கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes
Blogger Widgetsதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,
தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்

Friday, May 19, 2017

CBSE RESULT MAY 27

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: 27-ந் தேதி வெளியாகிறது

சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 27-ந் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு நடத்தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 12-ந் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது.

மாநில பாட வாரியத்தின் தேர்வு முடிவுகள் கடந்த காலங்களை விட சிறிது தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பாடவாரியத்தின் (சி.பி.எஸ்.இ) தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்களின் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது எதிர் பார்ப்பாக உள்ளது.

என்ஜினீயரிங் மற்றும் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். இன்னும் ஒரு வாரம் வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 27-ந் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.