கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, May 30, 2017

தனியார் பள்ளிகளில் பயிலும் 25 சதவீத பெயர்ப்பட்டியல் நாளை வெளியீடு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு

பெயர் பட்டியல் நாளை வெளியீடு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் புதன்கிழமை (மே 31) வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில், குழந்தைகளைச் சேர்க்க இணையதளம் மூலம் மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நாளை பட்டியல்: இதில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் புதன்கிழமை (மே 31) வெளியிடப்படும்.

குலுக்கல் முறையில்..

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில், புதன்கிழமை (மே 31) அன்று குலுக்கல் முறையில் சேர்க்கைகான மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும்.

முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும்.

ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவுநிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் வீதம் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் முறையில் தயார் செய்யப்படும்.

ஜூன் 5-க்குள் சேர்க்கை:

சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளியின் தகவல் பலகையில் புதன்கிழமை (மே 31) வெளியிடப்படும். இவர்களுக்கு ஜூன் 5 -ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும்.

No comments:

Post a Comment