கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, April 23, 2018

இனி கட்டாயம் உடற்கல்வி

9-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கட்டாயம் சிபிஎஸ்இ அறிவிப்பு

மாணவர்கள் உடலுழைப்பின்றி இருப்பதை தடுப்பதற்காகவும், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகளை எதிர்கொள்ளும் தகுதியை மாணவர்கள் பெறுவதற்கு சிபிஎஸ்இ கல்வி வாரியம் பள்ளிகளில் தினமும் விளையாட்டு நேரம் இடம்பெற வேண்டும் என  புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய விதிமுறையில் விளையாட்டு பயிற்சி முறைகள் குறித்தும், அவற்றை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்த 150 பக்க விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

இதன் படி அனைத்து பள்ளிகளிலும் 9- வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தினமும் விளையாட்டு நேரம் ஒதுக்கப்படும் என்றூம்,  இதற்கு தனியாக விளையாட்டு ஆசிரியர்கள் தேவை இல்லை என்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்குவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள விளையாட்டு மற்றும் பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், அந்த மதிப்பெண்கள் பொதுத்தேர்வை எழுதுவதற்கான தகுதிக்கான மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment