கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, June 26, 2016

பொறியியல் கலந்தாய்வு இன்று

பொறியியல் மாணவர் சோ்க்கை பொதுப்பிரிவு கவுன்சலிங் இன்று தொடக்கம் அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடக்கும்

தமிழகம் முழுவதும் உள்ள 524 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 9 இடங்கள் உள்ளது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் முதல் நடைபெற்றது.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 3,812 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டது.

மொத்த தகுதியான விண்ணப்பங்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண்கள் 80 ஆயிரத்து 910 பேர், பெண்கள் 50 ஆயிரத்து 272 பேர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 69 ஆயிரத்து 575 பேர்.

இவர்களுக்கான ரேங்க் பட்டியல் கடந்த 22ம் தேதி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து 24ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 25ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில் இன்று முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு அடுத்த மாதம் 21ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதையடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும். இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக பல்கலை வளாகத்தில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளுடன் வரும் பெற்றோர் அல்லது சகோதரிக்கு பல்கலையில் தங்கி கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment