கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, December 29, 2016

பழைய 500 ,1000 நோட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

#பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள்.....!!! நாளை மறுநாள் முதல் வங்கிகளில் தவிர இனி வேறு எங்கும் செல்லாது...!!!

*மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அபராதம் மற்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது...!!!

*புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த மாதம் 8–ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

#கால அவகாசம் நாளை முடிகிறது.... அதன்படி, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

*நாட்டில் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இதுவரை ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

#மார்ச் 31–ந் தேதி வரை...!!! *கால அவகாசம் முடிந்த பிறகும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை, ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

*குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தொலைதூர பகுதிகளில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை இவ்வாறு கொடுத்து மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

*அப்போது அந்த ரூபாய் நோட்டுகளை தாமதமாக மாற்றுவதற்கான காரணத்தையும் அவர்கள் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

*அவசர சட்டம்...!!

*மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுளை வைத்து இருப்பது குற்றமாக கருதப்படும்.

*இதுதொடர்பாக மத்திய அரசு, ‘குறிப்பிட்ட வங்கி ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு அவசர சட்டம்’ என்ற புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது....

*பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

*இந்த அவசர சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

அபராதம்...

* ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றும் போது தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.5,000 அல்லது அவர்கள் டெபாசிட் செய்யும் பணத்தைப் போன்று 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

* செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை ஒருவர் வைத்துக் கொள்ளலாம். #அபராதம், சிறை தண்டனை....!!!

* மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு அதற்கு அதிகமாக யாராவது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

* அப்படி யாராவது வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது வைத்து இருக்கும் தொகையைப் போல் 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

* சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

#அமலுக்கு வரும்....

*இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதல் கிடைத்ததும் அவரச சட்டம் அமலுக்கு வரும்....!!!

*பின்னர், இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றதும், அவசர சட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

*முன்பு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது, 1978–ம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது......!!!

*அப்போதும் அது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் இப்போதும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட இருக்கிறது. #கருப்பு பணம்...

*கருப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுக்கும் நோக்கத்திலும்தான் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

*அந்த வகையில், கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் தாமாக முன்வந்து அதுபற்றிய கணக்கு விவரத்தை தெரிவித்து, அந்த தொகைக்கு 50 சதவீத வரியும், அபராதமும் செலுத்தி தண்டனையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி உள்ளது.....!!!

*அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டால், அந்த நபர்கள் வைத்திருக்கும் தொகைக்கு 90 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment