கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, July 31, 2017

ரேஷன் முறையில் மாற்றமில்லை

"பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விளக்கம்!

பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இதனடிப்படையில் மாநிலங்கள் பொதுவிநியோக திட்டத்தில் உணவு விநியோகம் செய்ய வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அவர், தமிழகத்துக்கு தேவையில்லாத திட்டத்தை தமிழகத்தில் கடைபிடிக்க தேவையில்லை என்று கூறினார்.

மத்திய அரசின் தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், மாநில நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க கூடாது எனும் நிபந்தனை அடிப்படையில் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். இந்திய அளவில் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் இலவச அரிசி என இரண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறிய அமைச்சர், உனவு பாதுகாப்பு திட்டத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் என்று தெரிவித்தார்."

பொது விநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் விளக்கம்

ஆண்டு வருமானம் 1லட்சமா? இனி ரேஷன் கார்டு இல்லை

"ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கார்டு பெற புதிய விதிமுறை வகுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருள்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளது. ஒய்வு பெற்ற அரசு ஊழியர் குடும்பத்துக்கும் ரேஷன் பொருள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது."

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது

பிளஸ் 1 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு

பிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாணவ–மாணவிகள் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 450 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களால் பிளஸ்–1 மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் நாளைக்கு (அதாவது இன்று) வழங்கப்படும்.

இதற்காக 54 ஆயிரம் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அந்த மாதிரி வினாத்தாள் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம்.

அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, July 30, 2017

முயலாமை - கதை

முயலாமை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும்.

மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

*ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான்.

போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள்.

அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.

*என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. *ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது.

பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்றுவிடுவோமோ, எதையாவது, இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.

*அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.

நம்புங்கள்! 'முயற்சி திருவினை ஆக்கும்

மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம்

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம்: பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 

தமிழகத்தில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதை அரசு ரத்து செய்தது.

இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.அப்போது பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை ஊக்குவித்தல் நிகழ்ச்சியை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வை நினைத்து அச்சப்பட தேவையில்லை. பிளஸ்-1 மாணவர்களின் அச்சத்தை போக்க சிறப்பு திட்டம் ஒன்றை நாளை (திங்கட் கிழமை) அரசு அறிவிக்க உள்ளது.

இன்னும் ஒரு வார காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விபத்து காப்பீட்டு திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.அதேபோல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட உள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 54 ஆயிரம் கேள்விகள், விடைகள் அடங்கிய புத்தகத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் பொது தேர்விற்காக 450 மையங்களில் சனிக்கிழமை தோறும் முழு பயிற்சி அளிக்க விரைவில் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி வினா-விடையும் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும்.

மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே, மாணவர்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி காலை 8.30 மணியளவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.ஜி.ஆரின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.

Saturday, July 29, 2017

சிறப்பு ஆசிரியர் தேர்வு

"சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறை மற்றும் இதர துறைகளில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஏற்பட்ட காலியிடங்களில் புதியதாக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அவர்களில் உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் பாடப்பிரிவுகள் அடங்கும். இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்து தேர்வு செப்டம்பர் 23ம் தேதி நடக்கிறது. பணி நிறைவு வயது 58 ஆண்டுகள் என்பதால் விண்ணப்பிக்கும் நபர்கள் 1.7.17 அன்று 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட இணைய வழி விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ₹500, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ₹250 மட்டும்.

கட்டணம் அனைத்தும் இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். அனைத்து செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டுமே செய்தல் வேண்டும். www.trb.tn.nic.in இணைய தளத்தில் அதற்குரிய trbonlineexams.in/spl/ இணைப்பை பயன்படுத்தி இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறையில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 95 இடம்பெறும். இரண்டரை மணி நேரம் தேர்வு நடக்கும். தேர்வுக்கான பாடத்திட்டம் ஆசிரி்யர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் 40 சதவீதம் எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ இனத்தவர்கள் 35 சதவீதம், எஸ்டி இனத்தவர் 30 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். எழுத்து தேர்வு செப்டம்பர் 23ம் தேதி காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கும்."

இனி ஆதார் திருத்தம் தபால் நிலையத்திலும் செய்யலாம்

"இனி தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்யலாம்

இன்று ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதாரில் பெயர், வயது, புகைப்படம், அலைபேசி எண்களை திருத்தம் செய்ய பொதுமக்கள் ஆதார் சென்டர்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தென்மண்டலத்திலுள்ள 723 தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்து கொள்ள மத்திய அரசின் 'யூனிக் ஐடெண்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா'வுடன் அஞ்சல் துறை ஒப்பந்தம் போட்டு ஆதார் சென்டர்களை திறந்து வருகிறது.

தற்சமயம் சென்னை, கோவை, மதுரையிலுள்ள தலைமை தபால் நிலையங்களில் இந்த மையங்களை தொடங்கியுள்ள தபால்துறை, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் உட்பட முக்கியமான ஊர்களில் இம்மையங்களை திறக்க உள்ளனர்.

தென்மண்டலத்தில் 723 தபால் நிலையங்களில் திறக்க உள்ளனர். இந்த சேவைக்கு 25 ரூபாயை சேவைக்கட்டனமாக வாங்க உள்ளனர். இதன் மூலம் கிராமப்புற மக்கள் எளிதாக ஆதாரில் திருத்தம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது."

குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் 2ஏ பதவிக்கான தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 6ம் தேதி குரூப் 2ஏ (நேர்காணல் அல்லாத பதவி) அடங்கிய 1953 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை நடத்துகிறது.
இத்தேர்வுக்கு 7.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளமான www.tnpscexams.net, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.comக்கு வருகிற 2ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் 2 மாதங்களில் அமல்படுத்தப்படும்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் மீது 2 மாதங்களில் நடவடிக்கை

முதல்வர் பழனிசாமி மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள மாநிலக் குழுவின் பரிந்துரைகளை இரண்டு மாதங்களுக்குள் பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் பல்வேறு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசில் பணியாற்றும் 15 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செப்டம்பருக்குள் வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழில் வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.
இடைக்கால நிவாரணத்தைப் பொருத்த அளவில் அரசு அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்வதாக முதல்வர் தெரிவித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைப் பொருத்தவரை, அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கையைப் பெற்ற பிறகு, அந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை அரசு ஆராயும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசின் 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை ஆராய மாநிலத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை செப்டம்பருக்குள் பெற்று அமல்படுத்துவதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுபவர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் என அனைத்து வகைப் பணியாளர்களையும் ஊதியக்குழுவுக்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்கும் இனி வருகிறது யோகா பயிற்சி

ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக கல்வி கற்பிக்க முடியும்.
இதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.யோகா பயிற்சி அளிப்பதால் ஆசிரியர்களுக்கு மன நலமும், உடல் நலமும் நன்றாக இருக்கும்.
இதற்காக யோகாவில் நிபுணத்துவம் பெற்ற சமுதாய சேவை மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள 67 கல்வி மாவட்டங்களிலும் தலா 85 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மொத்தம் 5 ஆயிரத்து 695 ஆசிரியர்கள் பயன் அடைவார்கள். இவர்கள் யோகா பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் ஆக இருக்கவேண்டும். மேலும் விருப்பம் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், சாரண ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள், தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். பயிற்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை 2 நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி நாட்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடுத்த (ஆகஸ்டு) மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் யோகா பயிற்சி முடிவடையும்.இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்தார்.

TRB புது அறிவிப்பு

1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
-ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர்                   16-ந்தேதி நடைபெற உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, July 28, 2017

இந்த மாமனிதர் மீண்டும் கிடைப்பாரா?

