கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes
Showing posts with label katturai. Show all posts
Showing posts with label katturai. Show all posts

Friday, June 22, 2018

கடிதம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை

கடிதம்  எழுதும் போது  கவனத்தில்  கொள்ள வேண்டியது. 


1 ) அனுப்புனர்  அல்லது  விடுநர்  பெயர், முகவரி குறிப்பிட வேண்டும். 

2 ) பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும். 

3 ) யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது  என்பதைப்பொருத்து 
எப்படி  அழைப்பது  என்று  முடிவு செய்து  எழுத  வேண்டும். 


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  மதிப்பிற்குரிய  ஐயா  என   
அழைக்க வேண்டும். 


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் 
அன்புள்ள   என  அழைக்க வேண்டும். 


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  அன்புடையீர்  என அழைக்க வேண்டும். 

4 )  கடிதத்தின்  பொருள்  என்ன என்பதை  எழுத வேண்டும். 

5 ) உள்ளடக்கம் -  நாம்  என்ன  சொல்ல  விரும்புகிறோமோ, அதை 
சுருக்கமாக  எழுதிட வேண்டும். 


6 )  இறுதியில்   ஊர், நாள்  ஆகியவற்றை  கடிதத்தின்  வலது  மூலையில் 
எழுதிட வேண்டும். 

7 )  இடது மூலையில்  யாருக்கு  கடிதம்  அனுப்பியுள்ளோம்  என்பதைப் 
பொறுத்து  தங்களின் பணிவான, அன்பான, உண்மையான  என்று 
எழுதிட வேண்டும். 


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  தங்களின் பணிவான   என   
நிறைவு செய்திட  வேண்டும். 


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் 
தங்களின் அன்பான    என  முடித்திட  வேண்டும். 


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  தங்களின் உண்மையான   என நிறைவு செய்திட  வேண்டும். 


எந்த ஒரு கடிதத்திலும்   மேற் சொன்ன ஏழு 
அம்சங்களும்  கண்டிப்பாக  இருந்திட வேண்டும். 

தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி வேண்டி கடிதம்

தற்செயல்  விடுப்பு  கேட்டு  அலுவலகத்திற்கு  கடிதம் 


விடுநர் 
                 கே.சுப்பிரமணி, 
                 சார் பணியாளர், 
                 சம்பள வரிசை  எண்  456745 
                எல்.ஐ.சி ஆப்  இந்தியா, 
                வாணியம்பாடி  கிளை. 
பெறுனர் 
              கிளை மேலாளர், 
               எல்.ஐ.சி ஆப்  இந்தியா, 
              வாணியம்பாடி  கிளை. 

மதிப்பிற்குரிய  ஐயா, 

                                                             பொருள் :   
விடுப்புக் கடிதம். 

நெருங்கிய  உறவினர்  ஒருவரது  திருமணம்  வரும்  16 .06 .2011  அன்று வேலூரில்  நடைபெறவுள்ளது. நான்  அத்திருமணத்திற்கு  அவசியம் 
செல்ல வேண்டியுள்ளதால்   16 .06.2011  அன்று  ஒரு நாள் மட்டும் 
தற்செயல்  விடுப்பு  அளிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன். 
                                                                   நன்றி 

இடம் : வாணியம்பாடி                                                       
தங்களின் உண்மையான 

நாள் : 15 .06 .2011                                                                         

மருத்துவ விடுப்பு கேட்டு கடிதம்

மருத்துவ   விடுப்பு  கேட்டு  பள்ளிக்கு   கடிதம் 



விடுநர் 
                 தா.தங்கவேலு , 
                 ம/பெ த.சுப்பிரமணி 
பெறுநர் 
                  தலைமை ஆசிரியர் 
                  அரசு மேல்நிலைப் பள்ளி 
                  சத்துவாச்சாரி 



மதிப்பிற்குரிய  ஐயா, 

                                                             பொருள் :   
மருத்துவ  விடுப்புக் கடிதம். 

                          எட்டாம் வகுப்பு பி பிரிவில் படித்து வரும் என் மகன் த. 
சுப்ரமணிக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். மருத்துவர் அவனுக்கு காய்ச்சல் அதிகமாக 
இருப்பதால் அவனக்கு கட்டாயமாக ஓய்வு தேவை என்றுள்ளார். எனவே அவன் ஆறு மற்றும் ஏழாம் 
தேதி அவனுக்கு விடுமுறை  அளிக்கும்  படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 


                                                                               நன்றி 

இடம: 
வேலூர்                                                                     
தங்களின் உண்மையான 

நாள் : 06 .06 .2011                                                                         

தெரு விளக்கு எரிய வேண்டி நகராட்சிக்கு கடிதம்

தெரு விளக்கு எரியவில்லை என்று நகராட்சிக்கு கடிதம் 

விடுநர் 
                 கே.பாண்டியன்
                  1 /2  திருநகர் 
                  வேலூர் 
பெறுநர் 
                  ஆணையாளர் 
                   வேலூர்  மாநகராட்சி 
மதிப்பிற்குரிய ஐயா, 
                                        
பொருள் :விளக்கு எரியவில்லை என்று 
நகராட்சிக்கு கடிதம். 
                            
 என் பெயர் கே.பாண்டியன். நன் வேலுரின் திருநகரில் 
வசித்து வருகிறேன். எங்கள் தெருவில் கடந்த இரண்டு வாரங்களாக தெரு விளக்கு எரியவில்லை. 
இதனால் பொது மக்கள் மிகவும் அல்லல் படுகிறார்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் பாதையில் 
செல்வது மிகவும் கடினமாக உள்ளது. எதிரில் வாகனங்கள் வருவதை எளிதில் காண 
முடியவில்லை. எனவே விரைவில் தெரு விளக்கை சரி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 
                                                              நன்றி 



இடம: 
வேலூர்                                                                     
தங்களின் உண்மையான 

நாள் : 06 .06 .2011                                                                         

பள்ளி சான்றிதழ் வழங்க வேண்டி தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதுதல்

பள்ளிச் சான்றிதழ் கேட்டு   தலைமை ஆசிரியருக்கு கடிதம் 

விடுநர் : 
                 ச.கரண் 
                 பத்தாம் வகுப்பு 
                 அரசு மேல்நிலை பள்ளி 
பெறுநர் 
                  தலைமை ஆசிரியர் 
                   அரசு மேல்நிலை பள்ளி 
மதிப்பிற்குரிய ஐயா : 
                                                 
 பொருள்: பள்ளிச் சான்றிதழ் 
கேட்டு தலைமை ஆசிரியருக்கு கடிதம். 


                                           
  என் பெயர் ச.கரண். நன் பத்தாம் 
வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் . என் தந்தைக்கு பணியில் இடம் மாற்றம் 
ஏற்பட்டுள்ளதால் நான் இப்பள்ளியை விட்டு நீங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது 
பள்ளிச் சான்றிதழை அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 
                                                                               நன்றி 
                                          இப்படிக்கு

இடம்: 
வேலூர்                                                             நாள்: 06 .06 .2011                                                                         

நண்பனுக்கு நீ சென்ற சுற்றுலா குறித்து கடிதம்

நீங்கள் சென்ற இடம் பற்றி நண்பனுக்கு கடிதம் 

                                                                                                                            
                                           ல.முத்துசாமி 
                                                                                                                             வேலூர் 
                                                                                                                             06 .06 .2011 
அன்புள்ள  ராஜா, 
                                            நலம் நலமறிய ஆவல். முத்துசாமி
எழுதுவது. நான் சென்ற வாரம் என் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரி 
சென்றேன். நான் சென்ற ஊர்களுள் இதுவே என்னை மிகவும் கவர்ந்தது.இந்திய பெருங்கடல், வங்காள 
விரிகுடா, அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடம்.  இந்தியாவின் தெற்கு 
பகுதியான இவ்விடத்தில் சூரியன் உதயம் ஆகும் போது இரு கண்களுக்கும் விருந்து போல் 
இருக்கும். கடற்கரை எல்லாம் அவ்வளவு அழகு. அங்குள்ள திருவள்ளுவர் சிலை மிகவும் 
தத்ரூபமாக செதுக்கி உள்ளதன் மூலம் தமிழனின் திறமை புலனாகிறது. விவேகானந்தர் நினைவு 
மண்டபம், காந்தி மண்டபம் போன்றவையும் என்னை கவர்ந்தன. நான் மிகவும் மன திருப்தியுடன் ஊர் 
திரும்பினேன். நீயும் ஒரு முறை அங்கு சென்று வா. ஒரு நாள் வீட்டுற்கு அவசியம் வர வேண்டும். 
                           இப்படிக்கு உன் பதில் கடிதத்தை ஆவலுடன் எதிர் பார்த்து 
கொண்டிருக்கும் ஆருயிர் நண்பன் 
                                                                                                                           ல.முத்துசாமி

Thursday, April 5, 2018

இனியாவது ஏமாற வேண்டாமே ?

இனியும் ஏமாற வேண்டாம்

தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீங்களே அது எதற்கு??

நல்ல வேலைக்கு போகவா??

ஆங்கிலம் சரளமாக பேசவா??

குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??

எதற்கு? ?

ஏன்? ?

என்று சிந்தித்ததுண்டா??

Pre kg 25000 ல் துவங்குகிறது

Lkg 40000 Ukg 50000

1st.60000

2ND 70000

3D. 80000

4TH 90000

5TH 100000

6TO8 1.20000

9TO10. 150000

11TO12 200000 லட்சம் .

ஆக மொத்தம் 9,85000 ரூபாய் .

இது கிராமங்கள்ல இருக்கிற CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.

சரி இதெல்லாம் இருக்கட்டும் இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா???

உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள் அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும் . மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்யமுடியும் உங்களால்.  

ஒன்றை நினைவில் வையுங்கள்.  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்கு கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவளித்து?? தமிழகத்தில் 9 ன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

அத்தனை பேரும் மருத்துவராக?? பொறியாளராக வரமுடியுமா?? உங்கள் பிள்ளையும் இவ்வாறு வரவேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தீர்கள்.  சரி இப்போது அவர்களால் மருத்துவராகவோ பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சென்று சேர்ப்பீர்கள்??? CBSE கல்லூரியிலா?? அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே??

அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரிதான் இல்லையா??? இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE, மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா??? இல்லை?? இல்லவே இல்லை ??இப்போது உங்கள் பிள்ளைகளோடு சாதாரண அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள்தான் படிப்பார்கள் என்பதை உணருங்கள்.???

பத்துலட்சத்திற்கு மேல் செலவளித்து படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியை பணமே செலவளிக்காமல் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் எங்கே? ? இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி கடைசியில் ஏமளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?? உங்கள் பிள்ளை சாதனையாளனா??  இல்லை பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா???

உங்களுக்கு தெரியுமா TNPSC தேர்வில் தேர்வாகும் 99 சதவீதப்பேர் அரசுப்பள்ளியில் தமிழில் படித்தவர்கள் என்று? ?? TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று????  

இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் பேரும் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?? ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்??? உங்களால் ஆனித்தரமாக எடுத்துக்கூற முடியுமா??

CBSE ,மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று? ? அந்த பள்ளிகளை பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்களாம் ?? இனியேனும் விழித்துக்கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?? அரசுப்பள்ளிகள் அடித்தளமான பள்ளிகள் என்று அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள் அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்??

வாருங்கள் குரல் கொடுப்போம் அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற சட்டம் இயற்ற குரல் கொடுப்போம். அப்படி சட்டம் இயற்றுவார்களா? ? அரசியல்வாதிகள்  இயற்றினால் என்ன நடக்கும்? ?அரசுப்பள்ளியில் அமைச்சர் மகனுடன் நம்பிள்ளை கலெக்டர் மகனுடன் நம்பிள்ளையும் படிப்பார்கள் கட்டட வசதிகள் அதிகமாகும். சத்துணவு சத்தான உணவாகும்.

நவீன கருவிகள் முறையில் பாடம் கற்பிக்கப்படும் CBSE பாடத்திட்டம் மொழிபெயர்க்கப்படும். செலவுகள் குறைக்கப்பட்டு நம் எதிர்காலத்திற்காக பணம் சேமிக்கப்படும். சிந்தித்து மற்றவரிடம் கொண்டு சேர்ப்போம் என்றும் அன்புடன் அரசு பள்ளி.

Monday, February 12, 2018

உடற்கல்வியின் அவசியம் - கட்டுரை

உடற்கல்வியின் அவசியம்
முன்னுரை:


                உடற்கல்வி உடல் வளத்தைப் மேம்படுத்துவதுடன் மன வளத்தையும் மேம்படுத்தும். ஊக்கம் கட்டுபாடு போன்ற அரிய பண்பு நலன்களுக்கு காரணமாய் அமைவது கல்வியை ஆகும்.
உடலின் நன்மைகள்
உடம்பே ஆலயம் உயிரே தெய்வம் என்பது திருமூலரின் வாக்கு உடல் கல்வியென்று  எப்போது கூற கற்றுக்கொண்டோம் அப்போதே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டோம். உடற்கல்வியால் விளையாட்டின் விதிமுறைகள் நுணுக்கங்களையும் கற்கின்றனர். அவற்றைப் கடைப்பிடிக்கும் பயிற்சியையும் பெறுகின்றனர்.
உடல் அசைவுகளை ஆராய்ந்து ஒவ்வொரு அசைவும் என்ன என்பதை உணர்ந்து செயல்படும் ஆற்றலை பெறுகின்றனர். பள்ளி பாடத்துடன் உடற்கல்வி பாடமும் என்று புகட்டப்படுகிறது. உடற்கல்வி தனித்திறமை வளர்க்கவும் உடல் வளத்தை உயர்த்தி கொள்ளவும் ஓய்வு நேரத்தைச் பயன்பாட்டுடன் செலவழிக்கவும் துணை நிற்கிறது.
உடற்கல்வி பெற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோர்  உலகளாவிய புகழும் பெரும் பொருளும் பெறுகின்றனர் ‌. உலக மக்கள்  அறிவதற்கான விளம்பரமும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்களும் பரிசுகளும் பெறுகின்றனர்.
மேலும் மேற்படிப்பிற்கு இட ஒதுக்கீடும் பொருளுதவியும் பெறுகின்றனர். வேலை வாய்ப்பிலும் அவர்களுக்கு சிறப்பிடம் வழங்கப்படுகிறது.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்பதைப் போல சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். பிள்ளைகளுக்கு உடல் பலம் ஏற்படுத்தாமல் வெறுமனே படிப்பை மட்டுமே கொடுப்பால் நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறையும். அவாள் அவாள் எந்த ஒரு செயலையும் செய்ய இயலாது. உடல் வலிமையுடன் இருந்தால் தான் வாழ்கையில் முன்னேற முடியும். எவரும் உடல் வலிமையுடன் இருந்தால் தான் நாட்டையும் வீட்டையும் காக்க முடியும். இதற்கு உடற்கல்வி அவசியம்.
முடிவுரை:
பால் நல்ல பாத்திரத்தில் வைத்திருந்தால் தான் கெடாமல் சுவைக்கும். உயிரும் நல்ல உடலுக்கும் இருந்தால் தான் வாழ்வு கெடாமல் சிறக்கும். அதற்கு உடற்கல்வியால் உடம்பைக் வளர்ப்போம்.அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்துவோம்‌.

புகார் கடிதம் எழுதும் முறை - கட்டுரை

புகார் கடிதம் எழுதும் முறை

அனுப்புனர்:
எம் . காவேரி
18 குமரன் தெரு
சிவகாசி நெடுஞ்சாலை
சென்னை 600456

பெறுநர்:
துணை ஆய்வாளர்
காவல் நிலையம்
சென்னை 600456

அய்யா
     வணக்கம் அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நாங்கள் பள்ளிக்கு வரும் போதும் பள்ளி முடிந்து வீட்டுக்கு போகும் போதும் குறிப்பிட்ட மாணவர்கள் எங்களை கேலி செய்கிறார்கள். மேலும் ஆபாசமாகவும் பேசுகிறார்கள்.
       நீங்கள் தயவு செய்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு இனி இவ்வாறு நடக்காதவாறு தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
           நன்றி ஐயா
           இப்படிக்கு
      காவிரி மற்றும் வினோதா.

சென்னை
மே 20. 2018

மரங்களின் நன்மை - கட்டுரை

முன்னுரை

எவ்வளவு தான் அறிவியல் முன்னேற்றம் வந்தாலும் கூட இயற்கை செல்வங்களின் உறுதுணை மிக அவசியமானது. இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டே மனித வாழ்க்கை   நடக்கிறது. அதில் மரங்களின் பயன்கள் மிக அதிகம். மரங்கள் என்பது கடவுள் நமக்களித்த அரிய படைப்பாகும். மேலும் மரங்களின் வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாக்கிறது.
மரங்களினால் மனிதயினம் எண்ணற்ற பயன்களை பெறுகின்றன. மரங்கள் கார்பன் டை ஆக்சைடு எடுத்து கொண்டு ஆம் உயிர் வாழ தேவையான ஆக்சிசனை நமக்கு தருகிறது. மேலும் காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை நமக்குத் தருகிறது. வீடு கட்டுவதற்கும் பலவகையான மரச்சாமான்கள் பல உபயோகமான மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. மரங்கள் பறவைகள் மிருகங்கள் அங்கு வர்க்கே தங்குவதற்கு இருப்பிடமாய் விளங்குகிறது. வீட்டு உபயோகத்திற்கு அடுப்பின் விறகாக பயன்படுகிறது. மேலும் நிலத்தின் தன்மையை மாற்றாமல் அப்படியே வைத்து நிலத்தடி நீரை தூய்மையாக தருகிறது.
மரங்களின் இலை வேர் தண்டு முட்டில் பூ காய் கனி இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்தில் மிகவும் பயன்படுகின்றன. மழை செய்வதுக்கு மரங்கள் மிகவும் உதவியாக உள்ளது.
எல்லா வகையிலும் பயனைத் தரும் மரங்களை இன்றைய நாகரீக உலகமானது தமது வசதிக்காக கட்டிடங்களை கட்டுவதற்கும் கிடைக்கும் மரங்களை அதிக அளவு அழித்து வருகிறது. மரங்களை அதிகமாக அழிப்பதனால் சுற்றுச்சூழல்  மாசடைகிறது. இதனால் இருக்கும் மரங்களை இனியாவது பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். மழையை தருகின்ற மரங்கள் இயற்கை பொக்கிஷம் என்பதை நினைவில் கொள்வோம்.
முடிவுரை
ஒரு நாடு வளமும் நலமும் பெற்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமெனில் அதற்கு மழை மிக முக்கியம். பசுமைப் புரட்சி ஏற்பட மழைதான் உதவி செய்கிறது. எனவே மரம் வளர்ப்போ ஒருவரின் உடமை என்றே கூறலாம். பலவற்றிலும் மனித சமுதாயத்திற்கு பயன்படும் மரங்கள் நட்டு வளர்ப்போம். இயற்கையை காப்போம்.

Wednesday, February 7, 2018

நன்றி மடல் எழுதும் முறை

நன்றி மடல்

                           25, கவிதா நகர்,      சென்னை

அன்புள்ள பெரியப்பாவுக்கு நாங்கள் அனைவரும் சுபம். நீங்கள் எல்லோரும் அவ்வண்ணமே நல்ல  சுகத்துடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.

ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாளை மறக்காமல் எனக்கு பிறந்தநாள்  அனுப்புபவர் நீங்கள் ஒருவரே. உங்கள் அன்பின் ஆழத்திற்கும் அன்பிற்கும் பிறந்த நாள் பரிசாக எனக்கு கொடுத்த கைகடிகாரத்திற்காகவும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி செலுத்துகிறேன்.

இப்படிக்கு உங்கள் அன்பை பெற்ற

தேவா.

பெறுநர் :

சிவநேசன், 30 ,குறுக்கு தெரு ,சாமி புரம் காலணி ,சென்னை.20

Wednesday, October 18, 2017

தீபாவளி என்னன்ன பெயர்களில் இந்தியாவில் கொண்டாப்படுகிறது - ஓர் பார்வை

இந்திய தீபாவளி

இந்தியா முழுக்கக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இது இந்துக்கள் பண்டிகையென பலரும் நினைத்துள்ளார்கள். இந்துக்கள் மட்டும் இல்லை, பல மதத்தவரும், பல்வேறு மாநிலத்தவரும் தீபாவளி கொண்டாடும் முறையும் விதமும் வேறு, சிறப்பானது. அது ஒரு தொகுப்பாக இங்கே.

* தீபங்களின் ஆவளியான தீபாவளியை நம்மவர்கள் விளக்குகளால் அலங்காரம் செய்து கொண்டாடவில்லையெனினும் வட நாட்டவர் மாலை நேரங்களில் விளக்குகளால் வீடு முழுவதும் அலங்கரித்துக் கொண்டாடுகின்றனர். தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்னதிருந்தே மின் விளக்கு சரங்களால் வீடுகள் அலங்கரிக்கப்பட்டுவிடுன்றன.

*  நமது பொங்கல் பண்டிகை போலானது வடக்கிந்திய தீபாவளி. மூன்று நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் நாள் வீடை சுத்தம் செய்து பழைய சாமான்களை எரிப்பதாகும். இந்த நாள் நரக்சௌதஸ் என அழைக்கப்படுகிறது. வீட்டின் பழைய பொருட்களை வெளியேற்றி வீட்டு வாசலில் சிறு அகல் தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது. வீடு முழுக்க சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படும் நாளிது.

* இதே முதல் நாள் ரூப்சௌதஸ் என மார்வாடி குடும்பங்களால் கொண்டாடப்படுகிறது. பெண் அழகாகும் நாள் எனப் பொருள்பட அந்த நாள் பெண்கள் முகம், கைகளில் கடலைமாவு மற்றும் இன்ன பிற அலங்காரப் பத்துகளையும் இட்டு அழகுறும் நாள்.

*  தீபாவளிக்கு இருவாரங்களுக்கு முன்னால் துர்கா பூஜா வட இந்திய வீடுகளில் கொண்டாடப்படும். இது நவராத்திரியின் கடைசி நாள்.

* துர்கா பூஜாவிலிருந்து பதினைந்து முதல் இருபது நாட்களுக்குப் பின் தீபாவளி தினத்தன்று கொண்டாடப்படுவது லக்ஷ்மி பூஜா. தீபாவளி தினத்தன்று காலை உறவினர்களுக்குள் பரிசுகள் பரிமாறி மகிழ்ச்சியைக் கொண்டாடி மாலை குடும்பம் முழுக்கக் கூடி லட்சுமி தேவியை வணங்கும் நன்னாள்.

* தீபாவளியன்று லட்சுமி பூஜை சிறப்பிக்கப்படுவதால் அன்றிரவு லட்சுமி தேவி தங்கள் வீட்டிற்கு வருவதாக எண்ணப்பட்டு இரவு முழுக்கக் கதவை மூடாது இருப்பார்கள். வீடு பூட்டியிருந்தால் வரும் லட்சுமி (செல்வம்) திரும்பிப் போய்விடுவதாக ஐதீகம்.

* பனியா எனப்படும் வாணிபக் குடும்பங்களில் தீபாவளி இரவன்று அனைவரும் விழித்து சீட்டுக் கட்டுகள் கொண்டு பணம் வைத்து விளையாடுவது வழக்கம். இது சூதாட்டம் என நம்மால் அறியப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை தீபாவளியன்று பணம் வரும் விளையாட்டாகக் கருதப்பட்டு இன்றும் தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது.

*  தசரா தினத்தன்று ராவணனை அழித்து, இலங்கையிலிருந்து சீதையை அழைத்துக் கொண்டு ராமன் அயோத்தியை அடையும் தினத்தன்று அவர்களை வரவேற்கும் விதமாக அனைவரும் தீபமேற்றி இனிப்புகள் பகிர்ந்து மகிழும் நாளே வடக்கில் தீபாவளி.

* ஆனால் தென்னிந்தியர்கள் மத்தியில் கிருஷ்ணன் தன் மாமன் கம்சனை வதம் செய்யும் நாள் தீபாவளி என அறியப்படுகிறது. இதன் மூலம் நம்மவர்கள் கிருஷ்ண அவதாரத்தைக் கொண்டும், வடக்கிந்தியர்கள் ராம அவதாரத்தைக் கொண்டு தீபாவளி கொண்டாடுகிறார்கள் எனும் முரணறியலாம்.

* மூன்று நாட்கள் தீபாவளியில் மூன்றாம் நாள் பசுக்களுக்கும் கன்றுகளுக்குமானது. மார்வாடி கலாச்சாரத்தில் அன்று பசுச்சாணத்தால் விளக்கு செய்து அவ்விளக்கைக் கொண்டு பசுவையும், கன்றுகளையும் தொழுது வீட்டிற்குக் கன்றை அழைத்து அந்த விளக்கை மிதிக்கச் செய்து அதன் மூலம் நற்பலன் வருவதாகக் கருதுகின்றனர்.

* தீபாவளிக்கு அடுத்த நாள் அன்னகூட். இது பெரும்பாலும் அனைத்து வடக்கிந்தியக் குடும்பங்களிலும் பின்பற்றப்படுகிறது. ஏழு வகைக்காய்கறிகள் கலந்த சத்சாகா எனும் கூட்டும், கூடவே முப்பது முதல் நாற்பது வகை உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அன்னபூர்ணி மாதாவை வணங்கி உணவு உண்ணப்படுகிறது.

* தீபாவளிக்கு அடுத்த நாள் பௌர்ணமி. பௌர்ணமியின் இரண்டாம் நாள் பாய்தூஜ். இது சகோதர சகோதரிகளுக்கான நாள். சகோதரிகள் சகோதரனுக்கு நெற்றியில் டீக்கா எனப்படும் குங்குமம், அரிசி, குங்குமப்பூ கலந்த திலகமிட்டுப் பரிசுகள் வழங்குவர். பதிலுக்கு சகோதரரும் சகோதரிகளுக்கு இனிப்பும், பரிசுப் பொருட்களும் வழங்குவர். அந்த நாள் முழுக்க சகோதரனும் சகோதரியும் ஒன்றாக உணவருந்திப் பேசிக் களிப்பதற்கான நாள்.

* தலை தீபாவளி கொண்டாடும் பெண் கணவன் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் எனும் முறை பஞ்சாபில் உள்ளது. திருமணமான தம்பதிகளின் முதல் தீபாவளியும் குழந்தையின் முதல் தீபாவளியும் மிக முக்கியமானது. இரண்டுமே கணவன் வீட்டிலேயே கொண்டாடப்பட வேண்டியவையும் கூட.

*  பீகாரில் தீபாவளி அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தீபாவளியின் ஆறாம் நாளான “சட் பூஜா”(Chhath Pooja). ஆறு நிலைகள் எனப் பொருள்படும் இந்நாளின் முக்கியத்துவம் சூரியனை ஆறு நிலைகளில் வழிபடுவதாகும். இது தாலா சட் எனவும் அழைக்கப்படுகிறது.

*  தீபாவளி முதல் சட் தினம் வரை கடும் விரதமிருந்து சூரியனை வணங்குகின்றனர். சட் தினத்தன்று சூரியோதயத்திற்கு முன்னும், சூரிய அஸ்தமனத்தின் பொழுதும் இரு வேளைகள் நீர்நிலைகளுக்கு சென்று மலர்கள், இனிப்புகளைத் தண்ணீரில் விட்டு சூரியனைப் பார்த்துத் தொழுது கோரிக்கைகள் வைக்கின்றனர். நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் சட் பூஜையைக் கடைபிடிக்கின்றனர்.

*  கல்கத்தா மற்றும் வங்காளத்தில் காளி மாதாவைத் தரிசித்துப் பூஜித்து தீபாவளி தினத்தைத் தொடங்குகின்றனர். காளி மாதா மிகவும் உக்கிரமானவளென்பதால் அவள் துணையிருந்தால் எல்லா தீய சக்திகளும் அழிபட்டுத் தொடரும் நாட்கள் இனிதாய் இருக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக தீபாவளி தினத்தன்று புத்தாடையோ அல்லது புதுப் பொருட்களோ வாங்கும் வழக்கம் பெங்காலில் இல்லை. இனிப்புகள் மட்டுமே வாங்கப்படுகின்றன.

*  ஜம்மு அண்ட் காஷ்மீரில் பெங்காலுக்கு நேரெதிர்க் கொண்டாட்டங்கள். பொதுவாக வாங்கப்படும் அனைத்துப் புதிய பொருட்களும் தீபாவளி தினத்தன்று வாங்குவதாய்ப் பார்த்துக் கொள்கிறார்கள். ஆடைகள், தங்கம், வாகனங்கள், வீடு எனப் பெரும்பாலான வரவுகள் தீபாவளியன்றே நிகழ்கின்றன.

* ஜம்முவில் மட்டுமின்றி இந்தியா முழுக்கவே அக்‌ஷய திருதியையும் தீபாவளிக்கு முன்னரே வருவது. இதன் காரணம் தீப நாளில் தங்கமும் பெருக வேண்டுமென்பதே.

*  களிமண்வீடுகள் அதிகளவிலிருக்கும் ஹிமாச்சலில் வீடுகள் சாணத்தால் மெழுகப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. பொதுவாக மூதாதையர்களை நினைவு கூறும் தினமாக தீபாவளி தினம் சிறப்பிக்கப்படுகிறது. சிறுமிகள் களிமண் பொம்மைகள் அல்லது பானைகள் செய்து அதற்கு சிவப்பு நிற வண்ணமிட்டுத் தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் பரிசளிப்பது வழக்கம்.

* ராஜஸ்தானிகளுக்கும் மிகச் சிறப்பான தினமாக தீபாவளி நாள் உள்ளது. ராஜஸ்தானிகளின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பாலாடை கச்சோரி, எள்ளுருண்டை, சோன்பப்டி, ஜிலேபி, பிஸ்தா பர்ஃபி போன்ற பலகாரங்கள் வீட்டிலேயே செய்யப்பட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகிக்கப்படுகின்றன. திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், புதிதாய்ப் பிறந்த ஆண்குழந்தைகளுக்கு தீபாவளி மிகச்சிறப்பானது. தவிர, குளிர்காலத்தை வரவேற்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது.

* தீபாவளியிலிருந்து எட்டாம் நாள் கோவர்த்தன பூஜை தினமாக வழிபடப்படுகிறது. வட நாடுகளில் கிருஷ்ண பகவான் இந்திரனைத் தோற்கடித்து கோவர்த்தன மலையைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்துக் கிராம மக்களை மழையிலிருந்து காத்த திருநாள் கோவர்த்தன பூஜா தினம். இது குஜராத்தின் விக்ரம் சம்வத் காலண்டரின் முதல் நாள்.

* தீபாவளிக்கு அடுத்த நாள் விஷ்வகர்மா தினம். அனைத்து தொழில் செய்வோரும் தங்கள் எந்திரங்களுக்கு பூஜை செய்யும் நாளிது. பொதுவாக புதுக்கணக்குகள் இந்த நாளிலேயே தொடங்கப்படுகிறது. இத்தினத்தன்று எந்த தொழிலதிபரும் தொழிலுக்கு விடுமுறையளித்து மூடுவதில்லை.

* இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்கள் மற்றும் ஜெய்ன் சமயத்தவரும் தீபாவளி கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் கொண்டாடுவதற்கான காரணங்கள் வெவ்வேறானவை.

* ஜெய்ன் சமய குரு மஹாவீரர் முக்தி / மோட்சம் அடைந்த நாளாக தீபாவளி ஜெய்ன் சமயத்தினரால் வழிபடப்படுகிறது. இது ஜெய்ன் மக்களிடையே துக்க நாளாக அனுஷ்டிக்கப்படாமல் அவர்களின் குரு ஞானஒளி அடைந்த புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது.

*  முகலாய மன்னர் ஜஹாங்கிரால் சிறையிலடைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாம் குரு ஹர்கோபிந்த் சிங் குவாலியர் கோட்டையிலிருந்து 1916இல் விடுதலை செய்யப்பட்ட நாளாக தீபாவளி நாளை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.இந்த நாளில் அம்ரிஸ்தரின் பொற்கோவில் முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அவற்றின் ஒளி சுற்றியுள்ள நீரில் பட்டு ஒளிர்வது கண்கொள்ளாக் காட்சி.

* நரகாசுர வத நாளாகத் தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளிக்கு முந்திய நாள் லட்சுமி பூஜாவாகக் கர்நாடகாவில் துதிக்கப்பட்டு மறுநாள் தீபாவளி நரசதுர்தசியாக வழங்கப்படுகிறது.

* மூன்று நாட்கள் விழாவாகக் கர்நாடகாவில் கொண்டாடப்படும் தீபாவளியின் முதல் நாளன்று வீடை சுத்தம் செய்து அலங்கரிப்பதும், இரண்டாம் நாள் அமாவாசை தினத்தில் பூஜையும், மூன்றாம் நாள் மஹாபலி சக்கரவர்த்தியை வென்ற வாமனனைப் பூஜிக்கும் பலிபடையாமியாகவும் கொண்டாடப்படுகிறது.

* ஆந்திராவில் ஹரி கதா எனப்படும் மேடைப் பிரசங்கங்கள் தீபாவளியன்று பிரபலம். அத்தோடு நரகாசுரன் உருவ பொம்மைகள் வைத்து அதைக் கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர்களைக் கொண்டு எரித்து மகிழப்படுகிறது.