கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, April 18, 2017

திரையரங்குகளில் தேசிய கீதம் - புதிய அறிவிப்பு

"திரையரங்குகளில் தேசிய கீதம் - புதிய அறிவிப்பு

திரையரங்குகளில், தேசிய கீதம் கட்டாயமாக ஒலிபரப்ப வேண்டும், அப்போது பொது மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டதால், தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது அவர்கள் எழுந்து நிற்க தேவையில்லை என்று கூறப்பட்டது.

மேலும், தேசிய கீதம் ஒலிக்கும் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு விலக்கில், மேலும் சில பிரிவு மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பெருமூளை வாதம், தசைநார்தேய்வு, , 'Parkinsons' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, திரையரங்குகளில், தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது, இனி இவர்கள் எழுந்து நிற்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரத்தை கட்டாயமக்க வேண்டும் என்று, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனுவில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நான்கு வாரங்களில், பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."

No comments:

Post a Comment