கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, April 23, 2017

சர்தார்ஜியின் நகைச்சுவைகள்

சர்தார் ஜோக்ஸ்
1 .தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.


சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. 

பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?

2. சர்தாரும் அவர் மனைவியும் விவாகரத்துக்கு மனு கொடுத்தனர்.
நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.

சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.


3 .சர்தார்: (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.


பணியாள்: நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி

சர்தார்: அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.


4. டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

5 .இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். 

மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றிருந் தார்.
கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். 

அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.


6. சர்தார்: (தன் நண்பியிடம்) இரவுக்கு என் வீட்டுக்கு வா. யாரும் இருக்க மாட்டார்கள். (நண்பி அவ்வாறே சர்தாரின் விட்டுக்கு இரவு சென்றார். உண்மையில் யாருமே அங்கு இல்லை. சர்தார் உட்பட)


7. சர்தார் பெருமையாக தன் நண்பரிடம் சொன்னார்.

 என் தாத்தா சாகும் போது அமைதியாக எந்த சத்தமும் போடாமல் பஸ்சில் தூக்கத்திலிருக்கும்போது செத்தார். 

ஆனால் அவர் ஓட்டிக்கொண்டிருந்த பஸ் பயனிகள்தான் அலறிக் கொண்டே செத்தார்கள்"


8.ஒரு சர்தார் டாக்டரிடம் சென்றார். அவர் சிறுநீரை பரிசோதித்த டாக்டர், சில மருந்துகளைக் கொடுத்து, இதை சாப்பிட்டு வாங்க. உங்களூக்கு நீரில் கொஞ்சம் சர்க்கரை இருக்கு. எதுக்கும் மூன்று மாதம் கழித்து சிறுநீரை மறுபடியும் கொண்டுவாங்க பரிசோதித்துப் பார்ப்போம் என்றார். 

மூன்று மாதம் கழித்து மூன்று பெரிய கேணை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு டாக்டர் முன் வைத்தார்.


டாக்டர்: என்ன இவை?


சர்தார்: நீங்கதானே மூன்று மாதம் கழித்து சிறுநீர் கொண்டு வரச்சொன்னீங்க.


9 .சர்தார்: நேற்று ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை.


நண்பர்: ஏன்?

சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது


நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?

சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.

No comments:

Post a Comment