அப்துல் கலாம் !
மிரட்டிய கலாம் ,அதுவும் ஒரு பிரபல கிரைண்டர் கம்பெனியை !
நம்ப முடியாத இந்த செய்தியை இன்று ஒரு நாளிதழில் வாசித்தேன்...
ஈரோட்டில் அப்துல் கலாம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி....
விழா மேடையில்... அப்துல் கலாமுக்கு நினைவுப் பரிசாக , ஒரு வெட் கிரைண்டரை அந்த கம்பெனிக்காரர்கள் வழங்கி மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால்..அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அன்பளிப்பாக எதையும் ஏற்றுக் கொள்ளாத உறுதியான குணம் கலாமுக்கு உண்டு.
ஆனால் ... சொந்த உபயோகத்துக்கு ஒரு கிரைண்டரும் அவருக்கு தேவைப்பட்ட நேரம் அது. பார்த்தார் அப்துல் கலாம். கிரைண்டரை வாங்கிக் கொள்ள முடிவு செய்து விட்டார்..
ஆனால் ... கலாம் போட்ட ஒரு கண்டிஷன் :
“இந்த கிரைண்டருக்கு உண்டான விலையை நீங்கள் வாங்கிக் கொண்டால் மட்டுமே , இந்த கிரைண்டரை நான் வாங்கிக் கொள்ள முடியும் .”
பரிசாகக் கொடுக்க முடியவில்லையே என்று கம்பெனிக்காரர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
சரி. பரவாயில்லை. “4 ஆயிரத்து 850 ரூபாய்” என்று கிரைண்டரின் விலையைச் சொன்னார்கள் . அடுத்த நொடியே 4 ஆயிரத்து 850 ரூபாய்க்கான செக்கும் , கிரைண்டரும் கை மாறின.
ஆனால்... அடுத்து நடந்தது ....
அப்துல் கலாம் எதிர்பாராதது. அந்த கிரைண்டர் கம்பெனி , அவர் கொடுத்த செக்கை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை.
“அப்துல் கலாம்” என்ற அபூர்வ மனிதர் கையெழுத்து போட்ட அந்த செக்கை , அரிய பொக்கிஷமாக நினைத்து பத்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள். இரண்டு மாதங்களாகியும் கலாமின் கணக்கில் இருந்து, பணத்தை எடுக்கவே இல்லை. இது கலாம் கவனத்துக்கு வந்தது. அடுத்த நிமிடம் அப்துல் கலாம் அலுவலகத்திலிருந்து , அந்த கிரைண்டர் கம்பெனிக்கு போன் வந்தது.
“உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி , கிரைண்டருக்கான பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது...” “அல்லது..?” “ நீங்கள் கொடுத்த அந்த கிரைண்டர் உடனடியாக உங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் ..”
அப்துல் கலாமின் இந்த அதிரடி அன்பு மிரட்டலை , அந்த கிரைண்டர் கம்பெனி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
உடனடியாக செக்கை வங்கியில் செலுத்தி பணத்தை எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பின்னரே மனம் நிம்மதியானது அப்துல் கலாமுக்கு !
எப்பேர்ப்பட்ட ஒரு உன்னத மனிதர் அப்துல் கலாம்..? இப்படி ஒரு மனிதரை , எதிர்வரும் காலங்களில் இனி பார்க்க முடியுமா..?
சந்தேகம்தான்..! சரி .. இதோ... அப்துல் கலாம் கையெழுத்திட்ட அந்த பழைய செக்... பார்வைக்கு ...!

ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சி

அரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய்ப்பு!

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் கணக்கிட முடியாததாயிற்று. அதனால் எல்லோரிடம் அதன் தாக்கத்தைக் காணமுடிகிறது. மாணவர்களும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறார்கள்.
அதேபோல, தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்பிக்கும்போது கற்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். இதைக் கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வித் திட்டம் (SSA) மற்றும் Google நிறுவனம் இணைந்து Android செயலி உருவாக்கப் பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியானது சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டலவாரியாக நடைபெற உள்ளது.
பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்கள் அவர்களின் தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பயிற்சிக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் பயிற்சியின் மூலம் ஆசிரியர்கள் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் கூடுதல் திறன் பெறுவார்கள்.
அது கற்பிக்கும் முறையையும் மாற்றி அமைக்கும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்க்காணும் லிங்கில் உள்ள Google Form யை நிரப்பி அனுப்பவும்.
https://goo.gl/forms/WE50ZlB999wUFd6s1

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு...

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளம் மூலம், இன்று பதிவிறக்கலாம் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வு, ஜூன் மாதத்தில் நடந்தது. இத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இன்று (ஜூலை 28ம் தேதி), www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கலாம்.
தேர்வு பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்தால் மட்டுமே, மதிப்பெண் சான்றிதழை பார்வையிட்டு, பதிவிறக்க முடியும். வரும் 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மொழிப்பாட தாள்களுக்கு 305 ரூபாய், மற்ற பாடங்களுக்கும், விருப்பப்பாடத்திற்கும் 205 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பித்த பின், ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்ட எண் கொண்டு, தேர்வுத்துறையால் அறிவிக்கப்படும் நாளில், மறுகூட்டல் முடிவுகளை அறியலாம்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TRB SPECIAL TEACHERS EXAMS APPLY

TRB - SPECIAL TEACHERS




Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016.
Click here - Online Application form for Special Teachers

Thursday, July 27, 2017

D.T.Ed படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

"ஆசிரியர் டிப்ளமா: விண்ணப்பிக்க அவகாசம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமா படிப்புக்கு, வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம். தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான, டிப்ளமா படிப்பு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

இந்த படிப்புக்கு, ஏற்கனவே கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இருப்பினும், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருப்பதால், பிளஸ் 2 உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதன்படி, 31 வரை, www.tnscert.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது"

அப்துல் கலாம் மணிமண்டபம் இன்று திறப்பு

"ராமேசுவரத்தில் இன்று அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழா

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள, அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை திறந்துவைக்கிறார்.

