கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, June 21, 2017

பி.இ படிப்புக்கு ரேண்டம் எண் வெளியீடு

என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண்

தமிழகத்தில் 2017-2018-ம் ஆண்டுக்கான என்ஜினீயரிங்(பி.இ.) சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் நடத்த உள்ளது.

அதற்காக பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் 88 ஆயிரத்து 778 பேர் மாணவர்கள். 52 ஆயிரத்து 299 பேர் மாணவிகள்.விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெளியிடும் நிகழ்ச்சி, அண்ணாபல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.

உடனே அனைத்து மாணவர்- மாணவிகளுக்கும் ரேண்டம் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் www.an-n-au-n-iv.edu என்ற அண்ணாபல்கலைக்கழக இணையதளத்திற்கு சென்று அவர்களுக்கான இ-மெயில் மற்றும் ரகசிய எண் ஆகியவற்றை பதிவு செய்தால் அவர்களுக்கு ரேண்டம் தெரியவரும்.

No comments:

Post a Comment