கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, March 18, 2017

குற்ற பரம்பரைச் சட்டம் - ஏன் ?

ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்தி தண்டிக்கும் வகையில் 1911-இல் இச்சட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

1913-இல் சென்னை ராஜதானியில் இச்சட்டம் அமலுக்கு வந்தது.

இச்சட்டப்படி,

1. மாவட்ட ஆட்சித்தலைவர் எந்த ஒரு சாதியையும் "குற்றப்பரம்பரை' என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது.

2. குற்றவாளி - நிரபராதி என்ற பாகுபாடு கிடையாது. ஒரு சாதியில் பிறந்த அனைவரும் "பிறவிக் குற்றவாளிகள்' என்றது அச்சட்டம்.

3. அச்சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

4. இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்கட்கும் விதி விலக்கு கிடையாது.

5. பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும். இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.

6. கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம்.

7. சந்தேகப்படும்படி ஒருவர் நடந்துகொண்டால்கூட 3 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு. இந்த சட்டத்தின் கீழ், ஒரு தீப்பெட்டியும், கத்தரிக்கோலும் கையில் இருந்தது என்பதற்காக ஒருவர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இப்படி ஏராளமான அடக்குமுறைப்பிரிவுகள் அச்சட்டத்தில் இருந்தன.

No comments:

Post a Comment