கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, February 22, 2017

மொழியும் தேன்மொழியும்

1 .நண்பர் 1: போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ?

நண்பர் 2: அதுக்கென்ன .. .. ?

நண்பர் 1: குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. ..

2. நண்பர்: திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?

அதிகாரி: நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.

3 .நண்பர் 1: டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...

நண்பர் 2: எப்படி சொல்றீங்க..?

நண்பர் 1: படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே

4 .நண்பர் 1: என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?

நண்பர் 2: நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..

5. நண்பர் 1: மொழிப் பிரசினையால என் மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்.

நண்பர் 2: மொழிப் போராட்டமா ?

நண்பர் 1: தேன்மொழியைக் கெடுத்துட்டான்.

6.நண்பர் 1: அந்த அம்பயர் ஏன் நடுவில் நிக்காம ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?

நண்பர் 2: அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாங்களாம்.

7 .நண்பர் 1: தீபாவளிக்கு ரிலீசாகற படங்கறதால இந்த மாதிரி சீன் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.

நண்பர் 2: என்ன சீன்?

நண்பர் 1: ஹீரோயின் தொப்புள்ல சங்குச் சக்கரம் விடறமாதிரி!

8 .நண்பர் 1: நீங்க இதுவரைக்கும் எவ்வளவு கவிதை எழுதியிருப்பீங்க?

நண்பர் 2: சரியா சொல்லனும்னா 10 கிலோ 300 கிராம்.

9 .நண்பர் 1: இதோ தர்றேன் அவசரப்படாதீங்க எல்லாருக்கும் உண்டு அப்டீன்னு 100, 200ன்னு ரூபாய அள்ளி வீசுறாரே அவர் என்ன பெரிய கோடீஸ்வரரா?

நண்பர் 2: நீ வேற வாங்கின கடனை திருப்பி வாங்க சம்பளத்தன்னிக்கி ஆபிஸ்க்கே கடன்காரங்க வந்திருக்காங்க.

10 . நண்பர் 1: சீக்கரமே பணத்தை பெருக்க என்ன வழி?

நண்பர் 2: கீழே போட்டுட்டு விளக்குமாறு எடுத்து பெருக்க வேண்டியதுதான்

No comments:

Post a Comment