கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, April 20, 2017

உலக புத்தக தினம் ஏப்ரல் 23

உலக புத்தக தினம் தமிழகம் முழுவதும் ஏப்.23 முதல் புத்தகக் கண்காட்சி

உலக புத்தக தினத்தையொட்டி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் தமிழகம் முழுவதும் 31 இடங்களில் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பொது மேலாளர் தி.ரத்தினசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக புத்தக தின விழா ஏப்ரல் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 31 இடங்களில் ஒரு வார காலத்துக்கு சிறப்புக் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சிகளில் புத்தகங்களின் விலையில் 10 முதல் 50 சதவீத கழிவு வழங்கப்படவுள்ளது.

காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக விற்பனை நடைபெறும்.

கண்காட்சி நடைபெறும் இடங்கள்:

சென்னை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, ஊட்டி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.

வேலூர், சேலம், கோவை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட மைய நூலகங்களிலும்,

அம்பத்தூர், திருமங்கலம், திருநகர் ஆகிய பகுதிகளில் உள்ள கிளை நூலகங்களிலும், திருத்துறைத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம், விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே பூமாலை வளாகம், சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மேலும் தகவல் பெற 044-26258410, 26241288 ஆகிய தொலைபேசி எண்களில் சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment