கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, May 27, 2017

பெண்கள் பாதுகாப்புக்கான புதிய ஆப்ஸ் வந்துவிட்டது

"ஆபத்தில் இருப்பவர்களுக்கு உடனடி போலீஸ் உதவி அளிக்கும் நோக்கத்துடன், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., பிரதீஷ்குமாரின் அறிவுரைப்படி, ‘மோபிஸ் இன்னோவேஷன்’ என்ற நிறுவனம், ‘ஜாக்ரதா’ என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது.




இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஜி.பி.எஸ்., வசதியுள்ள ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்போர், ‘ஜாக்ரதா’ மொபைல் ஆப் மூலம் பாதுகாப்பு பெறலாம்.
‘கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து, இந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, பெயர், முகவரி, போன் எண், பிறந்த தேதி அளித்து பதிவு செய்யலாம்.
நம் குடும்பத்தினர் அல்லது வேண்டியவர்கள் என ஐந்து நபர்களின் மொபைல் எண்களை இந்த அப்ளிகேஷனில் பதிவு செய்து கொள்ளலாம்.
விபத்தில் சிக்கினாலோ, தாக்குதலுக்கு உள்ளாகும்போதோ, திருட்டு, வழிப்பறி, அடிதடி ஆகியவற்றை காணும்போதோ, எங்காவது சிக்கிகொண்டாலோ, அப்ளிகேஷனில் இருக்கும் ‘ஹெல்ப் மீ’ என்ற விசையை அழுத்தினால், ஒரே நேரத்தில் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்று விடும்.
இது மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர் இருக்குமிடம், போன் எண் தெரிந்து கொள்ளவும் உதவும். அத்துடன், அவர்கள் மொபைல் எண் பதிவு செய்துள்ள ஐந்து பேருக்கும், தகவல் கிடைத்துவிடும்.
இந்த புகாரின் மீதான நடவடிக்கையை, மேல் அதிகாரிகளிடம் தெரிவிப்பதோடு, பதிவேட்டில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
‘ஜாக்ரதா’ மொபைல் அப்ளிகேஷனை மக்கள் மத்தியில் பிரபலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்"

No comments:

Post a Comment