கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, October 30, 2017

சிரிக்க கூடாத விஷயம்

வெற்றிகரமான திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.

நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது.

திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.

மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன்.

"ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.

*அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.*

*அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.*

*நீதி:*

*இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக செல்கிறது*

குறிப்பு: *சி்ரிக்க கூடாது*

முதுகு வலியைத் தடுக்க

முதுகு வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்!

நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!

"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! அத்தனை வகை... வைத்யமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சதுதான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. ஸொஸ்தப்படுத்தணும்"

முகத்தில் வேதனை தெரிந்தது.

" முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊறி, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவசர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.!

"சனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட சரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை] அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.!

அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதி-ன்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...!

போட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மொளகு ரஸம், பெரண்ட தொகையல் பண்ணி ஸாப்டு..! என்ன?" "கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்" மூணு மாஸம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர்.

வலி போய்விட்டதாம்.! எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரஸம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன ஸிம்பிள் வைத்யம் கை மேல் பலன்!

பெரியவா திருவாக்கிலிருந்து சில health tips...

வீடுகள்ள, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......

1. நல்லெண்ணெய் - வெளக்கேத்த, சமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. வெளக்கெண்ணெய் - வர்ஷத்ல ரெண்டு தரம், காலைல வெறும் வயத்துல குடிச்சா..... வயறு ஸெரியா இருக்கும். வயத்துவலி இருந்தா, கொஞ்சம் வெளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா ஸெரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனோமும் கை,கால், முட்டிகள்ள தடவிண்டா, முட்டி வலி வரவே வராது. [பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்] தெனோமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும்.

நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்ரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும். அந்த காலங்கள்ள, வெளிலேர்ந்து வந்தா... குடிசைவாஸிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிக்கிண்டுதான் வீட்டுக்குள்ளியே நொழைவா! இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான் கெடக்கு! பின்ன...ஏன் வ்யாதி வராது?......

Tuesday, October 24, 2017

நாளும் நாமும் கடைப்பிடிப்போம்

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*

✳பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.

✳உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

✳நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.

✳உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.

✳விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

✳தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.

✳விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள்.

✳விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள்.

✳சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.


✳செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.

✳எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

✳நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.

✳தானாய்த்தான் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....

* வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது...

உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.

அதனால் *வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள் சில:-

* கணவன்கள் - *படபடப்பு*

மனைவிகள் - *நச்சரிப்பு*

டீன் ஏஜ்க்கள் - *பரபரப்பு*

மாணவர்கள் - *ஏய்ப்பு*

மாமியார்கள் - *சிடுசிடுப்பு*

மருமகள்கள் - *கடுகடுப்பு*

வக்கீல்கள் - *ஒத்திவைப்பு*

டாக்டர்கள் - *புறக்கணிப்பு*

அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரிப்பு*

வயதானவர்கள் - *தொணதொணப்பு*

ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு *சிரிப்பு.*

இது உடம்புக்கு *மிகச்சிறப்பு...*

நாளும் நாமும் கடைப்பிடிப்போம்

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*

✳பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.

✳உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

✳நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.

✳உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.

✳விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

✳தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.

✳விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள்.

✳விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள்.

✳சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.


✳செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.

✳எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

✳நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.

✳தானாய்த்தான் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....

* வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது...

உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.

அதனால் *வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள் சில:-

* கணவன்கள் - *படபடப்பு*

மனைவிகள் - *நச்சரிப்பு*

டீன் ஏஜ்க்கள் - *பரபரப்பு*

மாணவர்கள் - *ஏய்ப்பு*

மாமியார்கள் - *சிடுசிடுப்பு*

மருமகள்கள் - *கடுகடுப்பு*

வக்கீல்கள் - *ஒத்திவைப்பு*

டாக்டர்கள் - *புறக்கணிப்பு*

அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரிப்பு*

வயதானவர்கள் - *தொணதொணப்பு*

ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு *சிரிப்பு.*

இது உடம்புக்கு *மிகச்சிறப்பு...*

தவறாத தப்புக்கணக்கு

எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார்.

கோவில், விட்டால் வீடு என்றுதான் வாழ்ந்து வந்தார். இதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம்

“எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார்.

இறைவன், “எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்குப் பதிலாக நாளை ஒருநாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்க வேண்டும். வருபவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதுமானது. யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது.

நீ கடவுள் சிலை என்பதை மறந்து விடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூறினார்.

அதற்கு அந்தப் பணியாளும் சம்மதித்தார். அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோவில் கருவறையில் நின்றார். இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்றுக் கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத் தொடங்கினார்.

முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான். அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாகத் தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றான்.

இதைக் கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாளர் பார்த்தார். ஆனால், இறைவன் நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார். அப்படியே அசையாது நின்றார்.

சிறிது நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது.

அவன், “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ஆசிர்வதிக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடையப் பிரச்சனைகளை எல்லாம் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயே எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்” என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன் வேண்டினான்.

சில வினாடிகள் கழித்துக் கண்களைத் திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவற விட்ட பணப்பை கண்ணில் பட்டது. அதனுள்ளே பணம் மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருந்த, அந்தப் பணியாளரால் தற்போதும் எதுவும் சொல்ல முடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூரப் பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான்.

அந்த நேரம் பார்த்து, பணப் பையைத் தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்பக் கோவிலுக்கு வந்தான். அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என்பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரைப் பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச் செல்கிறார்கள்.

இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார். சிலையாக நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி, “கடவுளே இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை.

தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் வாசல் மூடப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளரிடம், இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததைக் கூறினார். இறைவனோ இதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார்.

இறைவன் அதிருப்தியைப் பார்த்த பணியாளர் பதற்றமானான்.

இறைவன், “நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை…? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளத் தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச் சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தைச் சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத் தற்காலிகமாகத் திருட்டுப் பட்டம் சுமக்கச் செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன்.

அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணிப் போற்றுவான். இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்.

இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம் செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான்.

பணியாளர், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். “இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது” என்றான்...

ஒரு நாளும் இறைவன் தப்புக்கணக்கு போட்டதில்லை.

நன்றி

Monday, October 23, 2017

தமிழ்நாட்டுக்கு இப்படியொரு பெருமையா ?

பெருமை

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...

இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்!!

உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.

இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம்.

உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது,அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரியநகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.

இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது. படிக்கவே நமக்குப் பெருமையாக உள்ளது.

🙏பகிரவும்🙏

தேர்தல் கமிஷன் அறிக்கைகளை உடனுக்குடன் அறிய வேண்டுமா ?

''மொபைல் போன் பதிவு அவசியம்''

தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, மொபைல் போன் எண்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடந்து வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு, சமூக பாதுகாப்புத்துறை கமிஷனர், லால்வேனா, தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று திருப்பூர் மாவட்டத்தில் நடந்த, வாக்காளர் சிறப்பு முகாம் பணிகளை பார்வையிட்டார்.

பின் அவர், தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, மொபைல் போன் எண்களை பதிவு செய்ய வேண்டும். elections.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக, தங்கள், மொபைல் எண்களை இணைத்துக் கொள்ளலாம், என்றார்.

Saturday, October 21, 2017

கோவை வரலாறு

WELCOME

கோவை வரலாறு 

பூளைமேட்டின் 300வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நன்னாளில், கோவையின் வரலாற்றையும் அறிந்து கொள்வது இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இருக்கும் தார்மிகக்கடமை; இங்கேயே பிறந்து வளர்ந்தும் இந்த நகரின் சரித்திரம் அறியாதவர்களுக்கும், எங்கோ பிறந்து இங்கே வந்து குடியேறியவர்களுக்காகவும் இதோ! கோவையின் வரலாற்றுச் சுருக்கம்...
வரலாறு என்பது கடந்த காலம் உறைந்து கிடக்கும் பெட்டகம். மனித இனத்தின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும், வாழ்வுக்கும், தாழ்வுக்கும் சான்றாக இருப்பது வரலாறுகள்தான். ஒரு நாட்டின் வரலாறு, ஒரு குடும்பத்துக்கு எழுதப்படும் ஆவணத்தைப் போல உண்மையானதாக இருக்க வேண்டும் என்கிறார் மொழியறிஞர் பாவாணர்.
பழந்தமிழ் இலக்கியங்களையும், தமிழகத்தின் தொன்மையான வரலாற்றையும் பல்லாண்டுகள் ஆய்வு செய்து 1929 ல் முதன் முதலாக தமிழக வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர் பி.டி சீனிவாச ஐயங்கார். அவர் தனது நூலில் தமிழர்கள்தான் இந்தியாவின் மூத்தகுடிகள் என்கிறார்.
இந்தியாவின் வரலாறு வடக்கில் இருந்து எழுதப்பட கூடாது; தென்முனையில் இருந்து எழுதப்பட வேண்டும்; அதுவே உண்மையான வரலாறாக அமையும் என்னும் மனோன்மணீயம் சுந்தரனாரின் கருத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் வின்சென்ட் ஸ்மித் ஏற்றுக்கொள்கிறார். கொங்கு நாட்டைப் புறக்கணித்துவிட்டு தமிழக வரலாறை எழுத முடியாது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று.
கொங்கு மண்ணின் வரலாற்றை எழுதியவர்களில், முதன்மையானவர் கோவைக்கிழார் என்றழைக்கப்படும் சி.ம.ராமச்சந்திரன் செட்டியார். "இதுவோ எங்கள் கோவை' "இதுவோ எங்கள் நாட்டுப்புறம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியதன் வாயிலாக கோவை வரலாற்றை சிறப்பாக ஆவணப்படுத்தியவர் இவர்.
"கொங்கு தமிழக வரலாறு' எழுதிய கா.அப்பாத்துரை, "கொங்கு நாட்டு வரலாறு<; துளு நாட்டு வரலாறு' நூலை எழுதிய மயிலை சீனி வேங்கடசாமி, பூளைமேடு வரலாறு எழுதிய அ.கி. நாயுடு, கொங்கு நாட்டு கல்வெட்டுகள் பற்றி எழுதிய ஆய்வறிஞர் ராசு, சூலூர் வரலாற்றை எழுதிய செந்தலை கவுதமன், சமகால வரலாற்றை பதிவு செய்துள்ள கவியன்பன் பாபு, சி.ஆர். இளங்கோவன், பா. மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் கோவை வரலாறை எழுதியதில் குறிப்பிடத் தக்கவர்கள்.
கொங்கு நாட்டின் வரலாற்றை முதன் முதலில் எழுதிய அ.தி.முத்துசாமி கோனார், பொதுவான வரலாற்று பார்வையிலிருந்து வேறுபட்டு "கொங்கு நாடு தனி நாடு' என்கிறார். இன்றைய கோவை, கொங்கு நாட்டின் ஐந்தில் ஒரு பகுதிதான். கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, கரூர்,தர்மபுரி ஆகிய மாவட்டங்களும், மைசூர் தலைக்காடு, திருச்சி குளித்தலையையும் உள்ளடக்கியதுதான் கொங்குநாடு.
மேற்கே வெள்ளியங்கிரி மலை (மேற்கு தொடர்ச்சி மலை) வடக்கே தலைக்காடு (கோபி) தெற்கே வாகையூர் (பழனி) ஆகியவை கொங்கு நாட்டின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டன. கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய பேரூர் மற்றும் இதைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து பேரூர் நாடு என்று அழைக்கப்பட்டது.
இதில், ஒரு கிராமமாக இருந்ததுதான் இன்றைய கோவை. கோவன் என்ற இருளர் தலைவனின் ஆளுகையின் கீழ் இந்நிலப்பகுதி இருந்ததால் கோவன்பதி என்றும், கோவன்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் இப்பெயர் திரிந்து கோயமுத்துர் ஆனது. பேரூர் நாட்டை கேக்கண்டன் ரவி என்ற சேர மன்னன் ஆண்ட போது, மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னன் கொங்கு நாட்டை வென்று பேரூர் நாட்டையும் கைப்பற்றினான்.
பின்னர் தலைக்காட்டுக் கங்கர்கள் கைப்பற்றினர். கி.பி., 7 ம் நூற்றாண்டுக்கு பிறகு கங்கர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த சோழர்கள், கொங்கு சோழர்கள் என அழைக்கப்பட்டனர். கி.பி., 13 ம் நூற்றாண்டுக்கு பிறகு கொங்கு நாடு பாண்டியர்களின் வசமானது. சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு பின் ஒய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனரும், மைசூரின் கண்டிகர்களும் ஆண்டனர்.
அதன் பின் விஜய நகர பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி., 16 ம் நூற்றாண்டில் கோவை, மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது; 18ம் நூற்றாண்டுக்கு பிறகு பேரூர் நாடு, ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரால் ஆளப்பட்டது. 1799 ல் நடந்த நான்காம் மைசூர் போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்ட பிறகு கோவை முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தன.
ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் கோவை சிறப்பான வளர்ச்சியை அடைந்து. 1805 ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு கோவை அதன் தலைநகரமானது. 1866 ல் கோவை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் முதல் தலைவராக மெக்ரிகர் இருந்தார். 1888 ல் ஸ்டேன்ஸ் மில் துவங்கப்பட்டது. 1914 வரை இங்கு 3 மில்கள் மட்டுமே இருந்தன.
கோவை பகுதிகளில் பருத்தி விளைச்சல் அதிகமானதாலும், இங்குள்ள தட்ப வெப்ப நிலை நூற்பாலை தொழிலுக்கு ஏற்றதாகவும் இருந்ததாலும், பைக்காரா மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் அதிகம் கிடைத்ததாலும் பல நூற்பாலைகள் இங்கு தோன்றின. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரம் ஜவுளித்தொழிலில் சிறந்து விளங்குவது போல் கோவை இத்தொழிலில் சிறந்து விளங்கியதால் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என பெயர் பெற்றது கோவை.

வாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்

WELCOME 

வாக்காளர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம் 

தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். பெயர் சேர்க்கும் விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதிற்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
'ஆன் - லைனில்' விண்ணப்பிக்க விரும்புவோர் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். 2018 ஜன., 1ல், 18 வயது நிறைவடைவோரும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 18 - 25 வயதிற்குட்பட்டோர் தவிர மற்றவர்கள் தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும். 'இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தால் தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும் முன்னர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இயலவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

Wednesday, October 18, 2017

அறிவில்லாத கணவனுடண்

அறிவில்லாத கணவன்

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது.

ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள்.

அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.

அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான்.

அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.

எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.

போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.

அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.

அறிவிலிக் கணவன், அப்படியெ
ல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றான்.

தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.

நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.

அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.

அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள்.

பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.

மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.

''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள்.

நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.