கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, February 19, 2017

வயிறு வலிக்க சிரிக்க

1,.நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!

2. யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு.....

உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.

3 .கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ...

அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

4 .என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!!

உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...

5 .இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...

யாருங்க அந்த மகாலட்சுமி ?....

எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

6. வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்! ...... இப்படி எல்லாம் சொல்லி வீழ்ந்தவன் மனச நேகடிக்காதிங்க!!

7. உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...

உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்

8 .கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?....

இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

9 .இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ...

நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...

10 .கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.

11 .நாம ஓடீப்போயிடலாமா ...

செருப்பு பிஞ்சுடும் ...

பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்

12 ."ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு?

அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.

13. கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு?

அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.

14 .காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது.

(செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும் கேட்கலையே?

அப்படியா! அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ ?

No comments:

Post a Comment