Thursday, May 25, 2017

கவலையை மறக்க கொஞ்சம் சிரிப்போம்

1. பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார். ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்.... நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....

2. *மாணவன்* : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!

*ஆசிரியர்* : இப்பவாவது உணர்ந்தியே!

*மாணவன்* : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

3. *தொண்டன் 1*: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

*தொண்டன் 2*: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

3. *மருத்துவர்* : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..

*பெண்* : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க.

4.எல்லா *stage*'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா *கோமா stage*'ல டான்ஸ் ஆட முடியுமா?

5.*டாக்டர்*: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...

*நோயாளி*: ஏன் டாக்டர்?

*டாக்டர்*: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..

6. *நோயாளி*: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

*டாக்டர்* : இந்த டானிக்கை சாப்பிடுங்க.

*நோயாளி*: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ?

*டாக்டர்*: no no...நல்லா இருமலாம்...

7.*டாக்டர்* : தற்கொலைக்கு முயற்சி செஞ்சீங்களாமே?

*நோயாளி*: ஆமா டாக்டர் வயித்துவலி பொறுக்கமுடியல....

*டாக்டர்*: நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல.... ஒரு நாள் பொறுக்கமுடியாதா....

8. *ஒருவர்:* எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

*டாக்டர்*: ஏன்? *ஒருவர்*: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்...

9. *நடிகை*: ''டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !''

*டாக்டர்*: ''பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!''

10. *டாக்டர்*: தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்

*ஒருவர்*: இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன... என் மனைவிதான் அதை காபினு சொல்றா..

11. என்ன டாக்டர் இது... பிரிஸ்கிரிப்ஷன்ல 'ஐ லவ் யூ...'ன்னு எழுதியிருக்கீங்க..?'

''சாரி! இது நர்சுக்கு கொடுக்கவேண்டிய சீட்டு... இடம் மாறிடுச்சு!''

12. ''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.'' ''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்....'''

13. ‘‘ஆபரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்...ீ ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’

‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’

13.ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்காறு. தெரியுமா.?

சோமு :இப்பத்தான் டைனோஸரஸே கிடையாதே.!

ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!!!!!

14. சார்…மீனுக்கு புழு வாங்கணும், அங்கே பக்கத்துல கடை இருக்கா..?

ரேஷன் கடை இருக்கு பாருங்க…!!

15.மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??" கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க" மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

😀😍😇😜😎😝😭😆😂

Wednesday, May 24, 2017

CBSC RESULT TODAY

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12:00 மணிக்குள் வெளியிடப்பட உள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10.98 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மே 19ல் இருந்து, எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், சி.பி.எஸ்.இ., வாரியம், அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இன்று மதியம் 12:00 மணிக்குள், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. முடிவுகளை,

cbseresults.nic.in

என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தாண்டு +1 சேரும் மாணவர்களுக்கு மட்டும் 600 மதிப்பெண்

பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

வரும், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, கட்டாய பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில் புதிதாக சேரப்போகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மொத்த மதிப்பெண், 600 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த மாணவர்கள், 2018 - 19ல், பிளஸ் 2 செல்லும் போது, பிளஸ் 1ல் எழுதியது போன்று, மொத்தம், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.

இறுதியில், 1,200 மதிப்பெண்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2க்கான, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

இந்நிலையில், தற்போது பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு, தேர்வு முறையில் மாற்றம் உள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் கூறியதாவது:

மார்ச்சில் நடந்த ஆண்டு இறுதி தேர்வை முடித்த, பிளஸ் 1 மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்க உள்ளனர். அவர்களுக்கு, தேர்விலோ, மதிப்பெண் முறையிலோ, தேர்வுக்கான நேரத்திலோ மாற்றம் இல்லை.

தற்போது நடைமுறையில் இருக்கும், 1,200 மதிப்பெண்களுக்கு, கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முறைகளிலேயே, அவர்களுக்கு தேர்வு நடக்கும். மூன்று மணி நேரம் தேர்வு எழுத வேண்டும். தேர்வு முடிவில், பிளஸ் 2க்கு மட்டுமே, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

எனவே, இந்தாண்டு பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்கள், இதில் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.-

Tuesday, May 23, 2017

பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம்

"நடப்புக் கல்வியாண்டு முதல் +1 தேர்வுகளை பொதுத்தேர்வு ஆக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பள்ளிக் கல்வித்துறை செயலர் உதயசந்திரனும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றார்.

அப்பொழுது செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுருப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன்படி 1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்புக்ளுக்கான பாடத்திட்டங்கள் வரும் 2018-19 ஆம் கல்வி ஆண்டிலிருந்தும்,

2,7,10 & 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வரும் 2019-20 ஆம் கல்வி ஆண்டிலிருந்தும்,

3,4,5 & 8 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வரும் 2020-21 ஆம் கல்வி ஆண்டிலிருந்தும் மாற்றம் செய்யபட உள்ளது.

இவ்வாறு மாற்றப்படும் பாடத்திட்டங்கள் மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களுக்கு இணையாக இருக்கும்.

இந்த புதிய பாடங்களில் தமிழர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த பாடத்திட்டங்களை நடத்துவதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.

நடப்புக் கல்வியாண்டு முதல் +1 தேர்வுகளை பொதுத்தேர்வு ஆக்குவதற்கான அரசாணை தற்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் முன்னர் அறிவித்தபடி +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு சரிசம முக்கியத்துவம் வழங்கும் விதமாக, பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களானது ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 600 என வழங்கப்படும்.

அத்துடன் இரண்டுக்கும் சேர்த்துஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலானது வழங்கப்படும். அதே போல மாணவர்களது தேர்வு நேரமானது 3 மணி நேரத்திற்கு பதிலாக 2.30 மணி நேரமாக குறைக்கப்படும்.

மேனிலை வகுப்பு மாணவர்களுக்கு வார விடுமுறை நாட்களில் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் விதமாக, மூன்று மணி நேரம் பயிற்சி வழங்கப்படும். அதே போல இனிமேல் மொத்தமுள்ள மதிப்பெண்களிகள் 10% சதவீத மதிப்பெண்கள் அக மதிப்பீடுக்கென ஒதுக்கப்படும்.

அதே போல கல்லூரிகளில் உள்ளது போன்று +1 வகுப்பு மாணவர்களுக்கு அரியர்ஸ் முறை அறிமுகம் செய்யப்படும். அதேபோல் பள்ளிகளில் மாணவர்களுக்கு வேலை நேரம் முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். பல்வேறு விதமான போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தரப் படுத்திக்கொள்ளும் விதமாக இது அமையும்.

மாநிலம் முழுவதும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதுவரை ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும்.

முக்கியமாக ஆறு முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது அறிவியல் வகுப்பின் ஒரு பகுதியாக கணிப்பொறி அறிவியல் சேர்க்கப்படும். நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் நமதுஅரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்."

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம்

"விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!

மத்திய அரசின் 7-வது் ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது.

அதாவது, "அரசுத் துறைகளில் 01.05.2017 அன்று பணியாற்றுவோர் விபரம், அவர்களின் ஊதிய விபரம், காலிபணியிட விபரம், 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை ஓய்வுபெறுவோர் விபரம், தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் விபரம்" ஆகியவற்றையும் 30.6.2017-க்குள் கோரியுள்ளது.

இந்தத் தகவல் கிடைத்த பிறகு, மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழுவுக்கு இணையான சம்பளம் தமிழக அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது"

10 -ஆம் வகுப்பு மறு கூட்டலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (மே 24) மாலை 5.45 மணி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 19 முதல் மே 22 வரை இதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இதை நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்

+2 தேர்வு முறையில் மாற்றம்

பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம்: விரைவில் அரசாணை

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளின் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது பாடவாரியாக உள்ள மொத்த மதிப்பெண்ணை, 200-இல் இருந்து 100-ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் இனிமேல் 1200 மதிப்பெண்களுக்குப் பதிலாக 600 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாகக் குறைக்கப்பட உள்ளது. 10 மதிப்பெண்ணுக்கு பொது அறிவுக் கேள்விகள்.

100 மதிப்பெண்ணில் 90 மதிப்பெண்களுக்கு பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மீதியுள்ள 10 மதிப்பெண் பொது அறிவு தொடர்பானது. நீட் மற்றும் தகுதித் தேர்வில் மாணவ, மாணவிகளின் தகுதித் திறனை அதிகரித்துக் கொள்ள இந்த 10 மதிப்பெண்களுக்கு வெளியில் இருந்து பொது அறிவாக கேட்கப்படும்.

பிளஸ் 1 தேர்விலும் இதே முறை பின்பற்றப்படும். கல்லூரிகளில் 3 ஆண்டுகளில் மதிப்பெண்களைச் சேர்த்து ஒரே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதே முறை மேல்நிலைப் பள்ளிகளில் பின்பற்றப்படவுள்ளது.

அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இம்மாற்றங்களுக்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

கவலையை மறக்க கொஞ்சம் சிரிப்போம்

1. பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார். ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்க...

Popular Posts