கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, April 23, 2018

இன்று பாதி விலையில் புத்தகம் வாங்க வேண்டுமா? இதோ ஓர் அற்புதமான வாய்ப்பு

உலக புத்தக தினம் 50 சதவீதம் தள்ளுபடி

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, முக்கிய பதிப்பகங்கள், இன்று, 20 முதல், 50 சதவீதம் வரை, தள்ளுபடியில், புத்தகங்களை விற்பனை செய்கின்றன.

இன்று, உலக புத்தக தினம் சிறப்பிக்கப்படுகிறது. வாசிக்கும் பழக்கத்தை விசாலப்படுத்த, புத்தகங்களுக்கு, 20 முதல், 50 சதவீதம் வரை, தள்ளுபடி வழங்க, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

நியூ செஞ்சூரி புத்தக நிறுவனம், கண்ணதாசன் பதிப்பகம், பாரதி புத்தகாலயம், குமரன் பதிப்பகம், கலைஞர் பதிப்பகம், வனிதா பதிப்பகம், எதிர் வெளியீடு, சாஜிதா புக் சென்டர், உயிர்மை பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ், நவீன விருட்சம் உள்ளிட்ட பதிப்பகங்கள், தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்ய முன்வந்துள்ளன.

மேலும், கன்னிமாரா நுாலக வளாகத்தில் உள்ள, நிரந்தர புத்தக காட்சியிலும், சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.இன்று மட்டும், காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வாங்கலாம்.

No comments:

Post a Comment