கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, March 31, 2017

இரு தினங்களுக்கு புதிய வாகனங்கள் அதிரடி விலை குறைப்பு

நாட்டின் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை, ஆய்வு செய்து விதிமுறைகளை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை குறைக்கும் வகையில் பி.எஸ்.3 ரக இன்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்கு, வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி, முதல் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அந்த வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 1-ம் தேதி முதல் பி.எஸ்.4 ரக இன்ஜின்கள் பொருத்திய வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் சுமார், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பி.எஸ்.3 இரு சக்கர வாகனங்களை இரண்டு தினத்துக்குள் விற்க வேண்டிய கட்டாயம், இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், வாகன உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதையடுத்து ஹீரோ, ஹோண்டா, பஜாஜ், சுசுகி போன்ற நிறுவனங்கள் வானங்களை விற்க போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடி வழங்கி வருகின்றன.
குறிப்பாக, இன்று காலை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அதன் விலையில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இதையடுத்து இன்று மாலை முதல் பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் ஒரு வாகனத்துக்கு ரூ.22,000 வரை தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகின்றன.
இந்நிலையில், வாகனங்களை விற்க நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வாகன உற்பத்தியாளர்கள் வாதிட்டனர். ஆனால், அதை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கு முன் பி.எஸ். 3 விதிமுறைக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அமலுக்கு வந்தபோது அதற்கு முன் இருந்த வாகனத்தை விற்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 30, 2017

new sitemap


Free Sitemap Generator

உலகின் தலைசிறந்த கல்வி நாடு பின்லாந்தா ?

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது... பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்... ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்...

‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்... ✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை... அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது... எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...

👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...

👏மதிக்கத்தக்க மனநிலை. 👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்... அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்... குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது... நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்... தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

👏👏👏👏👏👏👏👏

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது... பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது... குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது... முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... மாற்றம் ஒன்றே மாறாதது... நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும். பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!. குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!.

அரசு ஊழியர்களுக்கு மட்டும் வங்கிகளில் விதிவிலக்கு

அரசு ஊழியர்களுக்கு ஸ்டேட் வங்கியில் விதிவிலக்கு

தமிழக அரசு தகவல் பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை வழியாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகவல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வரும் 1 ஆம் தேதி முதல் தங்களது கணக்குகளில் ரூ.5 ஆயிரம் (பெருநகரம்), ரூ.3 ஆயிரம் (நகரங்கள்), ஆயிரம் ரூபாய் (கிராமங்கள்) வரை இருப்பு வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இருப்புத் தொகையை குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் மின்னணு வங்கிச் சேவை மூலமாக மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்

மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு ஊதியம் அதில் போடப்படுகிறது. எனவே, ஊழியர்கள் குறித்த அடிப்படை விவரங்களை வங்கியில் சமர்ப்பித்து வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறலாம்.

குறிப்பாக, ஊழியரின் பெயர், வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இவற்றை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, அவை வங்கியால் ஆய்வு செய்யப்படும்.

பின்பு, குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வங்கிக் கணக்கில் வைப்பதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Wednesday, March 29, 2017

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தவறான கேள்விகளா ?

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தவறான கேள்விகள்


நன்றி: காலைக்கதிர்


SSLC விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1–ந் தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு கடந்த 2–ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்பை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு கடந்த 27–ந் தேதி தேர்வு முடிந்துவிட்டது. உயிரியியல் பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவ–மாணவிகளுக்கும், சுத்த உயிரியியல் (விலங்கியல்– தாவரவியல்) பாடத்தை விருப்பபாடமாக எடுத்த மாணவ– மாணவிகளுக்கும் தேர்வு 31–ந் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 8–ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைந்தது.

முடிவுதேதி வெளியீடு

பிளஸ்–2 தேர்வு முடிவு மே 12–ந் தேதியும்,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மே 19–ந் தேதியும்

வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி செய்துள்ளார்.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்போது பிழை இன்றி இருக்கவேண்டும் என்றும், மதிப்பெண் கூட்டல் சரியாக இருக்கவேண்டும் என்றும், தவறாக மதிப்பீடு செய்யப்பட்டால் கண்டிப்பாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு தண்டனை உண்டு என்றும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 1–ந் தேதி தொடங்க இருக்கிறது. தமிழ் முதல் தாளுடன் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.

பிளஸ்–2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 5–ந் தேதி தொடங்குகிறது.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Tuesday, March 28, 2017

SSLC PUBLIC 2017 SOCIAL SCIENCE KEY ANSWERS

SSLC PUBLIC kEY ANSWERS

download link :

https://drive.google.com/file/d/0B6qRPFrptfw9bVVRaHR1ZnMxUWc/view?usp=drivesdk


 பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் விடைத் தொகுப்பு
மார்ச்  பொதுத்தேர்வு 2017
தொகுத்தவர்
சீனிவாசன் (பட்டதாரி ஆசிரியர்)
அரசு உயர்நிலைப்பள்ளி
கங்கலேரி - 635122
கிருஷ்ணகிரி
தொகுத்த ஆசிரியருக்கு நன்றிகள் பல.
Thank u

சற்றே யோசிக்க வேண்டிய விஷயம்தான்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!

நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..! திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே...! என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

"பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும் என்ன பயன் வந்து விடப் போகிறது?" 

மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும்  என்றார் ஞானி.

Monday, March 27, 2017

இப்படியும் கதை யோசிப்பங்களோ ?

ஒரு பெண்ணும் ஒரு பையனும்  காதலித்து வந்தனர் .ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றிபேசினர் .

பெண் சொன்னாள்" நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் ............ திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள்.

அதற்கு அந்த பையன் சொன்னான்...

நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .? உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் .

பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்.........

பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத்தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......

மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் .

பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான். திருமணத்தை பதிவு செய்தார்கள்.......

எல்லாருக்கும் இனிப்பும்..வழங்கினார்கள்.

திருமண வாழ்க்கை ஆரம்பித்தார்கள......... ஆனால் பையன் விபத்து ஒன்றில் உடனே இறந்து வி்ட்டான்.

அவன் போட்டிருந்த துனியெல்லாம் இரத்தக்கறை அந்த துணிகளை அப்படியே....வைத்துவிட்டு பையனுக்கு இறுதி சடங்கை நடத்தி முடித்தார்கள்.

4-5 நாட்கள் கழித்து அந்த துணிகளை எடுத்து சலவைக்காரிடம் கொடுத்தாள் .அந்த பெண்......

ஆனால் அவனோ... இதை என்னால் துவைக்க முடியாது...இதை எவ்வளவு துவைத்தாலும் இரத்தக்கறை போகாது தூக்கி கிடாசுங்கம்மா......னு சொல்லிட்டு போய்ட்டான்....

அவளோ நான் இந்த துணியை தூக்கி எறிய மாட்டேன்......நானே துவைத்து கொள்கிறேன் அவர் நினைவாக வைத்து கொள்கிறேன் என்றாள்...

முதல் நாள் துவைத்தாள் இரத்தக்கறை போகவில்லை. அன்று இரவு ஒரு கிழவி அந்த பெண்ணின் கனவில் வந்தாள்....

விகாரமா சிரிச்சபடியே கிழவி சொன்னாள்.....அந்த கறை போகாது என்று.

மறுநாள் அந்த பெண் மீண்டும் அந்த துனியை துவைத்தாள். ஆனால் கறை போகவில்லை.

அன்று இரவும் அதே கிழவி கணவில் வந்தாள்...... முதல் நாள் சொன்னதையே மீண்டும் சொன்னாள்....

3வது நாள் அந்த பெண் மீண்டும் துணியை துவைக்க ஆரம்பித்தாள் .யாரோ கதவை தட்டினார்கள் போய் கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி.

கனவில் வந்த கிழவி நின்று கொண்டிருந்தாள்...... கையில் surf excel சோப்பு வைத்திருந்தாள் .

அந்த கிழவி...... கிழவி சொன்னாள்.... சும்மா சோப்புல கறை போகாது .surf excel போடு....... அந்த பெண்ணும் அந்த சோப்பை போட்டு துவைத்தாள் .கறை போய்விட்டது..........

ஆம்..விடாபிடியான கறைக்குsurf execl போடுங்க..

புரியது....இதை படச்சி முடிச்ச உடனே பத்திகினு வருதா எரிச்சல்.

என்ன பன்றது...இதை எனக்கும் ஒருத்தன் post பன்னானே.......அதால நீங்க உங்க வயத்தெரிச்சல  கீழே கமென்ட்ல திட்டுங்க

அப்பப்பா பணம் படுத்தும் பாடு

*பணம் படுத்தற பாடு இருக்கே*

● நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்.

● நான் உன்னை விட்டுப் பிரிந்தால் நீ ஏழை.

● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி.

● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி.

● என்னை செலவு செய்தால் நீ ஊதாரி.

● என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்.

● என்மேல் அதிகப் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்.

● என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி.

● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.

● இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.

● உன் நடத்தையை விட, நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.

இப்படிக்கு. *நான் தான்* *"பணம்"*