இதனால் ராமேசுவரம் தீவு விழாக்கோலம் பூண்டுள்ளது. அப்துல்கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பேக்கரும்பு கிராமத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள கலாமின் சமாதி முன்பாக பலரும் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் பிரார்த்தனைக் கூடம், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், கலாமின் 100-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் பெற்ற விருதுகள், கலாம் தொடர்பான ஓவியங்கள் ஆகியன மணிமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன.

இம்மணிமண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திரமோடி தனி ராணுவ விமானத்தில் காலை 10 மணிக்கு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்தில் உள்ள இறங்கு தளத்திற்கு காலை 11 மணிக்கு வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து காலை 11.20-க்கு கார் மூலம் கலாமின் மணிமண்டபத்துக்கு வருகிறார். மணிமண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

பின்னர் மணிமண்டபத்தை திறந்து வைத்துப் பார்வையிடுவதோடு நினைவகத்திலிருந்து புதுதில்லி வரை செல்லவுள்ள அப்துல்கலாம்-2020 என்ற அவரது சாதனைப் பிரசார வாகனத்தையும் பிரதமர் கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.

காலை 11.55 மணிக்கு மணிமண்டபத்திலிருந்து புறப்பட்டு மண்டபத்தில் இந்திய கடலோரக்காவல்படையினரின் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு பிரதமர் செல்கிறார். விழா மேடையில் ராமேசுவரத்திலிருந்து அயோத்தி வரை செல்லும் புதிய ரயில் சேவையை அவர் தொடக்கி வைக்கிறார்.

தொடர்ந்து ராமேசுவரம் தீவுப்பகுதியில் தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல் முனை வரை ரூ.59 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கடற்கரைச் சாலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்தையும் தொடங்கி வைக்கவுள்ளார்.

விழா நிறைவு பெற்றதும் மீண்டும் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்து, ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து தனி ராணுவ விமானத்தில் புதுதில்லி புறப்பட்டுச் செல்கிறார். இவ்விழாவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்."

பி.இ படிப்பில் இனி அரியர் கிடையாது

"அரியர்' முறையை கைவிட்டது அண்ணா பல்கலைக்கழகம்: நடைமுறைக்கு வந்தது புதிய பாடத் திட்டம்

நிகழாண்டு முதல் 'அரியர்' முறையை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டுள்ளது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் 2 பாடங்களைக் கைவிட்டுவிட்டு எழுதவும், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 2 பாடங்களைக் கூடுதலாக சேர்த்து எழுதவும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பொறியியல் பாடத் திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அண்ணா பல்கலைக்கழகம் மாற்றியமைத்து வருகிறது. கடந்த 2013- இல் மாற்றியமைக்கப்பட்ட பாடத் திட்டம் மீண்டும் இந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பாடத் திட்டத்துக்கு பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இப்போது கலந்தாய்வு மூலம் பி.இ. முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு இந்த புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக கல்விக் குழுத் தலைவரும், கிண்டி பொறியியல் கல்லூரி டீனுமான கீதா கூறியது:

புதிய பாடத் திட்டத்தின்படி, பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கு விருப்பப் பாடத் தேர்வு முறை (சிபிசிஎஸ்) அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் மாணவர்கள் படிக்க முடியும்.

'அரியர்' முறை ரத்து:

2017-18 கல்வியாண்டு முதல் 'அரியர்' முறை ரத்து செய்யப்படுகிறது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் இரண்டு பாடங்களைக் கைவிட்டுவிட்டுகஈ தேர்வுஎழுத முடியும். ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக அடுத்த பருவத் தேர்வின்போது எழுத அனுமதிக்கப்படமாட்டார்.

