கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, March 27, 2017

இப்படியும் கதை யோசிப்பங்களோ ?

ஒரு பெண்ணும் ஒரு பையனும்  காதலித்து வந்தனர் .ஒரு நாள் இருவரும் திருமணம் செய்வது பற்றிபேசினர் .

பெண் சொன்னாள்" நாங்கள் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் ............ திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு எங்க அப்பாகிட்ட பணம் இல்லியே என்ன செய்வது என்று சொன்னாள்.

அதற்கு அந்த பையன் சொன்னான்...

நான் என்ன வரதட்சினையா கேட்டேன் .? உன் அப்பாவின் சம்மதம் தானே கேட்டேன்.....என்றான் .

பிறகு இருவரும் பெண்ணிண் அப்பாவை பார்க்க சென்றார்கள்.........

விசயத்தை பெண்ணின் அப்பாவிற்க்கு தெளிவாக எடுத்து சொன்னார்கள்.........

பெண்ணின் அப்பா சொன்னார் என்னிடம் 1000 ருபாய் மட்டுமே உள்ளது திருமணத்தை எப்படி நடத்துவது என்று சொன்னார்..........

அதற்கு பையன் சொன்னான் 1000ரூபாயே.போதும் அதிலேயே திருமணத்தை நடத்தலாம் நாளைக்கு நீங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்கு வாங்க என்றான்.......

மறுநாள் எல்லாரும் ரெஜிஸ்டராபீஸுக்கு சென்றார்கள் .

பையன் மாமனாரிடம் சொன்னான் நீங்க போய்டு அந்த1000 ரூபாய்க்கும் ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்றான். திருமணத்தை பதிவு செய்தார்கள்.......

எல்லாருக்கும் இனிப்பும்..வழங்கினார்கள்.

திருமண வாழ்க்கை ஆரம்பித்தார்கள......... ஆனால் பையன் விபத்து ஒன்றில் உடனே இறந்து வி்ட்டான்.

அவன் போட்டிருந்த துனியெல்லாம் இரத்தக்கறை அந்த துணிகளை அப்படியே....வைத்துவிட்டு பையனுக்கு இறுதி சடங்கை நடத்தி முடித்தார்கள்.

4-5 நாட்கள் கழித்து அந்த துணிகளை எடுத்து சலவைக்காரிடம் கொடுத்தாள் .அந்த பெண்......

ஆனால் அவனோ... இதை என்னால் துவைக்க முடியாது...இதை எவ்வளவு துவைத்தாலும் இரத்தக்கறை போகாது தூக்கி கிடாசுங்கம்மா......னு சொல்லிட்டு போய்ட்டான்....

அவளோ நான் இந்த துணியை தூக்கி எறிய மாட்டேன்......நானே துவைத்து கொள்கிறேன் அவர் நினைவாக வைத்து கொள்கிறேன் என்றாள்...

முதல் நாள் துவைத்தாள் இரத்தக்கறை போகவில்லை. அன்று இரவு ஒரு கிழவி அந்த பெண்ணின் கனவில் வந்தாள்....

விகாரமா சிரிச்சபடியே கிழவி சொன்னாள்.....அந்த கறை போகாது என்று.

மறுநாள் அந்த பெண் மீண்டும் அந்த துனியை துவைத்தாள். ஆனால் கறை போகவில்லை.

அன்று இரவும் அதே கிழவி கணவில் வந்தாள்...... முதல் நாள் சொன்னதையே மீண்டும் சொன்னாள்....

3வது நாள் அந்த பெண் மீண்டும் துணியை துவைக்க ஆரம்பித்தாள் .யாரோ கதவை தட்டினார்கள் போய் கதவை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி.

கனவில் வந்த கிழவி நின்று கொண்டிருந்தாள்...... கையில் surf excel சோப்பு வைத்திருந்தாள் .

அந்த கிழவி...... கிழவி சொன்னாள்.... சும்மா சோப்புல கறை போகாது .surf excel போடு....... அந்த பெண்ணும் அந்த சோப்பை போட்டு துவைத்தாள் .கறை போய்விட்டது..........

ஆம்..விடாபிடியான கறைக்குsurf execl போடுங்க..

புரியது....இதை படச்சி முடிச்ச உடனே பத்திகினு வருதா எரிச்சல்.

என்ன பன்றது...இதை எனக்கும் ஒருத்தன் post பன்னானே.......அதால நீங்க உங்க வயத்தெரிச்சல  கீழே கமென்ட்ல திட்டுங்க

No comments:

Post a Comment