கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, May 19, 2017

விளம்பர பலகை வைத்த தனியார் பள்ளிகளுக்கு கடும் நடவடிக்கை பாய்கிறது

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாக விளம்பரம்: விதிமுறைகளை மீறிய தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

 விதிமுறைகளை மீறி பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதாக விளம்பரங்கள் வெளியிட்ட தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

அதிக மதிப்பெண்பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வில் இந்த ஆண்டு முதல் ‘ரேங்க்’ பட்டியல் கிடையாது என்றும், மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திய முறை ரத்து செய்யப்பட்டதாகவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனும், செயலாளர் உதயச்சந்திரனும் தெரிவித்தனர்.

அதன்படி, கடந்த 12-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு ‘ரேங்க்’ பட்டியல் இல்லாமல் வெளியிடப்பட்டது. இதே முறையை பின்பற்றியே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவும் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட இருக்கிறது.

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதுடன், பள்ளிகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் போட்டிகளை தவிர்ப்பதற்காகவும் கொண்டுவரப்பட்ட இந்த புதிய முறைக்கு பெரும்பாலான பெற்றோர், மாணவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

அதேபோல், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, பிளஸ்-2 தேர்வில் தங்கள் பள்ளி அதிகமான மதிப்பெண் பெற்று இருக்கிறது என்பது போன்ற அறிவிப்பையோ, விளம்பரத்தையோ வெளியிடக் கூடாது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று சில நாளிதழ்களில் (தினத்தந்தி அல்ல) சில பள்ளிகள் பிளஸ்-2 தேர்ச்சி தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு இருந்தன.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலாளர் உதயச்சந்திரனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

அரசு ஆணை விதிமுறைகளை மீறி இதுபோன்று விளம்பரங்களை தனியார் பள்ளிகள் கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரம் கொடுத்துள்ள பள்ளிகளின் நிர்வாகத்துக்கு உடனடியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.சம்பந்தப்பட்ட பள்ளிகள் அரசு ஆணை விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது ஏன்? என 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment