கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, December 18, 2017

மரண விலாஸ் ஓட்டலும் நம்ம ஈரோட்டுக்காரரும்

"மரண விலாஸ் *ஹோட்டல்"

SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?

costumer : தோசை வேணும்.

SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?

costumer : வெங்காய தோசை.

SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?

costumer : சின்ன வெங்காயம்.

SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?

costumer : நாட்டு வெங்காயம்.

SERVER : சின்னதா நறுக்கியதா?

பெருசா நறுக்கியதா?

costumer : சின்னதா நறுக்குனது.

SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?

costumer : அதிகமா. SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?

costumer : அறுத்துட்டே போடு.

SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?

costumer : சிவப்பு.

SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?

costumer : அதிகமா உள்ளது.

SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?

costumer : உரம் போடாதது.

SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?

costumer : கழுவிட்டு போடு.

SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?

costumer : நல்லா வேகணும்.

SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா?
நெய் ஊத்தவா?

costumer: நெய்.

SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?

costumer : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.

SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.

(சாப்பிட்ட பிறகு)

SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.

costumer: கேஷா வேணுமா? செக்கா வேணுமா?

SERVER : கேஷ்

costumer : சில்லரையா தரவா? நோட்டா தரவா?

SERVER : நோட்டா தாங்க.

costumer : பழயை நோட்டா?

புதிய நோட்டா?

SERVER : புதியது.

costumer: காந்தி படம் போட்டது? போடாததா?

SERVER : காந்தி படம் போட்டது.

costumer : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?

SERVER : கண்ணாடி போட்டது.

costumer : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?

SERVER : சாதா கண்ணாடி.

costumer : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?

SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க.நீங்க ஈரோட்டுகாரருனு தெரியாம வாய கொடுத்துட்டேன். நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.

😂😂😂😂😂

No comments:

Post a Comment