கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, May 28, 2017

CBSE RESULT TODAY CONFORM

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று ''ரிசல்ட்'' வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10 ஆயிரத்து, 678 பள்ளிகளைச் சேர்ந்த, 4.60 லட்சம் மாணவியர் உட்பட, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தேர்வில், விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், கருணை மதிப்பெண் வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் தடை விதித்தது.

அதனால், கருணை மதிப்பெண் இன்றி, தேர்வு முடிவுகளை, 25ல் வெளியிட, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், கருணை மதிப்பெண் முறையை, திடீரென ரத்து செய்யக்கூடாது என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால், தேர்வு முடிவு வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில், வாரிய உறுப்பினர்கள் கூடி ஆலோசித்து, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள், இன்று நண்பகல், 12:00 மணிக்கு முன் வெளியிடப்படும் என, அதிகாரப்பூர்வமாக, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகளை,

www.results.nic.in,

www.cbseresults.nic.in,

www.cbse.nic.in

என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment