கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, April 10, 2017

சிரிக்க வைத்த குடிமக்களின் ராசிபலன்கள் கற்பனை

*மேஷம்* -

பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒரே ஒரு கட்டிங் சாப்பிட்டால் போதுமானது.

*ரிசபம்* -

குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது.

*மிதுனம்* -

ராவா அடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு நீங்கள் கன்னி ராசி நண்பருடன் டாஸ்மாக்கில் சண்டை போட நேரிடலாம் எனவே இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் போவதை தவிர்க்கவும்.

*கடகம்* -

கட்டிங்கை கரெக்ட்டாகா சாப்பிடும் கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் கட்டிங் சாப்பிடும் போது சைடிஷ்க்கு ஊறுகாய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது.

*சிம்மம்* -

மொடா குடியகார சிம்ம ராசி நண்பர்கள் இன்று கூலிங் பீரை 2 பாட்டில் சாப்பிடுவது உகந்தது. மேலும் பீரில் ஏலக்காய் அல்லது சிறிதளவு பெப்பரை(மிளகு) கலந்து கொள்ளலாம்.

*கன்னி* -

கன்னி ராசி நேயர்கள் குடித்துவிட்டு மனைவியின் அருகில் செல்லாமல் இருப்பது நல்லது.இன்று உங்கள் ராசிக்கு உங்கள் மனைவியிடம் வெளக்கமாறு பிய்யும் வரை அடி வாங்க நேரிடலாம்.

*துலாம்* -

அளவோடு குடிக்கும் துலாம் ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு இன்று நீங்கள் வோட்கா அல்லது ஒயின் அல்லது இது இரண்டையும் மிக்ஸ் பன்னி சாப்பிடுவது நல்லது.

*விருச்சிகம்* -

சைடிஷ்க்கு மிச்சர் சாப்பிடும் விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் சரக்கடிக்கும் போது 7Upஅல்லது Sprite பயன்படுத்தினானால் வாந்தி வரலாம் எனவே மிக்சிங் செய்ய அக்வாபீனா அல்லது அம்மா வாட்டரை கோட்டரில் கலந்து குடிக்கவும்.

*தனுசு* -

தாறுமாறாக குடிக்கும் தனுசு ராசி நேயர்களே குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் பொதுமக்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவதை தவிர்ப்பது நல்லது. யாரிடமாவது வாயில் உதை வாங்க நேரிடலாம்.

*மகரம்* -

இன்று குடிக்காமல் இருப்பது நல்லது. டாஸ்மாக் இருக்கும் திசை நோக்கி செல்வதை தவிர்க்கவும்.

*கும்பம்* -

கும்பலாக குடிக்கும் கும்ப ராசி நேயர்களே இன்று நண்பர் ஒருவர் சரக்கை வாங்கி கொடுக்க நேரிடலாம் எனவே அவசரப்பட்டு உங்கள் பணத்தை செலவு செய்யாதீர்கள்.

*மீனம்*

மானங்கெட்ட மீன ராசி நண்பர்களே ஒசியில் சரக்கடிப்பதை இன்றுடன் மறந்து விடுங்கள். சொந்த காசில் குடிக்க கற்றுக கொள்ளுங்கள்.

*நீரின்றி அமையாது உலகு*

No comments:

Post a Comment