மாறாக, அவர் தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்தப் பருவத் தேர்வில் வருகிறதோ, அப்போதுதான் அவர் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது அக மதிப்பீடு (இன்டர்னல்), புற மதிப்பீடு (எக்ஸ்டர்னல்) இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அடுத்த பருவத்தேர்வுக்கான 2 பாடங்களை முந்தைய தேர்வின்போதே கூடுதலாக சேர்த்து எழுத அனுமதிக்கப்படுவார்கள். படிப்பின்போது சிறப்பு புராஜெக்ட் செய்ய விரும்பும் மாணவர், அவருடைய 8-ஆம் பருவத்துக்கான பாடங்களில், 2 பாடங்களை 6-ஆம் பருவத் தேர்விலும், மற்ற 2 பாடங்களை 7-ஆவது பருவத் தேர்விலும் சேர்த்து எழுத முடியும். இதன் மூலம், 8-ஆம் பருவக் காலத்தில் அந்த மாணவர் தனது சிறப்பு புராஜெக்ட் பணியைச் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவார்.

இவர்கள் 7.50 சிஜிபிஏ வைத்திருக்கவேண்டும்.

படிப்புக்கு இடையே பணி வாய்ப்பு:

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர், படிப்புக்கு இடையே (3 ஆம் ஆண்டுக்குப் பிறகு) ஓராண்டு உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலைபார்க்க அனுமதிக்கப்படுவார்.

ஓராண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் கல்லூரிக்கு வந்து படிப்பை முடித்துக்கொள்ள முடியும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர் 'அரியர்' இல்லாமலும், முழு வருகையையும் வைத்திருக்கவேண்டும் என்பதோடு, ஒட்டுமொத்த கிரேடு மதிப்பெண் (சிஜிபிஏ) 8.50 என்ற அளவுக்கு குறைவில்லாமல் வைத்திருப்பது கட்டாயம்.

சி.பி.சி.எஸ். அறிமுகம் மற்றும் 'அரியர்' முறை ரத்து காரணமாக, பி.இ. சேரும் மாணவர் அதிகபட்சம் 7 ஆண்டுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதிகபட்சம் 5 ஆண்டுகளில் தேர்வுகளில் தோல்வியடையாமல், அனைத்துப் பாடங்களையும் முதல் முயற்சியிலேயே அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறும் மாணவருக்கு முதல் வகுப்புத் தகுதியுடன், சிறப்பிடமிடமும் (டிஸ்டிங்ஷன்) வழங்கப்படும்.

அதிகபட்சம் 6 ஆண்டுகளில் அனைத்துப் பாடங்களையும் முதல் முயற்சியிலேயே, அதிக மதிப்பெண்ணுடன் முடிக்கும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு வழங்கப்படும்.

மதிப்பிடும் முறையில் மாற்றம்

மதிப்பிடும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி 100 முதல் 91 மதிப்பெண் வரை பெற்றால் 'ஓ' கிரேடு (10 புள்ளிகள்) வழங்கப்படும். 90 முதல் 81 மதிப்பெண் வரை 'ஏ-பிளஸ்' (9 புள்ளிகள்). 80 முதல் 71 மதிப்பெண் வரை 'ஏ கிரேடு' (8 புள்ளிகள்). 70 முதல் 61 மதிப்பெண் வரை 'பி-பிளஸ்' (7 புள்ளிகள்). 60 முதல் 50 மதிப்பெண் வரை ''பி கிரேடு' (6 புள்ளிகள்). 50-க்கும் குறைவான மதிப்பெண் பெறுபவர்கள் மீண்டும் தேர்வு எழுதியாகவேண்டும்.

ஆன்-லைன் படிப்பு:

புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் ஆன்-லைன் பாட முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் ஒரு துணைப் பாடத்துக்குப் பதிலாக (எலெக்டிவ்), ஒரு ஆன்-லைன் பாடத்தை படிக்க முடியும். இதற்கான தேர்வை பல்கலைக்கழகமே நடத்தும். கல்லூரிகள் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது.

பைத்தான் அறிமுகம்

இப்போது முதல் பருவப் பாடத்தில் இடம் பெற்றிருக்கும் 'சி', 'சி பிளஸ்'' பிளஸ்' புரோகிராம்கள் கைவிடப்பட்டு புதிதாக 'பைத்தான்' அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொழில் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்போது பொறியியல் சேரும் மாணவர்கள் முதல் ஆண்டில் சி, சி பிளஸ் பிளஸ் படிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது."