கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, May 28, 2017

உங்களின் தன்னம்பிக்கை வளர வேண்டுமா ?

உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் சொத்து. தன்னம்பிக்கை குறைந்தவர்களால் எதையும் சாதிக்க முடியாது.. உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள்:

1 . உங்களிடம் நீங்களே தனிமையில் பேசுங்கள்... நீ சாதிக்க பிறந்தவன் என.

2. நேர்த்தியாக ஆடை அணியுங்கள். விலை குறைந்ததோ, அதிகமானதோ கவலை இல்லை... இருப்பதை நேர்த்தியாக அணியுங்கள்.

3 . எதிர்மறையான பயங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.

4 . வாழ்க்கை விளையாட்டு என்பதை மனதில் நிறுத்தி, எதையும் எதிர்கொள்ளும் வலிமையை மனதிற்கு கொடுங்கள்.

5 . நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள்.. தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும்.

6 . உள்ளம் எப்படியும் இருக்கட்டும்... முகத்தில் மட்டும் சிறு புன்னைகையுடன் இருக்க பழக்குங்கள்.

7 . சின்ன இலக்குகளை தினமும் நிர்ணயியுங்கள்.. அதை சாதித்து விட்டு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்..

8 . தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.. மூச்சை அடிக்கடி இழுத்து, நுறையீரலில் புதுக்காற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.

9 . இவை எல்லாவையும் விட மிக முக்கியமாக.. உங்களுக்கு நடந்த நல்லவைகளை அடிக்கடி பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.. நிச்சயம் தன்னம்பிக்கை வளரும்..

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment