கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, April 21, 2017

தன்னம்பிக்கையால் உயிர் பிழைத்தவன்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள் காலை சூரியோதத்துக்கு பதில் பிச்சைகாரர் முகத்தில விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது...

கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்..

பிச்சைகாரன் கலங்கவில்லை கல கல வென சிரிக்க தொடங்கினான் .

அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு..

பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்..

அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான் தண்டனை ரத்து செய்யப்பட்டது...

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

இனிய வணக்கம்...

No comments:

Post a Comment