கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, February 21, 2017

வெண்கலமும் மூன்றாவது புருஷனும்

1 .கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி:: நான் என்ன பண்றது அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

2, கணவன்: "வயசான என் அம்மா மேல உனக்கு மரியாதையே இல்ல"

மனைவி: "தயவு செஞ்சு அப்டி சொல்லாதீங்க. தினமும் மனசுக்குள்ளேயே உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேனே."

3. மனைவி: "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."

கணவன்: "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."

4 .மனைவி: வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?

கணவன்: அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?

மனைவி: இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

5 .கணவன்: நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?

மனைவி: அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.

6. கணவன்: "உங்க அப்பா பெரிய ஒலிம்பிக் ரசிகரா இருக்கலாம். அதுக்காக தங்க நகைக்கு பதிலா வெங்கல நகை செஞ்சு போட்டா என்ன அர்த்தம்?"

மனைவி: "நீங்க எனக்கு மூணாவதா வந்த புருஷன்னு அர்த்தம்."

7.மனைவி: எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?

கணவன்: டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு

8 .மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன்: வேற என்னதான் போட்ட?

மனைவி: பேசாம பட்டிணி போட்டேன்

No comments:

Post a Comment