சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
சட்டசபை தேர்தலில், ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள், தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.
வாக்காள அட்டை இல்லாதவர்கள்
தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, மாற்று புகைப்பட அடையாள ஆவணமாக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.
அவற்றில் சில :
1.கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
2 .ஓட்டுனர் உரிமம்
3.மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
4.வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் கூடியது)
5. பான்கார்டு
6 .தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
7 .மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
8 .தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
9 .புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
10 . தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட, அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு
11 . லோக்சபா, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அலுவலக அடையாள அட்டை.
இத்தனை ஆவணங்கள் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே, அவர் ஓட்டு போட முடியும்.
No comments:
Post a Comment