கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, February 25, 2021

இன்றைய வரலாற்று தகவல்கள் 1

*இன்றைய வரலாற்று தகவல்*

*ஜேம்ஸ் பிரின்செப்*
🌷கிபி 1799 இல் இங்கிலாந்தில் பிறந்தவர்..
🌷வங்காளத்தில் ஆங்கில அரசிடம் பணிபுரிந்தவர்
🌷ஏசியாட்டிக் சொசைட்டியின் எழுத்தாளர் மற்றும் செயலாளர் பதவியில் இருந்தவர்
🌷இந்தியாவில் கிடைத்த நாணயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தவர் குறிப்பாக குஷாணர் காலம் .குப்த கால நாணயங்களை ஆய்வு செய்தவர்
🌷பிராமி வரிவடிவ எழுத்துக்களை மூன்று வகையாக பிரித்தனர்
🌷குப்தா பிராமி. அசோகா பிராமி. குட்டி லா பிராமி என வகைப்படுத்தினர்
🌷 பழங்கால இந்திய எழுத்துக்களை ஆராய்ச்சி செய்தவர்களில் முன்னோடி
🌷 தில்லி. பீகார். அலகாபாத். பாட்னா போன்ற இடங்களில் ஆய்வு செய்தவர்
 🌷விகாரங்கள் .ஸ்தூபிகள் கண்டுபிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர்.
🌷 1837இல் எட்வர்டு ஸ்மித் உதவியுடன் சாஞ்சி  கல்வெட்டுக்கள் ஆய்வு செய்தார்
🌷இக்கல்வெட்டுகள் பாலி மொழியிலும் பிராகிருத மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.
🌷பிரம்மி வரிவடிவத்தில் அவை அமைந்துள்ளன.
 🌷பிற்கால கல்வெட்டு ஆராய்ச்சிகள் தொல்லியல் சான்று கண்டுபிடிப்பு போன்றவற்றிற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
🌷அலெக்சாண்டர் கன்னிங்காமின் பிற்கால தொல்லியல் கண்டுபிடிப்புக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
🌷1840இல் இறந்தார்


No comments:

Post a Comment