கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, February 16, 2018

ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் வாங்க

ஆசிரியர் பயிற்சி தேர்வு : இன்று முதல் விடைத்தாள் நகல்

தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு:

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டயத் தேர்வின் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டல் செய்ய கடந்த மாதம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த நாட்களில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு விடைத்தாளின் நகல்கள் இன்று முதல் 20ம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இணைய தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்காக தேர்வுத்துறை உருவாக்கியுள்ள scan.tndge.in என்ற இணய தளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பெற்ற பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் விரும்பினால் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

அதற்கும் மேற்கண்ட இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்திஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment