அறிவியல் அறிவோம்
* உடல் எடை அதிகரிப்பே
உலகளவில் கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களில் 15 சதவீதம் பேர் இந்தியாவில் தான்உள்ளனர்.
இந்த எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது.கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு தென்மாநில பெண்களின் அதிக அரிசி உணவும், வட மாநிலப் பெண்களின் கோதுமை உணவுமே காரணமாக கூறப்படுகிறது.
தாயின் உடலில் அதிகரிக்கும் சர்க்கரை தொப்புள்கொடி வழியாக குழந்தைக்கும் சேர்கிறது. இதனால் குழந்தையின் உடல் எடை அதிகரித்து சுகப்பிரசவத்தில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பரதேந்து அரிச்சந்திரா விருது
பரதேந்து அரிச்சந்திரா
19ம் நுாற்றாண்டைச்சேர்ந்தவர். இவர் தான் நவீன இந்தி இலக்கியம் மற்றும்இந்தி நாடகத்தின் தந்தை என சிறப்பிக்கப்படுகிறார்.
ரசா என்ற புனைப்பெயருடன் இலக்கியங்களைப் படைத்த இவர் வாரணாசியைச் சேர்ந்தவர்.
இவரது பெயரில் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சிறந்த இந்தி படைப்புகள்,பத்திரிகைக் கட்டுரைகள், டிவி மற்றும் வானொலிபடைப்புகளுக்கு பரதேந்து அரிச்சந்திரா விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது
No comments:
Post a Comment