கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, February 25, 2021

இன்றைய வரலாற்று தகவல்கள் 2

*இன்றைய வரலாற்று தகவல்*

*சர் வில்லியம் ஜோன்ஸ்(1746-1794)*
🌺1746செப்28இல் westminster London பிறந்தார்.
🌺 தந்தை -வில்லியம்
🌺தாய்-மேரிநிக்ஸ்ஜோன்ஸ்
🌺வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ் அப்போது நடைமுறையில் இருந்த சர் எலிஜா இம்பேயின் சட்டமுறைகளை மாற்றி அமைத்தார்.
🌺சிவில் வழக்குகளில் மதத்திற்கு ஏற்றபடி நீதி வழங்க முக்கிய காரணமாக இருந்தவர்.
🌺வாரிசுரிமை. திருமணம் போன்றவை இந்து முஸ்லிம் சட்டங்களின்படி தீர்ப்பு கூறப்பட்டன.
 🌺கடந்தகால வரலாற்றை ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்ட ஜோன்ஸ்
*Asiatic society* என்ற அமைப்பை வங்காளத்தில் நிறுவினார்.
🌺இதன் நோக்கம் இந்தியாவின் மொழி. வானவியல் சாஸ்திரம். அறிவியல். மருத்துவம். நீதி. வரலாறு. புவியியல். விவசாயம். இசை. கட்டிடக்கலை பற்றிய ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை வெளியிடுவதே நோக்கம்.
 🌺எனவே அக்காலத்தில் கிடைக்கப்பட்ட வரலாற்றுச் சான்றுகளின் படி1789இல் செய்திகள் தொகுக்கப்பட்டு கட்டுரையாக வெளியிடப்பட்டன.
🌺காளிதாசர் எழுதிய சாகுந்தலம் என்ற நூல் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ரிது சம்ஹாரம் என்ற நூலும் மொழிபெயர்த்தார்
🌺Asiatic societyபின்
The Asiatic society
The Asiatic society of Bengal
The RoyalAsiatic society of Bengalஎன்று மாறியது
🌺பதினோரு ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்த அவர் இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்ய உறுதுணையாக இருந்தார். இந்த அமைப்பில் இருந்தஜேம்ஸ்பிரின்ஸ்ப் போன்றோர் பிற்காலத்தில் வரலாற்றை ஆய்வு செய்ததில் முக்கிய பங்காற்றினர்.
🌺1794 இறந்தார்.


No comments:

Post a Comment