கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, May 1, 2016

plus two result coming 10 days

 பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயி ரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.

மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்தவுடன், 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை "பார்கோடு' மூலமாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்தது. பின்னர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் மதிப்பெண்களை தொகுக்கும் பணியும், சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்துப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?: மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு (மே 16) பிறகு, மே 23 அல்லது 24-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment