கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, April 30, 2017

மூன்றாவது வைரக்கல்லை திருடியது யார் ?

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்.

அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான்.

நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான். ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது.

பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான்.

அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்:

“நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.

சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான். மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள். அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.

இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான். ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார்.

அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன். அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.

அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே? அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.

திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!! புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை.

“எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297) என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

-சுபம்-

Saturday, April 29, 2017

APPLE IPHONE 7 PLUS PRICE

APPLE IPHONE 7 PLUS PRICE

 SPECIFICATIONS

 

APPLE IPHONE 7 PLUS

 

 

 

BRANT

APPLE IPHONE 7 PLUS

OS

IOS V10

 

NETWORK

 4G , 3G , 2G

RAM

3 GB

STORAGE INTERNAL @ EXTERNAL

32 GB ,   NO

CAMERA  BACK @ FRONT

12 +12 (DUAL ) MP , 7  MP

BATTERY

2900  MAH

WIFI

YES

GPS

YES

BLUETOOTH

YES

FM RADIO

NO

FINGER PRINT

NO

SIM

SINGLE SIM

PRICE

 RS.60,990

FINGER PRINT

YES

LOUD SPAKER

YES

DISPLAY INCH

5.5 INCH

PERFORMENCE

VERY GOOD

 

முந்தைய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பணியிட அறிவிப்பு

முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்:

பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடைபெறுகிறது. ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக் கிறார்கள்.
அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக் கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இந்த காலியிடங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித் துறை, சமூக பாதுகாப்புத்துறை, மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.
அந்த பணி யிடங்களில் பாடப்பிரிவுகள் வாரி யான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நிரப்பப்படும் காலியிடங்களில் புவியியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளில்தான் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், பிசி (முஸ்லிம்) ஆகிய இட ஒதுக்கீட்டினருக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கின்றன. துறைவாரியாகவும் பாடப் பிரிவுகள் வாரியாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் காலியிடங்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட பணி நியமனத் துக்காக முந்தைய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர் கள் தனியாக ஏதும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஏற்கெனவே உள்ளது. முன்பு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வேலையில் சேராமல் தற்போது சேர விரும்பு வோர் மட்டும் மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதன் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார். தகுதியான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அது முடிந்ததும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை போலியோ முகாம்

நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்

தமிழகத்தில் இரண்டாம் தவணையாக நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.

போலியோ நோய் வராமல் தடுக்க நாடு முழுவதும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்.,2ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை(ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது.

இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் என 43,051 மையங்கள் செயல்பட உள்ளன.

மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 1000 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணியில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

Friday, April 28, 2017

DUAL BACK CAMERA LG G6 PRICE


 SPECIFICATIONS

 

LG G6

 

 

 

BRANT

LG G6

OS

Android v7.0 ( NOUGAT)

 

NETWORK

 4G , 3G , 2G

RAM

4 GB

STORAGE INTERNAL @ EXTERNAL

64 GB ,   2 TB

CAMERA  BACK @ FRONT

13 +13 (DUAL ) MP , 5  MP

BATTERY

3300 MAH

WIFI

YES

GPS

YES

BLUETOOTH

YES

FM RADIO

YES

FINGER PRINT

YES

SIM

DUAL 4G

PRICE

 RS.51,990

FINGER PRINT

YES

LOUD SPAKER

YES

DISPLAY INCH

5.7 INCH

PERFORMENCE

VERY GOOD

 

அனைத்து பணிகளுக்கான மதிப்பூதியம் ஆசிரியர்களுக்கு உயர்வு

தேர்வு கண்காணிப்பு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் மதிப்பூதியம் உயர்வு

தமிழக அரசு உத்தரவு தேர்வு கண்காணிப்புப் பணி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மதிப்பூதியம், உழைப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாள ரின் மதிப்பூதியம் ரூ.115-ல் இருந்து ரூ.133 ஆகவும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களுக்கு ரூ.80-ல் இருந்து ரூ.92 ஆகவும், வினாத்தாள் கட்டு காப்பாளருக்கு ரூ.69-ல் இருந்து ரூ.80 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

எஸ்எஸ்எல்சி தேர்வுப் பணியில் ஈடுபடும் தலைமை கண்காணிப்பாள ரின் மதிப்பூதியம் ரூ.92-ல் இருந்து ரூ.106 ஆகவும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களுக்கு ரூ.57-ல் இருந்து ரூ.66 ஆகவும், வினாத்தாள் கட்டு காப்பாளருக்கு ரூ.46-ல் இருந்து ரூ.53 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது.

இதேபோல இதர அலுவலர்கள், ஊழியர்களுக் கும் மதிப்பூதியம் திருத்தி அமைக்கப்படுகிறது. பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தாள் ஒன்றுக்கு அளிக்கப்படும் உழைப் பூதியம் ரூ.7.50-ல் இருந்து ரூ.10 ஆகவும், எஸ்எஸ்எல்சி விடைத் தாள் திருத்துவோருக்கான உழைப் பூதியம் ரூ.6-ல் இருந்து ரூ.8 ஆகவும் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

 தமிழக அரசுக்கு நன்றி

தேர்வு கண்காணிப்புப் பணி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மதிப்பூதியம், உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்கியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், துறைச் செயலர் த.உதய சந்திரன் ஆகியோருக்கு தமிழ் நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் இயக்கங் கள் கூட்டமைப்பின் மாநில அமைப் பாளர் பா.ஆரோக்கியதாஸ், இணை அமைப்பாளர் செ.நா.ஜனார்த் தனன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அனுபவசாலி சொன்ன பாடம்

புருஷன் என்பது காங்கிரீட் சிமெண்ட் மாதிரி... கட்டுன உடனேயே அடிக்கவோ, குத்தவோ, மிதிக்கவோ கூடாது.

நல்லா 'செட்டாக' விட்டுட்டு அப்பறமா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.. ஒன்னும் ஆகாது...!

பொண்டாட்டிங்க மண் பாண்டம் மாதிரி ஆரம்பத்துலையே நமக்கு வேணுங்கரமாதிரி மாத்திடனும், இல்லாட்டி செட் ஆயிடிச்சின்ணா அப்பறம் ஒன்னும் பண்ண முடியாது...! .

. அனுபவசாலி எவனோ எழுதிருக்கான்.வாழ்க்கையில் பின்பற்றுவோம்

Thursday, April 27, 2017

TNPSC GROUP 2 EXAM ANOUNCED

"டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் மே 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்."

DUAL BACK CAMERA XIAOMI MI6 MOBILES PRICE


 SPECIFICATIONS

 

XIAOMI MI 6

 

 

 

BRANT

XIAOMI MI6

OS

Android v7.0 ( NOUGAT)

 

NETWORK

 4G , 3G , 2G

RAM

6 GB

STORAGE INTERNAL @ EXTERNAL

64 GB ,   NO

CAMERA  BACK @ FRONT

12 +12 (DUAL ) MP , 8 MP

BATTERY

3350 MAH

WIFI

YES

GPS

YES

BLUETOOTH

YES

FM RADIO

NO

FINGER PRINT

NO

SIM

DUAL 4G

PRICE

 RS.23,990

FINGER PRINT

YES

LOUD SPAKER

YES

DISPLAY INCH

5.5 INCH

PERFORMENCE

VERY GOOD