இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம்
மூவேந்தர் ஆண்ட தமிழகமும் தலை நிமிர்திருக்கும்
அன்று மன்னராட்சியில் மக்கள் செழிப்பாக இருந்தார்கள்
இன்று மக்களாட்சியில் தலைவர்கள் செழிப்பாக இருக்கிறார்கள்
கல்லணை கட்டிய கரிகாலன் போல்
பல அணைகளை கட்டிய காமராஐர் மறைந்த போதே
நல்ல தலைவர்களும் மறைந்து விட்டார்கள்
இவர் நல்லதை செய்வார்
என்று எண்ணித்தான் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம்
ஆனால் இன்று
எதிலும் உயர்வு
எல்லாம் உயர்வு
வாக்களித்த நமக்கு மட்டும் உயர்வில்லை
அறிக்கைகளை நம்பி நம்பியே
அடிமைகளாக இருக்கிறோம்
நமது ஆசைகளே அவர்களின் மூலதனம் என்பதை ஏன் மறந்து விட்டோம் ?
இலவசம் தருகிறார்களே அதற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு நாளாவது சிந்தித்து இருப்போமா ?
இலவசத்திற்காகவே வரும் மீண்டும் எல்லாவற்றிலும் ஓர் உயர்வு
இனியும் இலவசத்தை எதிர்பார்த்தால்
இருப்பதையும் இழக்க வேண்டும்
சிந்தித்து வாக்களி சிறப்பாகட்டும் தமிழகம்
No comments:
Post a Comment