கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, February 28, 2017

பொறுப்பான நாயும் வெறுப்பான கடைக்காரரும்

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்..

திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு…

என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு…

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். ..

நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..

அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது…

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்.

கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.

………………………………………………………………………………………………………………………………… Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது...

கல்யாணம் பண்ணினவனுக்கு ஏதுங்க மன நிம்மதி

ஒருத்தரு , மன நிம்மதி வேணும்ன்னு... ஒரு சாமியாரை பார்க்க போயிருக்காரு..

சாமியார்ட்ட , "வாழ்க்கை அமைதியா , சந்தோஷமா போகணும் , அதுக்கு நா என்ன செய்யணும், சாமி "னு கேட்டுருக்காரு.

சாமியார், " உங்க, மனைவியோட சமையலை புகழ்ந்து பாராட்டியிருக்கிறீங்களா" னு கேக்கவும் இவரும் , "கல்யாணமாயி, இந்த இருவது வருஷத்தில ஒரு நா கூட அவ சமையலை புகழ்ந்து பாராட்டுனதில்ல" னு ரொம்ப மெதப்பா பதில் சொல்லிருக்காரு..

சாமியார், "அடுத்த தடவ சாப்பிடும் போது மனைவியின் சமையலை புகழ்ந்து பாருங்கன்னு" அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சிருக்காரு...

வீட்டுக்குப்போனவருக்கு அவரு மனைவி, சப்பாத்தியும் குருமாவும் மனைவி பரிமாறியிருக்காங்க !! அத சாப்பிட்டு, கணவரும், ரொம்ப குஷியாகி , சப்பாத்தி, குருமா இரண்டையும் ஒரேடியா புகழ்ந்து, மனைவியையும் புகழ்ந்து தள்ளிட்டாரு...

இந்த திடீர் புகழ்ச்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மனைவிக்கு கோபம் வந்ததுச்சாம் ! கையில் இருந்த கரண்டியால் அவரு தலையில் "டங் டங்" என்று அடிச்சுக்கிட்டே "இந்த இருவது வருஷமா என்னைப் புகழாத நீங்க, இன்னிக்கி பக்கத்து வீட்டிலிருந்து வந்த சப்பாத்தியையும் குருமாவையும் புகழ்ந்து பாராட்ட எப்படித் தோணிச்சுனு " ???...

கேட்ட... மனைவியப்பார்த்த கணவர் " ஙே.." என்று மயங்கினான் .

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடாஆ நிம்மதி? 😃😄😂

வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

இதன்படி, தமிழகத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட 65 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதிக நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்க வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, வாராக் கடனை முழுவதுமாக வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இதையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நன்றி .

SOURCE

http://www.dinamani.com

Monday, February 27, 2017

கல்யாணமான தம்பதியர் முதலில் கற்றுக்கொள்வது இதுவா ?

1. ராமு: எல்லாப் பொண்ணுங்களையும் கூடப் பொறந்த சகோதரியா பாக்குறேன்டா

சோமு: உன் பார்வையப் பார்த்தால் அப்படித் தெரியலியே.....

ராமு: உன் கூடப் பிறந்த சகோதரியா நினச்சுப் பாக்குறேன்டா - மச்சி.

2.ராமு: நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

சோமு: ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

3. ராமு: கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?

சோமு: புருசன் சமயல் பண்ண கத்துக்கிறான். பொண்டாட்டி சண்டை போடக் கத்துக்கிறா.

4 . ராமு: நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

சோமு: வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

5 .ராமு: "அந்த டாக்டர், அஞ்சல் வழியில் சட்டம் படிக்கிறார்"

சோமு: "எதுக்கு?"

ராமு: "ஆபரேசன் பண்ண வர்றவங்களுக்கு அவரே உயில் எழுதப் போறாராம்".

6 . ராமு: நிலம் எங்க மாமனார் வாங்கித் தந்தது. வீடு கட்டற செலவு பெண்டாட்டி ஆபீஸில் லோன் போட்டு வாங்கியது. வீட்டுல இருக்கிற பொருள் எல்லாம் மச்சான் பாரீன்ல இருந்து அனுப்பி வைச்சது .. .. எப்படி இருக்கு என் வீடு ?

சோமு: ம் .. .. .. உங்க வீடா ?

7, சோமு: நான் தினமும் ரத்தம் குடுக்கிறேன்.

ராமு: அப்படியா ! எங்க வேலை பாக்குறீங்க?

சோமு: "கசாப்புக் கடையில!!"

8. ராமு: தீபாவாளி முடிஞ்சு ஒரு மாசமாச்சு. இப்ப உங்க வீட்டுக் கொல்லையில் வெடிச்சத்தம் கேக்குதே?

சோமு: தீபாவாளிக்கு பத்த வச்சதுதான். இப்பதான் திரிபுடிச்சு வெடிக்குது.

9. ராமு: டெய்லர்களுக்கு பிடிச்ச மாசம் எது ?

சோமு: தை.

10 .ராமு: பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

சோமு: என்னாச்சு?

ராமு: பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே

கல்யாணமும் ஆயிரம் பொய்யும்

1 .நண்பர் 1: "பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை ஆனாலும் தள்ளி வச்சுகிட்டே போறாங்க?"

நண்பர் 2: "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த முடிக்கணும்னு பெரியவங்க சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்க. அதனால இன்னும் 300 பொய் சொன்னப் பிறகு தான் கல்யாணமாம்.

2 .நண்பர் 1: என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.

நண்பர் 2: இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.

3. நண்பர் 1: என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு

நண்பர் 2: ஏன் என்ன ஆச்சு ?

நண்பர் 1: எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

4.நண்பர் 1: அந்த ஊர்ல நிறைய கடன் வாங்கினேன் அதனால இந்த ஊருக்கு வந்தேன். இங்கேயும் கடன் வாங்கறேன்.

நண்பர் 2: இப்படி கடன் வாங்கறது சரியா சொல்லு?

நண்பர் 1: நான் கேட்கும்போதெல்லாம் தர்றாங்களே அது மட்டும் சரியா சொல்லு.

5.நண்பர்: என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?

ஜோசியர்: உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க

6.நண்பர் 1: "உன் பொண்ணு ஓடிப்போனப்ப கௌரவம் சிவாஜி மாதிரி "கிளிக்கு ரெக்க முளைச்சுடுச்சு ஆத்த விட்டு பறந்து போயிடுச்சு" அப்டீன்ன இப்ப உன் பையன் 30 வயசாகியும் வேலைக்கு போகாம வீட்லயே உட்கார்ந்திட்டுருக்கானே இதுக்கு என்ன சொல்லப்போற?"

நண்பர் 2: "கொரங்குக்கு கால் ஒடஞ்சுபோச்சு ஆத்லயே உக்காந்துட்டுருக்கு."

7. நண்பர் 1: என் பொண்ணோட கல்யாண விசிடியக்கூட பாக்கவிடமாட்டேன்றாங்க?

நண்பர் 2: இதென்ன அக்ரமமா இருக்கு?

நண்பர் 1: தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிதான் பாக்கணுமாம். இல்லாட்டா 3 வருஷம் சிறை தண்டனையாம்.

Saturday, February 25, 2017

டாக்டர் ஜோக்ஸ்

1.டாக்டர்: நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?

நர்ஸ்: ஒண்ணும் இல்லை சார்!

டாக்டர்: அட ஆச்சரியமா இருக்கே!

நர்ஸ்: சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!

2. நோயாளி: டாக்டர், என் பொண்டாட்டி நைட்டு தூங்கவே மாட்டேங்குறா. முழிச்சு முழிச்சு பார்த்துக்கிட்டிருக்கா டாக்டர்

டாக்டர்: எப்போலேந்து இப்படி இருக்கு? நோயாளி: எங்க வீட்டுக்கு அவ தங்கச்சி வந்ததிலேந்து டாக்டர்.

3. தந்தை: என் பையனுக்கு தேவையான இரத்தம் கிடைச்சுருமா டாக்டர்?

டாக்டர்: பி பாசிட்டிவ் சார். நல்லதே நடக்கும்.

தந்தை: டாக்டர் என் பையன் இரத்தம் B பாஸிடீவ் இல்ல O நெகட்டிவ் சார்.

4 . நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?

நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார்.

5 .நோயாளி: டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்

டாக்டர்: வயசாச்சில்ல, அதான் வலிக்குது.

நோயாளி: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?

6. நோயாளி: டாக்டர், என் பையனை ஓடச்சொன்னீங்களா?

டாக்டர்: ஆமாபா

நோயாளி: காலைல எழும்பி ஓடச்சொன்னீங்களா டாக்டர்?

டாக்டர்: ஆமாபா, ஏன்?

நோயாளி: ஏனா? பக்கத்து வீட்டு பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டான்யா

7 . டாக்டர்: டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க

நோயாளி: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க

8 .நோயாளி: ஏன் டாக்டர், எனக்கு இந்த ஆப்பரேஷனை நாலு பேர் சேர்ந்து பண்றீங்க?

டாக்டர்: நல்லாயிருக்கே நியாயம்? பழி என்மேல மட்டும் விழுறதுக்கா ?

9 .டாக்டர்: என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?

நோயாளி: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க

Friday, February 24, 2017

புயல் கூண்டு எண்கள் விபரம்

குறித்த விவரம் புயல் எச்சரிக்கைக் குறித்து அந்தந்த துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும்.

* இதன்படி, புயல் எச்சரிக்கை கூண்டுகள் எண் – 1 மற்றும் 2 – புயல் தொலைதூரத்தில் இருப்பதை குறிக்கும்.

* கூண்டு எண் -3 – துறைமுகங்களில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுவதை குறிக்கும்.

* கூண்டு எண் – 4 – கடலில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும்.

* கூண்டு எண் – 5, 6, 7 – புயல் தீவிரமடைவதை குறிக்கிறது. மேலும் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

* கூண்டு எண் – 8, 9, 10 பெருத்த அபாய எச்சரிக்கை – மணிக்கு 120 முதல் 135 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதை குறிக்கும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 அறிவிப்பு

Flash News: TNTET:

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் வழங்கப்படுகிறது
ஆசிரியர் தகுதித் தேர்வு  (அரசு வெளியிட்ட உறுதியான தகவல்)
முதல் தாள் (D.T.Ed) இடைநிலை ஆசிரியர் தகுதித்  தேர்வு
ஏப்ரல் 29 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர்  தகுதித் தேர்வு 
ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :
மார்ச் 06  முதல் மார்ச் 22 வரை
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : தேர்ந்தெடுத்த அருகில் உள்ள பள்ளிகள் விண்ணப்பங்கள் கிடைக்கும் நேரம் :
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
விண்ணப்பங்கள் சமர்பிக்கும் கடைசி நாள் : மார்ச் 23 2017 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்க தகுதி  : தாள்  1  :  D.T.Ed., or D.E.E.E  (10 +2)
தாள் 2  : பட்டப்படிப்புடன் B.Ed., or D.T.Ed., +  BLit(tamil) மேலும் B.Ed., D.T.Ed., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் அவர்கள் இத் தேர்வில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆசிரியர் படிப்பை வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக தேர்வாக முடியும்.

Thursday, February 23, 2017

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான்தான்

😂😂😂😂 பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள்

*. ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..

*இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி!

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும்,காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து.

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.

முதலில் ஜன்னலை மூடுங்கள்.. ஒருத்தி செத்து விடுவாள், தொல்லை தீந்துடும்.

அப்புறமா ஜன்னலை திறங்க இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..

பெரியவர் கூறினார்: அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!

தெரிந்த கதை .ஆனாலும் வேற போஸ்ட் போட நேரம் இல்லை. மன்னிக்கவும்.

மனைவிக்கும் மழைக்கும் இடையே

😊கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா

மனைவி: தனியா வந்துருப்பாளே

கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்

மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே -

இனி பேசுவ 🤔😳😇 ____________________________ கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,

மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?

கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma

மனைவி : 👊👊👊👊👊 ____________________________ மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தான் தியாகி...!!

கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தானே பெரிய தியாகி....!!!

😄😄😄 ____________________________ மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி வந்திருக்கீங்க...?

கணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !

மனைவி: !!!!!!!!!!!!!!! ____________________________ மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?

கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..

மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?

கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே? ____________________________ ☔☔☔☔☔🙆🙆🙆🙆🙆 ☔மழை, 💃மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???

ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.. வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம். 😂😂😂😂 ____________________________ மின்சாரம் இல்லாதபோது ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு குளிர்விட்டு போயிடுது...!!

😜😜 சம்சாரம் இல்லாதபோது வீட்டில் இருக்கிற கணவனுக்கு குளிர்விட்டு போயிடுது,,!

😜😜 இவை அனைத்தும் சிரிப்புக்காக மட்டுமே. ----------------------------------------------

Wednesday, February 22, 2017

மொழியும் தேன்மொழியும்

1 .நண்பர் 1: போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ?

நண்பர் 2: அதுக்கென்ன .. .. ?

நண்பர் 1: குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. ..

2. நண்பர்: திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?

அதிகாரி: நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.

3 .நண்பர் 1: டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...

நண்பர் 2: எப்படி சொல்றீங்க..?

நண்பர் 1: படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே

4 .நண்பர் 1: என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?

நண்பர் 2: நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..

5. நண்பர் 1: மொழிப் பிரசினையால என் மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்.

நண்பர் 2: மொழிப் போராட்டமா ?

நண்பர் 1: தேன்மொழியைக் கெடுத்துட்டான்.

6.நண்பர் 1: அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?

நண்பர் 2: அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாங்களாம்.

7 .நண்பர் 1: தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.

நண்பர் 2: என்ன சீன்?

நண்பர் 1: ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!

8 .நண்பர் 1: நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?

நண்பர் 2: சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.

9 .நண்பர் 1: இதோ தர்றேன் அவசரப்படாதீங்க எல்லாருக்கும் உண்டு அப்டீன்னு 100, 200ன்னு ரூபாய அள்ளி வீசுறாரே அவர் என்ன பெரிய கோடீஸ்வரரா?

நண்பர் 2: நீ வேற வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கி ஆபிஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க.

10 . நண்பர் 1: சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?

நண்பர் 2: கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்

நீங்க என்ன வேண்டிக்கிட்டிங்க ?

1 .மனைவி: பந்தியிலே பூரிக்குச் சட்னியும் பொங்கலுக்குக் கிழங்குமாக மாற்றிப் பரிமாறுகிறார்களே .. .. என்ன விஷயம் ?

கணவன்: நடப்பது கலப்புத் திருமணமாம் .. ..

2 .கணவன் : நான் ஒரு ரூபாய் நாணயம் ஒண்ணைத் தொலைச்சிட்டேங்கறதுக்காக என்னை நாணயம் தவறியவன்னு உங்கப்பாகிட்டே நீ சொல்றது கொஞ்சம்கூட நல்லா இல்லே .. ..

3 .மனைவி: கவிதா, கமலா, கிருபா, கீர்த்தனா - இவங்க பின்னாடியெல்லாம் நம்ப பையன் சுத்தறான் .. ..

கணவன்: மு-வலமாக இருக்கே

4. மனைவி: வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப வருத்தப்பட்டாருங்க,,,,

கணவன்: நீ என்ன சொன்னே ?

மனைவி: ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.

5. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க

கணவன்: ஏன் .. .. ?

மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே

6 .கணவன்: சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?

மனைவி: அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?

கணவன்: எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...

ஏப்ரல் 1 முதல் மின்னணு குடும்ப அட்டை

ஏப்ரல் முதல் மின்னணு குடும்ப அட்டைகள்:

தமிழக அரசு அறிவிப்பு ஏப்ரல் முதல் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அதிகாரிகளுடன் அவர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில், அவர் பேசியது:-

இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது வரை 5 கோடியே 65 லட்ச்தது 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளனர்.

இது தமிழகத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதமாகும்.

புதிய அட்டைகள்:

இதுவரை 18 லட்சத்து 54 ஆயிரத்து 700 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 29,815 குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.

இன்று வரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார். கூட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் கே.கோபால், உணவுப் பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tuesday, February 21, 2017

வெண்கலமும் மூன்றாவது புருஷனும்

1 .கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி:: நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

2, கணவன்: "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"

மனைவி: "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."

3. மனைவி: "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."

கணவன்: "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

4 .மனைவி: வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?

கணவன்: அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?

மனைவி: இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

5 .கணவன்: நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?

மனைவி: அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.

6. கணவன்: "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"

மனைவி: "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."

7.மனைவி: எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?

கணவன்: டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு

8 .மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன்: வேற என்னதான் போட்ட?

மனைவி: பேசாம பட்டிணி போட்டேன்

கடன் வாங்க வருபவரை எப்படி கண்டறிவது

1 .மனைவி: என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............

கணவன்: அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!

மனைவி: . . . . ????

2. மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு

கணவன்: எப்படி சொல்ற ராதா

மனைவி: என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே.

3 .கணவன்: அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.

மனைவி: சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.

கணவன்: ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.

4. மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!

கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!

5 .கணவன்: குழந்தை ஏன் அழறான் .டாக்டர் ஊசி போட்டாரா .. .. ?

மனைவி: இல்லே .. .. அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார் .. ..

6.கணவன்: நம்ம வீட்டுக்கு சாப்பிட எங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.

மனைவி: என்ன திடீர்னு ?

கணவன்: அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.

7.மனைவி: போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன்: ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி: உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

8. மனைவி: அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?

கணவன்: ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?