கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, June 4, 2016

மடிக்கணினிக்கு மாணவர் கணக்கெடுப்பு

இணையதள வசதியுடன் மடிக்கணினி அரசு பள்ளிகளில் கணக்கெடுப்பு

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில், மடிக்கணினி பெற தகுதியானவர்களின் பட்டியலை சேகரித்து அனுப்ப, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், சில ஆண்டுகளாக விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

ஆண்டு தணிக்கையின்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும், மடிக்கணினி வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், புதிதாக தொடங்கப்பட்ட சுயநிதி பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கு, மடிக்கணினி வழங்கப்படவில்லை.

அதனால், மடிக்கணினி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த, அந்த பிரிவு மாணவர்கள், பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில், இணையதள வசதியுடன், மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான, தேவைப்பட்டியல் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்தாலும், சுயநிதி பிரிவு மாணவர்களை, மடிக்கணினி தேவைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும், அதை, அந்த பிரிவு மாணவர்களிடமும் தெளிவாக அறிவுறுத்திவிட வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment