கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, January 31, 2017

வங்கி ஊழியர் பிப்ரவரி 28 ல் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் பிப்ரவரி 28-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பணம் எடுப்பதற்கான உச்ச வரம்ப்பை முழுவதுமாக நீக்க கோரியும், வங்கிகள் தனியார் மயமாக்கும் நடவடிக்கை முடிவை கைவிட கோரியும்,பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வு மே 7

மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மார்ச் மாதம் 1-ம் தேதி வரை நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

www.cbseneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தலைக்கணம்

படித்து ரசித்த ஒரு அருமையான கதை.

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான்.

ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான்.

தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார்.

நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல்.

இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் . கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன.

''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.

அவனும் ஆசிரியர் சொன்னபடியே, "அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.

எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? " அவமானம் பொங்கியது .

கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் . ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா?"

அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு."

ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...!💝🔔

Monday, January 30, 2017

தண்ணீர் - தன் நீர்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.

தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது. அவன் யோசித்தான்.

தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.

தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

கதை பிடித்திருந்தால் மற்றவருக்கும் பகிருங்கள்.

மனைவி

மனைவிக்கு உள்ள சிறப்புகள்

💚மனைவி என்றால் அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்💚

💚பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்💚

💚ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்💚

💚பெண் என்கிற கிரீடம் அழகு தான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்💚

💚கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்💚

💚அன்பாகப் பேசுங்கள் சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்💚

💚மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்💚

💚உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்💚

💚உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்💚

💚சமையலை பாராட்டுங்கள் அவள் சமையல் அறையில் பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக அவள் பட்ட அன்பின் சின்னம்.💚

💚அவள் செய்வது சமையல் அல்ல. அன்பின் அழகு. தினசரி நன்றி சொல்லுங்கள். குறுந்தகவல்களை மனைவிக்கும் அனுப்பலாமே💚

💚அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி. வாழ்க்கை முழுதும் கூட வரும் அன்பு தேவதை💚

💚கடவுள் நம்முடன் இருக்கமுடியாது என்பதற்காக கடவுள் கொடுத்த வரம் அன்னையும் மனைவியும்💚

💚அவள் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்து கொள்ளுங்கள். மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது. புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையை நீங்களும் அழகாய் வாழலாம் 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶 

பின்குறிப்பு :
அவரவர் மனைவியை மட்டும் நேசிக்கவும்.

நன்றி

திரு சகாயம் அவர்கள் பற்றி ஒரு பார்வை

திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை !

பெயர்: உ.சகாயம்

பிறப்பு: பெருஞ்சுணை கிராமம். புதுக்கோட்டை மாவட்டம்.

ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉️

பெற்றோர்: வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.

அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗

அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗

தொழில்: சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்

மிகவும் பிடித்த வாசகம்: லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து உயர உயரப் பற… வானம் வசப்படும்

அடிக்கடி கேட்ட வாசகம்:

1.உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….

2.இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...

நீண்டகால சாதனை:

23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..

கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.

மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம் மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼️

சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼️

பாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼️

கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼️

நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம், கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம், தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼️

நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது

உச்சகட்ட சாதனை: உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.

நண்பர்கள்: அரசியலில் யாருமில்லை.

எதிரிகள்: ஊழல் பெருச்சாளிகள்.

ஆறுதல்: என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள். அவ்வப்போது நீதிமன்றம்.

பலம்: நேர்மை

பலவீனம்: ஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.

லட்சியம்: ஊழல் இல்லா இந்தியா கிராமப்புற ஏழைகளுக்காக அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை. இதுவரை அறிந்த உண்மைகள்: நேர்மை நிச்சயம் வெல்லும், சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.

இதுவரை புரியாதது: அடுத்த பதவியும் இடமும்

விரும்புவது: தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி❗

விரும்பாதது: முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை ?

நண்பர்களே..! நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை. சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை, நம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அறியத்தருவோம். ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.

எவ்வளவு தேவையற்ற விஷயங்களை Shere செய்கிறோம் இதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை கருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான் சகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை -

உங்களில் ஒருவன்.

இன்று தியாகிகள் தினம்

தினம் : தியாகிகள் தினம்

நாள் : 30-January

#தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது....

*இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்......

*அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது......

*சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்......

*நாடு சுதந்திரம் பெற்றதில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது.....

*1948 ஜன.30ம் தேதி, காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்......

*இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது.....

*அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது....

*உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு....

*இந்த தியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த, அவர்களின் கருத்துக்களையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகளின் கனவுகள் நனவாகிட அனைவரும் உழைத்திடுவோம்....

Sunday, January 29, 2017

தையற்காரரின் தத்துவம்

🎁தையற்காரர் ஒருவர் ,தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்.

துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் , “அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது ...மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்...?” என்று கேட்டான்.

“ நீ சொல்வது உண்மைதான்” என்றார் தையற்காரர் . “கத்திரிகோல் அழகாகவும் ... மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் , அதன் செயல் வெட்டுவது.அதாவது பிரிப்பது! ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது.

ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல “ என்றார்.

என்ஜினீயரிங் படிப்புக்கும் பொதுத் தேர்வா ?

நாடு முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ என்ற பொது நுழைவுத் தேர்வை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இத்தேர்வை தமிழக மாணவர்கள் எழுதுவதற்கு கடந்த வருடம் விதிவிலக்கு அளிக்கப்பட்டது,இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்துவது போல என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு பொதுவான ஒரே நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுதி குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற வேண்டும் என்ற புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ந்தேதி நடக்கும் மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.உயர் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வருகிறது. தேசிய தேர்வு ஏஜென்சி மூலம் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடத்த முடிவு செய்துள்ளது.

அனைத்து தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களிலும் உயர் கல்வி பெற இத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். இதுபற்றிய முழு விவரங்களை புரிந்து கொண்ட நிதி மந்திரி அருண்ஜெட்லி பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை 2018 கல்வி ஆண்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மூலம் செயல்படும் ‘நே‌ஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ இந்த பொது நுழைவுத் தேர்வை மாணவர்களுக்கு நடத்த இருப்பதால் மாணவர் சேர்க்கை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக நடைபெறும்.

மேலும் தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு பல்வேறு தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. பொது நுழைவுத் தேர்வு ஒன்றை மட்டும் எழுதினால் போதுமானது.தற்போது ஏ.ஐ.சி.டி.இ., ஐ.ஐ.டி., சி.எஸ்.எஸ்.இ., கேட், காட், நீட், ஐ.ஐ.எம். போன்று தனித்தனியாக தேர்வுகள் எழுதி பல்வேறு தொழில் நுட்ப பாடப்பிரிவுகளில் சேருகிறார்கள்.இது மாணவர்களுக்கு சிரமத்தையும், கஷ்டத்தையும் கொடுப்பதால் நாடு முழுவதும் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே போதும் என்று மத்திய அரசு கருதி இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகம் உள்பட மாநிலங்களில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் அரசே இத்தேர்வை நடத்தி பெரிய அளவில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இனிவரும் காலங்களில் அதனை மாற்றி மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்’பொது தகுதித்தேர்வு நடத்துவது போல பொறியியல்- தொழில்நுட்ப கல்லூரிகளிலும் ஒரே பொதுத்தேர்வு நடத்தும் வகையில் இத்திட்டம் தயார் செய்யப்படுகிறது.

இன்றைய மொக்கை கேள்வி

சூரியன் 6 மணிக்கெல்லாம் வருது, இன்னும் தூங்குறியே சோம்பேறின்னு திட்ரவங்க..

சூரியன் மாலை 6 மணிக்கே தூங்கப்போகுதே, நாம போனா சும்மா இருப்பாங்களா..?

பதில் அனுப்புங்க

வாழ்க்கையும் செல்போனும்

1)சோகத்தை ~ Delete செய்யுங்க.

2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க.

3)சொந்தங்களை~ recharge செய்யுங்க.

4)நட்புகளை ~Down load செய்யுங்க.

5)எதிரிகளை ~Erase செய்யுங்க.

6) உண்மையை ~Broad cast செய்யுங்க.

7)துக்கத்தை ~switch off செய்யுங்க.

8)வேதனையை ~Not reachable செய்யுங்க.

9)பாசத்தை ~Incoming செய்யுங்க.

10)வெறுப்பை ~outgoing செய்யுங்க.

11) சிரிப்பை ~Inbox செய்யுங்க.

12)அழுகையை ~outbox செய்யுங்க.

13)கோபத்தை ~Hold செய்யுங்க.

14)இன்முகத்தை ~send செய்யுங்க.

15)உதவியை ~ok செய்யுங்க.

16)இதயத்தை ~vibrate செய்யுங்க. பிறகு பாருங்க.. வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்!!

மனைவியின் பார்வையில் கணவன்

தினம் ஒரு குட்டிக்கதை. புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்...

திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது! அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்...

நல்ல உள்ளம் கொண்ட அந்த "கணவன்" தன் "மனைவியை" தூக்கி வைத்துக் கொண்டார்!

நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் என் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்...

ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்ததும் திரும்பிச் சென்றது!

பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தான்.

அடுத்த கனமே மனைவி கோபத்துடன், "எல்லோரும் "நாய்" வந்தா "கல்லை" தூக்கி எரிவார்கள்! ஆனால், தன் மனைவியையே தூக்கி எரியும் கணவனை இப்பபோது தான் பார்க்கிறேன்." என்றாள்..

நீதி:- கணவன் என்னதான் நல்லது செய்தாலும் அவன் மனைவிக்கு அது தப்பாக தான் தெரியும்.

Saturday, January 28, 2017

அரசியல் தந்திரம்

எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?வாங்கிட்டு போடலன்னா?"

"அட...விடுறா... வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? குடிப்பான். அவன் குடிக்குற பார் நம்மளது.

ஓவரா குடிச்சா-குடல் வெந்து ஆஸ்பித்திரில சேர்வான். ஆஸ்பித்திரியும் நம்மளது.

அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது... கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...

நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...