கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, January 29, 2017

என்ஜினீயரிங் படிப்புக்கும் பொதுத் தேர்வா ?

நாடு முழுவதும் என்ஜினீயரிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர ‘நீட்’ என்ற பொது நுழைவுத் தேர்வை கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இத்தேர்வை தமிழக மாணவர்கள் எழுதுவதற்கு கடந்த வருடம் விதிவிலக்கு அளிக்கப்பட்டது,இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்துவது போல என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு பொதுவான ஒரே நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுதி குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற வேண்டும் என்ற புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 1-ந்தேதி நடக்கும் மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.உயர் கல்வியில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வருகிறது. தேசிய தேர்வு ஏஜென்சி மூலம் பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடத்த முடிவு செய்துள்ளது.

அனைத்து தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களிலும் உயர் கல்வி பெற இத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். இதுபற்றிய முழு விவரங்களை புரிந்து கொண்ட நிதி மந்திரி அருண்ஜெட்லி பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை 2018 கல்வி ஆண்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மூலம் செயல்படும் ‘நே‌ஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ இந்த பொது நுழைவுத் தேர்வை மாணவர்களுக்கு நடத்த இருப்பதால் மாணவர் சேர்க்கை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக நடைபெறும்.

மேலும் தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு பல்வேறு தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. பொது நுழைவுத் தேர்வு ஒன்றை மட்டும் எழுதினால் போதுமானது.தற்போது ஏ.ஐ.சி.டி.இ., ஐ.ஐ.டி., சி.எஸ்.எஸ்.இ., கேட், காட், நீட், ஐ.ஐ.எம். போன்று தனித்தனியாக தேர்வுகள் எழுதி பல்வேறு தொழில் நுட்ப பாடப்பிரிவுகளில் சேருகிறார்கள்.இது மாணவர்களுக்கு சிரமத்தையும், கஷ்டத்தையும் கொடுப்பதால் நாடு முழுவதும் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே போதும் என்று மத்திய அரசு கருதி இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகம் உள்பட மாநிலங்களில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் அரசே இத்தேர்வை நடத்தி பெரிய அளவில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இனிவரும் காலங்களில் அதனை மாற்றி மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்’பொது தகுதித்தேர்வு நடத்துவது போல பொறியியல்- தொழில்நுட்ப கல்லூரிகளிலும் ஒரே பொதுத்தேர்வு நடத்தும் வகையில் இத்திட்டம் தயார் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment