே.....

இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது, கண்ணீர் வழிகிறது. மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள் பாதுகாத்ததற்க்கு எட்டு லட்சத்திற்க்கு பில். எல்லாம் வல்ல கடவுள் கருணையையும் அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன் என்றார்..

இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே..... - நாம் தான் நன்றி கெட்டவர்களாக இந்த மண்ணில் வாழ்கிறோம்.

எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவானவர் இறைவன் மட்டுமே.
படித்ததில் பிடித்தது

Sunday, August 28, 2016

ரேஷன் அன்பர்களுக்கு

இனி பொதுமக்களை ஏமாற்ற முடியாது! ரேஷன் கடைகளில் ஸ்டாக் இல்லை என்று பல முறை பொதுமக்களிடம் பொய் கூறி திருப்பி அனுப்பும் வேலையை பல ரேஷன் கடைக்காரர்கள் செய்வதாக புகார் வருகிறது.

இதை தடுக்க, தமிழக அரசு SMS யுக்தியை அறிமுக படுத்தியதுள்ளது பலருக்கும் தெரியாது. 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216 ஆகிய ஏதோ ஒரு எண்ணிற்கு, PDS என்று டைப் செய்து, இடைவெளி விட்டு, உங்கள் மாவட்டத்தின் குறியீட்டு எண்ணை டைப் செய்து, இடைவெளி விட்டு, உங்கள் பகுதியின் ரேஷன் கடை எண்ணை டைப் செய்து SMS அனுப்பினால், சில நொடிகளில், உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் எவ்வளவு ஸ்டாக் இருக்கிறது என்று உங்களுக்கு SMS வந்துவிடும்.

மாவட்டதின் குறியீடும், ரேஷன் கடை எண்ணும் உங்கள் ரேஷன் அட்டையை பார்த்து நீங்கள் தெரிந்துக்கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டிற்கு 05/A/0757090 என்று ரேஷன் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் எண்ணில்

05 என்பது மாவட்டத்தின் குறியீடு. ரேஷன் கடையின் குறியீட்டு எண், ரேஷன் அட்டையின் அடியில் இருக்கும்.

குடியை நிறுத்த ஞானி செய்த தந்திரம்

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான்.

"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு ஞானி,
"நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன் என்றார்.

மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார்.

தூணைப் பார்த்து, "ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு.."என்று கத்திக் கொண்டிருந்தார்.

உடனே குடிகாரன், "நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள் என்கிறிர்களே"என்றான்.

உடனே ஞானி, இதிலிருந்து என்னை எப்படியாவது என்னை விடுவித்து விடு என்றார்.

அதற்கு குடிகாரன்,
இவரென்ன முட்டாளா என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.

உடனே ஞானி சிரித்துக் கொண்டே, "நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே விட்டுவிடு "என்றார்.

இது போல நாமும், கோபம், பொறாமை, சுயநலம், பழிவாங்கும் எண்ணம் எனும் தூண்களை இறுகப் பிடித்து வைத்திருக்கிறோம். விடுவதும், கட்டிப்பிடித்துக் கொள்வதும்.. அவரவர் கையில்..
படித்ததில் பிடித்தது.

யானை வாலால் மன்னனுக்கு வந்த சோதனை

ஓஷோவின் கதை

அவன் ஒரு பிச்சைக் காரனின் மகன். இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பான்.

அவன் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தான் என்றால், அரசனின் யானை வீதியில் செல்லும் போது, அவனால் அதன் வாலைப் பிடித்து அந்த யானையை நகர விடாமல் செய்ய முடியும்.

சில சமயங்களில் அரசனுக்கே தர்ம சங்கடமாகி விடும். ஏனெனில் அவர் யானை மீது உட்கார்ந்து கொண்டிருப்பார், மந்தை முழுவதும் மக்கள் கூடி நின்று இக்காட்சியைப் பார்த்து சிரிப்பார்கள். எல்லாம் இந்த பிச்சைக்காரனின் மகனால் விளைவது.

அரசர் தன் மந்திரியை அழைத்தார்.

"ஏதாவதுசெய்தே ஆகவேண்டும். இது எனக்கு பெரிய அவமானம். கிராமத்தின் வழியாக செல்வதற்கே நான் பயப்பட வேண்டியிருக்கிறது. அந்த பையன் சில சமயங்களில் வேறு கிராமங்களுக்கும் வந்து விடுகிறான்! எங்கே வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவன் யானையின் வாலைப் பிடித்து விடுகிறான், அதுவும் நகராமல் நின்று விடுகிறது. அந்தப் பையன் அதிக சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் சக்தியை நீக்க ஏதாவது செய்தாக வேண்டும்".

மந்திரி கூறினார்:
"நான் சென்று அறிவாளிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில், அவன் சக்தியை எப்படி நீக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. அவன் ஒரு பிச்சைக்காரன். அவன் கடை வைத்திருப்பவன் என்றால், அது அவன் சக்தியை உறிஞ்சி விடும். தொடக்கப் பள்ளீயில் அவன் ஒரு ஆசிரியராக இருந்தான் என்றால், அப்பொழுதும் அவன் சக்தி நீக்கப்பட்டு விடும்.

ஒரு அலுவலகத்தில் அவன் வேலை செய்தான் என்றாலும், அவன் சக்தி குறைந்து விடும். ஆனால் அவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை, அவன் வேடிக்கைக்காக வாழ்கிறான், மக்கள் அவனை விரும்புகிறார்கள், அவனுக்கு உணவிடுகிறார்கள்... அதனால் அவனுக்கு உணவிற்கும் பஞ்சமில்லை. அவன் மகிழ்ச்சியாய் இருக்கிறான். சாப்பிட்டுவிட்டு தூங்குகிறான். அதனால், இது மிகவும் கடினம்.

ஆனாலும் நான்ஆலோசனை கேட்கச் செல்கிறேன். ஒரு வயதான அறிவாளியிடம் சென்றார்.

அவர் கூறினார்:
"ஒன்று செய்யுங்கள். அந்தப் பையனிடம் சென்று நீங்கள் அவனுக்குத் தினமும் ஒரு தங்கக் காசு கொடுப்பதாகவும், அதற்காக அவன் ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள் - உண்மையிலேயே, அது சிறிய வேலைதான். அவன் கிராமத்திலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் அவனுக்கு தினமும் ஒரு தங்கக்காசு தருவீர்கள்.

மந்திரி கேட்டார்: "ஆனால் இது எப்படி உதவும்? இது அவனை இன்னும் அதிக சக்தி படைத்தவனாக வேண்டுமானால் மாற்றலாம். ஒரு பணம் கிடைத்தவுடன் அவன் இன்னும் அதிகமாக சாப்பிடுவான். பிச்சை எடுப்பதைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டான்."

அந்த அறிவாளி கூறினார்: "கவலைப்படாதீர்கள், நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்." அவ்வாறே செய்யப் பட்டது.

அடுத்த வாரம், அரசர் கடந்து செல்லும் போது, அந்த பையன் யானையை நிறுத்த முயற்சித்து தோல்வியடைந்தான். அதனுடன் இழுத்துச் செல்லப்பட்டான்.

என்ன நடந்தது? அவன் கவனம் கலைந்து விட்டது . கவலை நுழைந்துவிட்டது. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும், கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பதை, அவன் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அது கவலையாக மாறி, அவன் முழு இருத்தலைப் பிரித்து விடுகிறது. தூங்கும் போது கூட அது மாலை என்பதைப் போல் கனவு காண தொடங்கி விடுகிறான். கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி விட்டு, தன் ரூபாயைப் பெற்றுக் கொள்கிறான் அவன். பிறகு அந்தத் தங்க ரூபாய்களைச் சேகரிக்கத் தொடங்கி விடுகிறான். ஏழு வைத்திருந்தான், இப்போது எட்டு, பிறகு இவ்வளவு நாட்களுக்குள் நூறு ரூபாய்களை பெற்றுவிட முடியும் என்ற கணக்குப் போட துவங்கி விடுவான். பிறகு, அது இருநூறாகும்.

கணக்கு வந்தவுடன் அங்கு வேடிக்கை மறந்து விடுகிறது. அதுவும் அவன் செய்ய வேண்டியது மிகச்சிறிய வேலைதான், விளக்கேற்ற வேண்டும். ஒரு நிமிட வேலைதான், அவ்வளவு கூட இல்லை, ஒரு கணத்தில் செய்து விடக் கூடியது. ஆனால் அது கவலையாகி விட்டது. அது அவனது சக்தியை எல்லாம் நீக்கிவிட்டது.

இப்படி தான் சமுதாயம் முழுவதும் உங்கள் சக்தியை உறிஞ்சி விடுகின்றன . உங்களை முழு இருத்தலோடு வாழ விடுவதில்லை .. தளர்வோடு வாழ விடுவதில்லை .. உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய விடுவதில்லை . ஒரு நாள் நீங்கள் வேலைக்கு போகாமல் இயல்பாக உங்கள் விருப்பம் போல், ஒரு நாள் கூட இருக்க இந்த சமுதாயம் இருக்க விடாது .

ஏன் என்றால், நீ இயல்பாக இருந்தால் நீ பலம் பெற்று விடுவாய் . சுய பலம் பெற்று விடுவாய் . சந்தோஷ மனிதனாக மாறிவிடுவாய் பிறகு எந்த சமுதாயத்தையும் , எந்த பூசாரியையும் நம்பி இருக்க மாட்டாய் .

விளையாட்டாக வாழ். விருப்பட்டதை செய் .. வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் ..

SEPTEMPER impartent days

02 World Coconut Day

Sept 05 National Teachers Day (Dr. Radhakrishanan Birth Day Anniversiry), Sanskrit Day Sept

07 World Forgiveness Day

Sept 08 International Litrecy Day

Sept 14 Hindi Day

Sept 15 International Democracy Day, World Endineer's Day

Sept 16 World Ozone Day

Sept 21 World Peace Day (UN), World Alzheimer's Day

Sept 25 Social Justice Day

Sept 27 World Tourism Day

வரலாறு 1 மதிப்பெண் வினா -1

1. பூமியின் மேற்பரப்புக் குளிர்ந்த்தால் உருவாகியவை எது ?
நிலப்பகுதிகள்

2. மழையினால் பூமியில் உள்ள பள்ளங்கள் நிரம்பியதால் ______________ தோன்றின ? பெருங்கடல்கள்

3. நெபுலாக்கள் என்று எவை அழைக்கப்பட்டன ?
விண்துகள்

4. ஆசியக் கண்ட்த்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு எது ?

சிந்து

5. நட்சத்திர மண்டலங்களும் சூரியக் குடும்பமும் எங்கிருந்து தோன்றின ?
நெபுலா

6. வேதகாலம் மற்றும் இதிகாச காலங்களில் குடும்பம் எதன் அடிப்படையில் காணப்பட்டது ? சமூக வாழ்க்கை

7. பலதார மணத்தை வன்மையாகக் கண்டிப்பது எது தர்ம சாஸ்திரம்

8. 4-ம் சவனம் என்ற சடங்கு எதற்காக வேண்டிச் செய்யும் சடங்கு ?
ஆண் மகவு வேண்டி

9. நான் கவிஞனாகவும், என் தந்தை மருத்துவராகவும், என் தாய் தானியம் அரைப்பவளாகவும் இருக்கின்றோம் என்ற ரிக்வேத வரிகள் எதனை உணர்த்துகின்றன ?

சாதி நிலை இல்லாத சமுதாயம்

10. மெளரிய ஆட்சியின் முற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும், பிற்பகுதியில் ___________ சமய வளர்ச்சியும் நடைப்பெற்றது ?

சமண, புத்த

11. மெளரியர் காலத்தில் எவை சிறப்பாகக் கருதப்பட்டது ? தாய் தந்தையர்க்குப் பணி செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல்

12. மெளரியர் காலத்தில் எவை எவை தடை செய்யப்பட்டன

விலங்குகளைப் பலியிடுதல், பொருட்செலவு மிக்கச் சடங்கு

13. சங்க காலத்தில் நில அமைப்பிற்கு ஏற்றவாறு மக்களின் _____________ முறை அமைந்திருந்தன ?

வாழ்க்கை

14. குப்தர் கால பேரரசில் எது கடுமையாகப் பின்பற்றப்பட்டது ?
சாதி முறை

15. பல்லவர் காலத்தில் எவை எவை வீழ்ச்சியடைந்தன ? 

புத்த மற்றும் சமண சமயம்

16. நிலையான நிலவரி யார் ஆட்சியில் தொடங்கப்பட்டது ? ஆங்கிலேயர் ஆட்சியில்

17. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் எவை எவை மேம்படுத்தப்பட்டன ? சாலைகள்

18. அடையாள அட்டை வெளியிட்டவர் மற்றும் விவசாயிகளுக்கு கடன் அளித்தவர் யார் ?
முகமது பின் துக்ளக்

19. உளவுத்துறையை ஏற்படுத்தியவர் யார் ? பிரோஷ்ஷா துக்ளக்

20. நிலப்பகுதி உயரமாகவும், மேல்பகுதி தட்டையாகவும் இருந்தால் அது ________ எனப்படும் ?
பீடபூமி