கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, June 22, 2017

BC, MBC மாணவர்களுக்கு உதவித்தொகை

பி.சி., - எம்.பி.சி., மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பி.சி., - எம்.பி.சி., மாணவ, மாணவியர், கல்வித்உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., - எம்.பி.சி., -டி.என்.சி., ) மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களில், கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு, பெற்றோரது ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை, மாணவர்கள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment