கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, November 25, 2017

கண் (கலங்கிய )கதை

கண் கலங்கிய கதை

என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும், இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க"... என்றாள் மனைவி.

என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி... நீ ஏன் டென்சனாகுற...

எனக்கு பிடிக்கல அவ்வளோதான்... சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க...

நான் இதுக்கொரு முடிவு கட்றேன்... நீ கிளம்பு செல்லம் நாம சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் நைட் டின்னர் சாப்பிட்டு வந்துடலாம் "என்று அவளை அணைத்தாவாறே சொன்னான் மகேஷ்!

மறுநாள் காலை...

அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா "

" எங்கடா மகேஷ்??? "

" உன்ன ஹோம்ல சேர்த்துடுறேன் மா... அங்க உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்... உன்னபோல நிறைய பேர் இருப்பாங்க அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா...

மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்... உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு.. உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது... எல்லா கஷ்டமும் தீர்ந்து இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா... என் கடைசி காலத்த இங்கயே கழிச்சிட்டு போயிடுறேன்டா...

" உன்ன இப்போ விளக்கம்லாம் கேக்கல நான் . உயிர வாங்காம கிளம்பு "என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல கலங்கி நின்றாள் மரகதம்!

இரண்டு மாதங்கள் உருண்டோடின...

மகேசும் மகாவும் கடைத்தெருவுக்கு சென்று திரும்பும் வேளையில்... எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட மகேஷ் சிறு காயத்துடன் தப்பியிருந்தான்... மகாவிற்கு பலத்த அடிபட்டு சுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்!

" டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க டாக்டர்... " Icu வில் இருந்து வெளியேறிய டாக்டரிடம் அழுகுரலில் கேட்டான் மகேஷ்!

உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல...ஆக்ஸிடன்ட்ல சிதறின சில கண்ணாடி துண்டுகள் அவங்க விழித்திரைய பலமா கிழிச்சிருக்கு... அவங்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை...

அய்யோ டாக்டர் மகாவுக்கு கண்பார்வை கிடைக்க ஒண்ணுமே பண்ண முடியாதா?

" ஒரு வழியிருக்கு இறந்தவங்க யாரோட கண்ணையாவது அவங்களுக்கு உடனே பொருத்தினா பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு... நாங்க ஐ பேங்க்ல சொல்லியிருக்கோம் நீங்களும் உங்க சைட்ல ட்ரை பண்ணுங்க... என்று சொல்லி நடந்த டாக்டரை கலங்கும் கண்களோடு பார்த்து கொண்டிருந்த மகேசின் சொல்போன் சிணுங்கியது!

மரகதம் இருக்கும் ஹோம் நம்பர் திரையில் வர... 'நானே கடுப்புல இருக்கேன் இந்த கிழவி வேற பேரனை பார்க்கணும் பேசனும்னு உயிர வாங்குது சே சனியனை கை கழுவி விட்டாலும் நம்மள விடாது போல' என்று முணுமுணுத்துக்கொண்டே மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தான் மகேஷ்!

ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் வேகமாய் மகேஷிடம் வந்து...

மகேஷ் யூ ஆர் சோ லக்கி... உங்க மனைவிக்கு கண் கிடைச்சிடுச்சி... இப்போவே ஆபரேஷன் செஞ்சிடலாம்... நீங்க நர்ஸ்கிட்ட கேட்டு பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சிடுங்க .

ரொம்ப நன்றி டாக்டர்... ரொம்ப நன்றி " டாக்டரின் கைகளை பிடித்து கண்ணீர் விட்டான் மகேஷ்!

மூன்று மணிநேரம் கழித்து ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்...

" டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க "

ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது மகேஷ்... இன்னும் ஏழுநாள் கழித்து கட்டு பிரிச்சிடலாம்... அவங்க மயக்கம் தெளிய ரெண்டு மணி நேரமாகும் அதுக்கப்புறம் நீங்க போய் அவங்கள பாருங்க...

மகா மயக்கம் தெளிந்து கட்டிலில் படுத்திருந்தாள்...

" மகா உனக்கு ஒண்ணுமில்ல மகா நிச்சயம் பார்வை திரும்பிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க..

. ம்ம்ம்.... நாம அத்தைய தனியா தவிக்க விட்ட பாவமோ என்னவோ இப்படி நடந்துடுச்சி... திரும்ப அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க நம்ம கூடவே வச்சுக்கலாம்.... நான் கட்டு பிரிச்சி முதல்ல பார்க்கறது அவங்க முகமாத்தான் இருக்கணும்...!

சரி மகா காலையிலே அம்மா போன் பண்ணங்க... சன்டே நான் அவங்கள பார்க்க போகும் போதே பேரக்குழந்தைய பார்க்கணும் போல இருக்குனு கேட்டாங்க.... அதுக்குதான் போன் பண்ணி தொல்ல கொடுக்கறாங்கனு நான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன் இதோ இப்பவே அம்மாவுக்கு போன் பண்ணி கிளம்பி ரெடியா இருக்க சொல்லிடுறேன் மகா...

மகேஷ் ஹோம்க்கு போன் பண்ண மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது!

" ஹலோ மேடம் நான் மரகதம் அம்மாவோட மகன் பேசறேன் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!

என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே... படிச்சவங்கதானே நீங்க காலையில அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி... கடைசியா மகனையும் பேரனையும் பார்க்கணும்னு சொன்னாங்க... உங்களுக்கு போன் பண்ணா கட் பண்ணிட்டு சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டிங்க... அவங்க மரணத்தோட போராடி உயிர விட்டாங்க... அவங்க கடைசி ஆசைய கூட நிறைவேற்றாத நீங்கலாம் என்ன மனுசங்களோ.... அப்புறம் ஒரு விசயம் எங்க ஹோம்ல யாராச்சும் இறந்துட்டா அவங்க கண்களை தானமா கொடுக்கறது பழக்கம்... உங்களுக்கு போன் பண்ணா நீங்க எடுக்கல அதனால நாங்களா முடிவு பண்ணி கண்ண தானமா கொடுத்துட்டோம்... உங்க அம்மா உயிரோட இருக்கும் போது உங்கள பார்க்க ஆசப்பட்டாங்க... அவங்க கண் சுகம் ஆஸ்பிட்டல்ல ஒரு லேடிக்கு வச்சிருக்காங்க ஒரு வாரம் கழிச்சி அவங்க கண்ணையாவது போய் பாருங்க அவங்க ஆத்மா நிம்மதியாகும்!

போனை காதிலிருந்து தரையில் தவறவிட்டு அம்மாாா என்று அழுதபடியே ஓடி மருத்துவமனையின் அறிக்கையை தேடி பிடித்து பார்த்தவன் அதிர்ந்தான்...

அவள் மனைவி மகாவிற்கு கண்தானம் கொடுத்தவர் என்னும் அறிக்கையில் மரகதம் என்றிருந்தது! இறந்த பின்பும்ம் நம்மை வாழ வைப்பது நம் அன்னை மட்டுமே!

முகத்தில் வரிகள் விழுந்ததால்....

முகவரி மாறிப்போனதோ..... முதியோர் இல்லத்திற்கு!

எழுதிய எழுத்தாளர்க்கு நன்றிகள் பல.

Monday, November 20, 2017

தவறான பார்வையிலே

தவறான பார்வையிலே

ஓர் ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரங்கள் அருகருகே இருந்தன!! 🌳🌳

அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 மரத்திடம் கேட்டது.

மழை காலம் தொடங்க☁ இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது .

அடுத்த மரத்திடம் கேட்டது. அது அனுமதித்தது

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் .

அன்று பலத்த மழை. ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது.

எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது!!!!

அதற்கு மரம் கூறிய பதில் :

எனக்கு தெரியும் நான் வயதாகி பழுதடைந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன் . தண்ணீரில் அடித்து செல்லப்படுவேன் . நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!!

கருத்து: உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீ்ர்கள் அவர் அவர் சூழ்நிலை அவருக்கு மட்டும் தான் தெரியும்!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்... 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

Friday, November 17, 2017

நான் சொன்னது தப்பா ? சரியா ?

என்ன தவறு ?

நேத்து எங்கவீட்டுல அயன்பாக்ஸ் வேலை செய்யலை.பக்கத்துவீட்டுல அயன் பாக்ஸ் கேட்டேன்.இங்கேயே அயன் பண்ணிட்டு போங்கனு சொன்னாங்க....
இன்னைக்கு அந்த பக்கத்து வீட்டுக்காரன் ..என் கிட்ட வீடு கூட்ட தெடப்பம் கேட்டான் . இங்கையே கூட்டிட்டு போங்கனு சொன்னேங்க .
அதுக்கு போயி எம்மேல கோவப்பட்டு முறைச்சி பாத்துட்டு போய்ட்டாங்க..... 樂樂樂
樂 நான் என்ன தப்பா சொல்லிட்ட அவங்க சொன்னததான நானும் சொன்ன... 樂樂樂

Tuesday, November 14, 2017

டாக்டரையே கடுப்பாக்கிய நம்மாள்

டாக்டர் ஜோக்

ஒருவன் நல்ல மழையில் ஒரு டாக்டர் கிளினிக்கில் நுழைந்து டாக்டரிடம் கேட்டான்,

*அவன் :-*டாக்டர் சார், வீட்டுக்கு வந்து பார்க்க நீங்க எவ்வளவு Fees வாங்குவீங்க.?

*டாக்டர்* :- 300 ரூபாய் வாங்குவேன்..

*அவன்* :- அப்படியா, ok sir.. சீக்கிரம் கிளம்புங்க.. எங்க வீட்டுக்கு போகனும்..

டாக்டரும் அவனை தன்னுடைய காரில் ஏற்றி அவன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போனார்..

வீட்டில் நுழைந்ததும் டாக்டர் கேட்டார்..

*டாக்டர்* :- நோயாளி எங்கே..? அதற்கு அவன் சொன்ன பதிலில் டாக்டர் மயக்கமே போட்டு விழுந்தார்.

அப்படி என்ன தான் சொல்லிருப்பான் நம்மாள். . . . .

*அவன்* :- எங்க வீட்ல நோயாளி யாரும் இல்ல சார்.. இந்த கடும் மழையில ஆட்டோகாரன் எல்லோரும் இங்க வர Rs.500/- கேக்குறான்... நீங்க வெறும் Rs.300/- தான் கேட்டீங்க அதான்.. எனக்கு வேற வழி தெரியல..!!".

*டாக்டர்*:- அட நாரப்பயல, அதுக்கு நானாடா கிடைச்சேன்...

Saturday, November 11, 2017

மனைவி பற்றிய சில நகைச்சுவை

மனைவியின் கனவு

😊கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா

மனைவி: தனியா வந்துருப்பாளே

கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்

மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே

இனி பேசுவ 🤔😳😇 ____________________________ கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,

மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?

கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma

மனைவி : 👊👊👊👊👊 ____________________________

மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தான் தியாகி...!!

கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தானே பெரிய தியாகி....!!!

😄😄😄 ____________________________

மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி வந்திருக்கீங்க...?

கணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !

மனைவி: !!!!!!!!!!!!!!!

____________________________

மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?

கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..

மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?

கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே?

____________________________

☔☔☔☔☔🙆🙆🙆🙆🙆 ☔

மழை, 💃மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???

ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.. வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.

😂😂😂😂

____________________________

தத்துவம்

மின்சாரம் இல்லாதபோது ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு குளிர்விட்டு போயிடுது...!!

😜😜 சம்சாரம் இல்லாதபோது வீட்டில் இருக்கிற கணவனுக்கு குளிர்விட்டு போயிடுது,,!

😜😜

----------------------------------------------

Pudicha share pannuga...

Thursday, November 9, 2017

2018 ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் (holidays)

2018-இல் 23 நாள்கள் அரசு விடுமுறை

*******************

வரும் 2018-ஆம் ஆண்டில் 23 நாள்களை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பண்டிகைகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு 23 நாள்கள் விடுமுறை நாள்களாக வருகின்றன.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

ஆங்கில புத்தாண்டு (ஜனவரி 1) திங்கள்கிழமை.

பொங்கல் (ஜனவரி 14) ஞாயிற்றுக்கிழமை

திருவள்ளுவர் தினம் (ஜனவரி 15) திங்கள்கிழமை.

உழவர் திருநாள் (ஜனவரி 16) செவ்வாய்க்கிழமை.

குடியரசு தினம் (ஜனவரி 26) வெள்ளிக்கிழமை.

தெலுங்கு வருடப் பிறப்பு (மார்ச் 18) ஞாயிற்றுக்கிழமை.

மகாவீரர் ஜெயந்தி (மார்ச் 29) வியாழக்கிழமை.

புனித வெள்ளி (மார்ச் 30) வெள்ளிக்கிழமை.

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (எப்ரல் 1) ஞாயிற்றுக்கிழமை

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினம் (ஏப்ரல் 14) சனிக்கிழமை.

மே தினம் (மே 1) செவ்வாய்க்கிழமை.

ரம்ஜான் (ஜூன் 15) வெள்ளிக்கிழமை.

சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) புதன்கிழமை.

பக்ரீத் (ஆகஸ்ட் 22) புதன்கிழமை.

கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பர் 2) ஞாயிற்றுக்கிழமை.

விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) வியாழக்கிழமை.

மொஹரம் (செப்டம்பர் 21) வெள்ளிக்கிழமை.

காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) செவ்வாய்க்கிழமை.

ஆயுத பூஜை (அக்டோபர் 18) வியாழக்கிழமை.

விஜயதசமி (அக்டோபர் 19) வெள்ளிக்கிழமை.

தீபாவளி (நவம்பர் 6) செவ்வாய்க்கிழமை.

மீலாது நபி (நவம்பர் 21) புதன்கிழமை.

கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) செவ்வாய்க்கிழமை.

********************

Tuesday, November 7, 2017

புதிய கவிஞர்களின் நகைச்சுவை படைப்புக்கள்

புதிய கவிஞர்களின் நகைச்சுவை படைப்பு

1.பிறப்பு "ஒரு முறை"

இறப்பு "ஒரு முறை"

காதல் "ஒரு முறை"

வாழ்க்கை "ஒரு முறை"

ஆனால் சாப்பாடு மட்டும் தினம் 3 முறை அதனால் கூச்சப்படாமல் சாப்பிட்டுங்க... ஆரோக்கியமா இருங்க

2. 😎விடியும் வரை தூங்குவது தூக்கம் அல்ல...

நம்மால் முடியும் வரை தூங்வதே தூக்கம்...

அதனால நல்ல தூங்குங்க

3. 😎யாருடைய இதயத்தையும் உடைத்து விடாதீர்கள்... ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம்...

அதற்கு பதில் அவர்கள் எலும்புகளை உடையுங்கள் அது 206 உள்ளது... என்ன நா சொல்றது

4. 😎இவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்போம்னு நினைக்கிறது... " பெண்கள் குணம் "

😎வாழ்க்கை துணையா யார் வந்தாலும் அவளை சந்தோசமா வச்சுகிறது... " ஆண்களின் குணம் "

5. 😎திருமணங்களில் திருமண ஜோடிகளைக் கவனிப்பவர்களை விட தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...

6. 😎லவ் பண்றவன் பீர் அடிப்பான்...

😎லவ் failure ஆனவன் hot அடிப்பான்... ஆனால்

😎ஒன் சைடா லவ் பண்றவன் மட்டும் பக்கத்துல இருக்குற நண்பன சாகடிப்பான்...

7. 😎லவ்வு " சோறு " கூட போடாது... ஆனால்

😎நட்பு " மட்டன் " பிரியாணியே "போடும்...

8. 😎மறந்தாலும் மறக்க முடியாதது காதல்... ஆனால் 😎இறந்தாலும் இழக்க முடியாதது நட்பு மட்டும்தான்...

இந்த செய்திய உங்க நண்பர்களுக்கும் அனுப்புங்க

Monday, November 6, 2017

படித்துவிட்டு கடுப்பாகாதீர்

*ஆட்கள் தேவை*

சென்னை பிரபல தனியார் கம்பெனியில் பணிபுரிய படித்த ஆண்கள் மட்டும் தேவை..

(வயது தடையில்லை)

*தங்குமிடம்:* இலவசம்,

*மாத சம்பளம்*: 175250/-

*இடம்:* மெரினா கடற்கரை.

*வேலை:* சுனாமி வரும்போது அலைகள் வெளியேறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்..!

😜😜😜😜😜

படித்துவிட்டு கடுப்பானால் நிர்வாகம் பொருப்பல்ல..

எப்படித்தான் யோசிப்பாங்களோ !

Sunday, November 5, 2017

தென்னிந்திய சில சிறப்புகள்

தென்னிந்திய பற்றிய சிறப்பு தகவல்கள் 

தென்னிந்திய தலைவர்கள்:-

👍🏻 தென்னாட்டு காந்தி - அண்ணா

👍🏻 தென்னாட்டு - போஸ் - பசும்பொண் முத்துராமலிங்கம்

👍🏻 தென்னாட்டு தாகூர் - வெங்கடரமணி

👍🏻 தென்னாட்டு திலகர் - வ. உ. சி.

👍🏻 தென்னாட்டு ஜான்சிராணி - அஞ்சலை அம்மாள்

👍🏻 தென்னாட்டு பகத்சிங் - வாஞ்சிநாதன்

👍🏻 தெற்காசியா சாக்ரடீஸ் - பெரியார்

தென்னிந்தியாவின் சிறப்புகள்:-

👍🏻 தென்னிந்தியா ஸ்பா - குற்றாலம்

👍🏻 தென்னிந்தியா நயாகரா - ஒகேனக்கல்

👍🏻 தென்னிந்தியா கும்பமேளா - மகாமகம்

👍🏻 தென்னிந்தியா ஏதென்ஸ் - மதுரை

👍🏻 தென்னிந்தியா டெட்ராய்ட் - சென்னை

👍🏻 தென்னிந்தியா மான்செஸ்டர் - கோயம்பத்தூர்

👍🏻 தென்னிந்தியா தாஜ்மஹால் - திருமலை நாயக்கர் மஹால்

👍🏻 தென்னிந்தியா கங்கை - காவேரி

👍🏻 தென்னிந்தியா ஆக்ஸ்போர்டு - பாளையங்கோட்டை

👍🏻 தென்னிந்தியா வெனிஸ் - ஆலப்புழா

👍🏻 தென்னிந்தியா நுழைவாயில் - சென்னை

👍🏻 தென்னிந்தியா உயர்ந்த சிகரம் - ஆனைமுடி

Wednesday, November 1, 2017

இப்படியும் ஓர் மனைவி

நல்ல மனைவி

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

மனைவி: *"ஏன், என்ன ஆச்சு?"*

கணவன்: *"மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"*

மனைவி: *"தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"*

தொலைக்காட்சி:

*"இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"

* மனைவி: *"இந்த சிகரெட்ட நிறுத்துன்னா கேட்கறியா?"*