கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, May 23, 2017

பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம்

"நடப்புக் கல்வியாண்டு முதல் +1 தேர்வுகளை பொதுத்தேர்வு ஆக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரனும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றார்.

அப்பொழுது செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுருப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன்படி 1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்புக்ளுக்கான பாடத்திட்டங்கள் வரும் 2018-19 ஆம் கல்வி ஆண்டிலிருந்தும்,

2,7,10 & 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வரும் 2019-20 ஆம் கல்வி ஆண்டிலிருந்தும்,

3,4,5 & 8 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வரும் 2020-21 ஆம் கல்வி ஆண்டிலிருந்தும் மாற்றம் செய்யபட உள்ளது.

இவ்வாறு மாற்றப்படும் பாடத்திட்டங்கள் மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களுக்கு இணையாக இருக்கும்.

இந்த புதிய பாடங்களில் தமிழர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த பாடத்திட்டங்களை நடத்துவதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.

நடப்புக் கல்வியாண்டு முதல் +1 தேர்வுகளை பொதுத்தேர்வு ஆக்குவதற்கான அரசாணை தற்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் முன்னர் அறிவித்தபடி +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு சரிசம முக்கியத்துவம் வழங்கும் விதமாக, பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களானது ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 600 என வழங்கப்படும்.

அத்துடன் இரண்டுக்கும் சேர்த்துஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலானது வழங்கப்படும். அதே போல மாணவர்களது தேர்வு நேரமானது 3 மணி நேரத்திற்கு பதிலாக 2.30 மணி நேரமாக குறைக்கப்படும்.

மேனிலை வகுப்பு மாணவர்களுக்கு வார விடுமுறை நாட்களில் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக, மூன்று மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். அதே போல இனிமேல் மொத்தமுள்ள மதிப்பெண்களிகள் 10% சதவீத மதிப்பெண்கள் அக மதிப்பீடுக்கென ஒதுக்கப்படும்.

அதே போல கல்லூரிகளில் உள்ளது போன்று +1 வகுப்பு மாணவர்களுக்கு அரியர்ஸ் முறை அறிமுகம் செய்யப்படும். அதேபோல் பள்ளிகளில் மாணவர்களுக்கு வேலை நேரம் முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தரப் படுத்திக்கொள்ளும் விதமாக இது அமையும்.

மாநிலம் முழுவதும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதுவரை ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும்.

முக்கியமாக ஆறு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது அறிவியல் வகுப்பின் ஒரு பகுதியாக கணிப்பொறி அறிவியல் சேர்க்கப்படும். நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் நமதுஅரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்."

No comments:

Post a Comment