கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, February 25, 2021

இன்றைய வரலாற்று தகவல்கள் 3

*இன்றைய வரலாற்று தகவல்*
*நிலையான நிலவரி திட்டம்1793*
* ராபர்ட் கிளைவ் வங்காள நவாப்பிடமிருந்து  வங்காளம். பீகார் ஒரிசா ஆகிய மாகாணங்களில் வரி தண்டல் உரிமையை( திவானி) பெற்றிருந்தார்.
* இம்முறையில் நிலங்களை ஏலம் விடும் முறை நடைமுறையில் கொண்டு வந்தார். இம்முறை ஆண்டுதோறும் நடைபெற்று வந்தது.
* வாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஏலம் விடும் முறையைக் கொண்டு வந்து தோல்வி அடைந்தார்.
* வறட்சி. பிளேக் நோய். வாந்தி பேதி போன்ற காரணங்களால் விவசாயி வரி செலுத்த முடியவில்லை எனவே அரசுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கவில்லை.
* இதனால் அரசுக்கு நிரந்தர வருவாய் பெறும் பொருட்டு காரன்வாலிஸ் பிரபு நிலையான நிலவரி திட்டத்தை கொண்டு வந்தார்.
* வங்காளத்தின் வருவாயை அதிகப்படுத்த வேண்டும் என்று பிட் இந்திய சட்டம் வலியுறுத்தியது.
* சோதனைக்காக காரன்வாலிஸ் பிரபு முதல் 10 ஆண்டு காலத்திற்கு நிலையான நிலவரிதிட்டத்தை கொண்டு வந்தார்.
* இத்திட்டத்தை வகுப்பதில் அவருக்கு உதவியவர்கள் ஜேம்ஸ் கிராண்ட். ஜொனதன்பங்கன்.ஷோர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
* இதனால் ஆண்டுதோறும் ஏலம் விடும் முறை அகன்றது.
* இத்திட்டம்1770 ஆம் ஆண்டு வங்கப் பஞ்சம் முடிவதற்குள் கொண்டு வரப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்
* இத்திட்டத்தால் ஜமீன்தார் குடும்பங்கள் பாதிப்படைந்தன குறிப்பாக தினா பூர் ராஜா. பிஸ்னாப்பூர் ராஜா.நுதியாராஜா.கோசிகர் ராஜா குடும்பங்கள் பாதிப்படைந்தன.


No comments:

Post a Comment